Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"குருமூர்த்தி" கொளுத்தி போட்ட தீ.. "அவர்"தான் காரணமாமே.. அப்ப எடப்பாடி பழனிசாமி?தடதடக்கும் கமலாலயம்

குருமூர்த்தி அண்ணாமலையை அட்டாக் செய்து பேச என்ன காரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட துக்ளக் விழா, நேற்று எதிர்பார்த்ததுபோலவே சில தீப்பொறிகளுடன் நடந்து முடிந்துள்ளது.. அந்த தீப்பொறிதான், இப்போது தமிழக பாஜகவுக்குள் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளதாம்.

பாஜக தலைவர் அண்ணாமலை, "இந்தி திணிப்பை எப்போதும் எதிர்ப்போம்" என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார்.. இந்த கருத்துக்கு, நேற்று நடந்த துக்ளக் பத்திரிகையின் 52-வது ஆண்டு நிறைவு விழாவில் பேசிய அதன் ஆசிரியர் குருமூர்த்தி அதற்கு சரியான பதிலடியை தந்தார்.

"அண்ணாமலையின் அந்த பேச்சு எனக்குப் பிடிக்கவில்லை" என்று என்று வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்...

 நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டிருக்கும் அந்த விழாவில் அண்ணாமலைக்கு எதிராக இப்படி குருமூர்த்தி பேசியது அண்ணாமலைக்கு கொஞ்சம் ஷாக்தானாம்.. அதேபோல, அண்ணாமலையின் ஆதரவாளர்களும் குருமூர்த்தி பேச்சை ரசிக்கவில்லையாம். காரணம், மோடி - அமித்ஷாவின் நெருங்கிய மனசாட்சி என்று கருதப்படுபவர் நிர்மலா சீதாராமன்தான்.. நிர்மலா மூலம் டெல்லிக்கு அண்ணாமலைக்கு எதிராக மெசேஜ் பாஸ் செய்கிறாரா குருமூர்த்தி? என்கிற சந்தேகமும் அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது...

 குருமூர்த்தி கமெண்ட்

குருமூர்த்தி கமெண்ட்

இது குறித்து, அண்ணாமலையிடம் அவரது ஆதரவாளர்கள் பலரும் நேரடியாகவே கேட்டுவிட்டார்களாம். அதற்கு அண்ணாமலை, "அவரது பேச்சுக்கெல்லாம் முக்கியத்துவம் தரவேண்டாம்... அவருக்கும் கட்சிக்கும் என்ன சம்மந்தம்? விட்டுத்தள்ளுங்க" என்ற ரீதியில் கமெண்ட் பண்ணாராம்.. எனினும், அண்ணாமலை மீது குருமூர்த்திக்கு ஏதேனும் கோபம் இருக்கிறதா? அல்லது மாநில தலைவருக்கு எதிராக அவர் பேச வேண்டிய அவசியம் என்ன? என்று பாஜக நிர்வாகிகள் தரப்பில் நாம் விசாரித்தோம். அவர்கள் சொன்னதாவது:

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

"அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியிடம் நெருக்கமாக இருக்கிறார் அண்ணாமலை. அதிமுகவுடன் கூட்டணி என்றால் அது எடப்பாடி தலைமையிலான அதிமுகவுடன் தான் இருக்க வேண்டும் என்பது அண்ணாமலையின் விருப்பம்... அதேசமயம், சசிகலாவின் நலன் விரும்பியாக இருக்கிறார் குருமூர்த்தி. பாஜகவின் தேசிய தலைமையின் ஆதரவைப் பெற சசிகலா பல சோர்ஸ்களை வைத்திருக்கும் நிலையில், அந்த சோர்ஸ்களில் குருமூர்த்தியும் ஒருவர்.

 சசிகலா - அதிமுக

சசிகலா - அதிமுக

சசிகலாவுக்கு எதிரான மனநிலையில் இருந்த குருமூர்த்தி, சிறையில் இருந்து சசிகலா விடுதலையானதற்கு பிறகு எதிர்ப்பு மனநிலையை குறைத்துக் கொண்டார்... ஒரு கட்டத்தில், வீடு தீப் பிடித்து எரியும் போது தீ-யை அணைக்க சாக்கடை நீரை கூட பயன்படுத்தலாம் என பாஜகவின் வெற்றிக்கு சசிகலா அவசியம் என்பது போல பேசினார் குருமூர்த்தி... அதாவது, சசிகலாவை அதிமுகவுக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என முயற்சித்தார். அந்த வகையில், சசிகலாவுக்காக பாஜக தலைமையிடம் பேசி வருகிறார் குருமூர்த்தி.

குருமூர்த்தி

குருமூர்த்தி

ஆனால், அதிமுகவுக்குள் சசிகலாவை நுழைய விடக்கூடாது என்கிற எடப்பாடி பழனிச்சாமியின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் டெல்லியின் ஆதரவு சசிகலாவுக்கு கிடைத்து விடக்கூடாது என தடுத்து வருபவர் அண்ணாமலை. இதனை அறிந்த குருமூர்த்தி, அண்ணாமலையை ஒருமுறை சந்தியுங்கள் என சசிகலாவுக்கு யோசனையையும் தெரிவித்தார். அதன்படி அண்ணாமலையை சந்திக்க சசிகலா தரப்பில் தேதி கேட்டபோது, தேதி கொடுக்கவில்லை.

 ரகசியங்கள் - சீக்ரெட்

ரகசியங்கள் - சீக்ரெட்

ஆக, சுருக்கமாக சொல்வதானால், சசிகலாவுக்காக குருமூர்த்தி எடுத்த முயற்சிகளை எடப்பாடிக்காக தடுத்தவர் அண்ணாமலை என்கிற அரசியல் இதில் உண்டு. இந்த கோபம் தான் அண்ணாமலைக்கு எதிராக குருமூர்த்தியை பேச வைத்திருக்கிறது" என்று என்று ரகசியங்களை விவரிக்கிறார்கள் தமிழக பாஜகவினர்... எப்படியோ, அதிமுக, திமுகவுக்குள் இருந்த பூசல்கள், இப்போது தமிழக பாஜகவிலும் வெடித்து கிளம்பி விட்டது.. அடுத்து என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை.. பார்ப்போம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+