சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நீயே கழட்டி தந்துடு.. 12 மணி நேரம் டைம்".. கசந்து போன காதல்.. பாடிபில்டர் உருக்கமான வீடியோ...!

காசிமேடு போலீஸ்காரர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற விசாரணை நடக்கிறது

Google Oneindia Tamil News

சென்னை: போலீஸ்காரர் ஒருவரின் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.. 5 மாதத்தில் கசந்த காதலில், அப்படி ஒரு முடிவினை போலீஸ்காரர் மதன் எடுத்துள்ளார்.

சென்னை காசிமேடு பழைய அமராஜ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் மதன்.. 27 வயதாகிறது.. ஊர்க்காவல் படை வீரர்... உடற்பயிற்சியின் மீது ஆர்வம் கொண்டவர்.. போலீஸ் பணியில் இருந்தாலும் பாடி பில்டரும்கூட..

மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்றுள்ளார்... அதே பகுதியை சேர்ந்த ஹேமலதா என்ற பெண்ணை 5 வருடமாக காதலித்துள்ளார்.. 25 வயதான ஹேமலதாவும், மதனை உயிருக்கு உயிராக நேசித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் இவருக்கும் திருமணம் நடந்துள்ளது... தம்பதி இருவரும் தனியாக ஒரு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

தாயும் மகளும் சேர்ந்து கோடியில் மோசடி.. ஏர்ப்போர்ட்டில் வைத்து காப்பு மாட்டிய போலீஸ் - நடந்தது என்ன?தாயும் மகளும் சேர்ந்து கோடியில் மோசடி.. ஏர்ப்போர்ட்டில் வைத்து காப்பு மாட்டிய போலீஸ் - நடந்தது என்ன?

 கசந்த காதல்

கசந்த காதல்

ஆனால், கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலேயே இருவருக்கும் இடையே தகராறு வெடித்தது.. கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை வந்து கொண்டே இருந்தது.. இதனால், ஹேமலதா, தனக்கு விவாகரத்து வேண்டும் என்று மதனிடம் கேட்டதாக சொல்லப்படுகிறது.. இதை மதன் கொஞ்சமும் எதிர்பார்க்காத நிலையில், நொறுங்கி போய்விட்டார்.. ஒருகட்டத்தில், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார்.. அதன்படி, மதன் வீடியோ ஒன்றை ஹேமலதாவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

 கழட்டி தந்துவிடு

கழட்டி தந்துவிடு

அந்த வீடியோவில், "நீ கேட்டதை நான் எதிர்பார்க்கவில்லை.. ஆனால், நான் உயிரோடு இருக்கும்வரை விவாகரத்து கொடுக்க மாட்டேன்... நான் இருப்பதால் தானே உன் படிப்பிற்கு பிரச்சினை... இனி என்னால் உன் படிப்பிற்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது... உன் அம்மா வீட்டில் நீ எப்படி சந்தோஷமாக இருந்தியோ, அப்படியே நீ சுதந்திரமாக இருக்கலாம். நான் கேட்ட தாலியை இன்னும் 12 மணி நேரத்தில் நீயே கழட்டி கொடுத்துவிடு. ஏனென்றால் அந்த தாலியை கழட்டும் போது நான் இருக்க மாட்டேன்" என்று உருக்கத்துடன் பேசியிருந்தார்.

ராயபுரம்

ராயபுரம்

உண்மையிலேயே அந்த வீடியோவை, ஹேமலதாவிற்கு அனுப்பியபிறகு மதன் தூக்குப் போட்டு கொண்டுள்ளார்.. நீண்ட நேரமாக மதன் படுக்கை அறையிலிருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த ஹேமலதாவின் உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது அவர் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.. அவரை மீட்டு ராயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், டாக்டர்கள் எவ்வளவோ முயற்சித்தும் மதனை காப்பாற்ற முடியவில்லை.. சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.. இதுபற்றி காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மதனின் உடலை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்து, அவரது செல்போன் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

 போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம்

அவர் யாரிடம் கடைசியாக பேசினர், சந்தேகப்படும்படியான நபர்கள் உள்ளனவரா என்று தீவிர விசாரணை நடக்கிறது.. இதனிடையே, மதனின் உடலை கேட்டு மனைவி ஹேமலதாவின் உறவினர்கள் ஒருபக்கமும், மதனின் உறவினர்கள் மறுபக்கமும் என இரு தரப்பினரும் போலீஸ் நிலையத்தில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்... மதனின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவர்களது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்...

 உருக்கம் வீடியோ

உருக்கம் வீடியோ

போஸ்ட் மார்ட்டத்துக்கு பிறகு, சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் மதனின் உடல் அவரது மனைவியிடம்தான் ஒப்படைக்கப்பட வேண்டும், அவர் வீட்டில் 1 மணி நேரம் வைத்திருந்து சடங்குகள் செய்து விட்டு, அதன்பிறகு மதனின் பெற்றோரிடம் உடலை ஒப்படைக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் சொன்னார்கள்.. இதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்... எனினும், மதனின் அந்த உருக்கமான வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டே இருக்கிறது.

English summary
why did kasimedu police take this sudden decision and chennai police investigation is going on it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X