குட்நியூஸ்? ஓய்வு பெறும் முடிவை தள்ளிப்போடுகிறாரா தோனி? உண்மை என்ன? இப்படி ஒரு காரணமா?
சென்னை: ஓய்வு பெறும் முடிவை நேற்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சிஎஸ்கே கேப்டன் தோனி அந்த முடிவை நேற்று அறிவிக்கவில்லை. அவரின் இந்த முடிவிற்கு பின் முக்கியமான ஒரு காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.
சிஎஸ்கே போட்டிகள் எல்லாமே இந்த வருடம் ஐபிஎல் 2023 தொடரில் அதிகம் கவனிக்கப்பட்டது. சிஎஸ்கே போட்டிகள் அதிகம் கவனிக்கப்பட முக்கிய காரணமாக இருந்தது தோனியின் ஓய்வு. இது தோனியின் கடைசி தொடராக இருக்கும் என்று கருதப்பட்டதால் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் சிஎஸ்கே போட்டிகளை காண ஒவ்வொரு போட்டிக்கும் வந்தனர்.
இந்த தொடர் முடிந்ததும் தோனி ஓய்வை அறிவிப்பார். கடைசி மேட்சில் ஓய்வை அறிவிப்பார். அல்லது மேட்ச் முடிந்ததும் ஓய்வு குறித்து போஸ்ட் போடுவார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை.

மாறாக முன்பு சொன்னது போலவே ஓய்வு குறித்து இப்போது முடிவு எடுக்க மாட்டேன். ஓய்வு குறித்து முடிவு எடுக்க 6-7 மாதங்கள் உள்ளன. அதனால் அதை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று கூறினார். கிட்டத்தட்ட தோனி தனது ஓய்வு முடிவை கைவிட்டு உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
அவர் ஓய்வு பெறவில்லை என்றால் இந்த 6-7 மாதங்கள் என்ற கருத்தை சொல்லவே மாட்டார். ஆனாலும் அவர் சொல்லி இருக்கிறார் என்றால் ஓய்வு பெறுவதில் விருப்பம் இல்லை என்றே கருதப்படுகிறது. தோனியின் இந்த நிலைப்பாட்டிற்கு பின் என்ன காரணம் என்று சிஎஸ்கே வட்டாரத்தில் விசாரித்தோம்.
என்ன சொன்னார்கள்? : அவர்கள் நம்மிடம் குறிப்பிட்ட சில விஷயங்களை கூறினர். அதன்படி தோனி தனது பிட்னஸ் குறித்து யோசிக்கிறார். அவருக்கு முட்டியில் காயம் உள்ளது. அதோடுதான் அவர் இந்த சீசனை ஆடினார். இனி அவர் காயத்தில் இருந்து வந்து மீண்டும் அடுத்த சீசன் ஆட வேண்டும்.
இதற்கு கடினமான பயிற்சிகளை செய்ய வேண்டும். அதோடு அவர் பிட்னஸ் குறித்து மிகவும் மெனக்கிட வேண்டி இருக்கும். ஆனால் இதெல்லாம் மீண்டும் செய்வது கடினம். முழு பிட்னஸ் குறித்து தெரிய 6-7 மாதங்கள் ஆகும் என்பதால் இப்போது முடிவு எடுக்க வேண்டாம் என்று தோனி இருக்கிறாராம்.
இன்னொரு பக்கம் சிஎஸ்கே நிர்வாகம் தோனியை இம்பாக்ட் வீரராக வைத்துக்கொண்டு வேறு ஒருவரை கேப்டனாக கொண்டு வர திட்டமிட்டுள்ளதாம். தோனி வெறுமனே அடுத்த சீசனில் கேப்டனுக்கு ஆலோசனை வழங்கவும், புதிய கேப்டனுக்கு பயிற்சி கொடுக்கவும் பயன்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. இதனால்தான் தோனி இந்த சீசனில் ஓய்வு அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சிஎஸ்கே வெற்றி: குஜராத் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணி அபாரமாக வென்று 2023 ஐபிஎல் சாம்பியன் ஆகி உள்ளது. 2023 ஐபிஎல் சீசன் திருவிழா போல நடந்து முடிந்துள்ளது. பல திருப்பங்களுடன், எதிர்பாராத வெற்றி தோல்விகளுடன் இந்த சீசன் நடந்து முடிந்துள்ளது. 2023 ஐபிஎல் சீசன் சாதாரண ஐபிஎல் என்பதை தாண்டி சிஎஸ்கே அணிக்கு மிகவும் ஸ்பெஷல் ஐபிஎல் என்றுதான் கூற வேண்டும்.
நேற்று சிஎஸ்கே டாஸ் வெல்ல குஜராத் முதலில் பேட்டிங் செய்தது. 39 பந்துகள் பிடித்த சாகா 54 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் கில் 20 பந்தில் 39 ரன்கள் எடுத்தார், ஆனால் அதிரடி குறையாமல் ஆடிய தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் 96 ரன்களை 47 பந்துகளில் எடுத்தார். 8 சிக்ஸ், 6 பவுண்டரி என்று சிஎஸ்கே அணியை இவர் புரட்டி எடுத்தார். சிஎஸ்கேவில் கான்வே 47, ரஹானே 27 எடுக்க கடைசியில் டேஜா - துபே இருவரின் ஆட்டமும் நேற்று சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இருப்பினும், ஜடேஜா ( 6 பந்தில் 15 ) மற்றும் சிவம் துபே ( 21 பந்தில் 32* ) எடுத்தனர்.இருவரின் ஆட்டம் சிஎஸ்கேவின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications