பிரம்மாண்டமான கட்சி.. வருது பாருங்க.. எடப்பாடி சொல்லி 1 மாசம் ஆகப்போகுது.. ஒருத்தரையும் காணோமே
சென்னை: ஸ்டாலின் அவர்களே.. பிரமாதமான கட்சி எங்கள் கூட்டணிக்கு வரப்போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்.. எடப்பாடி பழனிசாமி சொல்லி ஒரு மாதம் ஆகப்போகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமியின் அதிமுக உடன் கூட்டணி வைக்க இதுவரை எந்த பெரிய கட்சியும் வெளிப்படையாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
காட்டுமன்னார் கோவில் பகுதியில் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் பேசுகையில், விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு.. அனுமதி அளிக்கப்படுவதில்லை.. திருச்சியில் விசிக மாநாட்டிற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.. விசிகவின் கொடிக்கம்பம் நடுவதைத் தடுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்த கூட்டணியில் இருக்க வேண்டும்?

இந்த அவமானப்பட்டுமா திமுக உடனான கூட்டணியில் தொடர வேண்டும்? சிந்தித்து பாருங்கள்.. அதிமுகவைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்போம். கூட்டணி என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு அமைப்பது சரியாக இருக்கும்.
அடுத்து பாருங்க.. ஒரு பெரிய கட்சி எங்க கூட்டணிக்கு வரப்போகிறது.. பிரம்மாண்டமான கட்சி.. எதிர்பார்த்துக்கொண்டு இருங்கள்.. வருவதை பாருங்கள்.. ஸ்டாலின் அவர்களே.. பிரமாதமான கட்சி எங்கள் கூட்டணிக்கு வரப்போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்.. நாங்கள் 234 தொகுதிகளில் 230 தொகுதிகளில் வெல்வோம். அதோடு தனித்து ஆட்சி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
புதிர் போட்ட எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி கூறிய கட்சி எது என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் பாஜக கூட்டணிக்கு காங்கிரஸ் வராது. விசிக, சிபிஎம்க்கு இப்போதுதான் எடப்பாடி அழைப்பே விடுத்துள்ளார். அதனால் அவர்கள் இல்லை. அமமுக கூட்டணியில் உள்ளது. இது போக நாம் தமிழர் - தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே உள்ளது.
இதில் நாம் தமிழர் பாஜகவை எதிர்க்கும் கட்சி. ஆனால் நாம் தமிழர் - பாஜக இடையே கூட்டணி உருவாக போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் சீமான் நடத்திய மீட்டிங் ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணியில் சீமானை இழுப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறதாம். பாஜகவின் ஒரு லாபி இதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறதாம். அதிமுக கூட்டணியில் இந்த முறை பாஜக கிட்டத்தட்ட 100+ இடங்களை பெற திட்டமிட்டு உள்ளதாம். ஆம்.. அதாவது 100+ இடங்களை பெற்றுவிட்டு அதில் சிலவற்றை தனது கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளார்களாம். அதாவது அதிமுக சில இடங்களை கூட்டணி கட்சிக்கு கொடுத்தால்.. பாஜகவும் கூடுதல் இடங்களை வாங்கி அதை டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு பிரித்து கொடுக்கும் திட்டத்தில் இருக்கிறதாம்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும். மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்ததற்கு கடந்த காலங்களில் நிறைய உதாரணங்கள் உள்ளன என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார். இதனால் அந்த கட்சி நாம் தமிழரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம்
இன்னொரு பக்கம் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அதிமுக உடன் செல்கிறதா என்பதும் கேள்விதான். ஆனால் விஜய் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்துவிட்டார். இது எடப்பாடிக்கு ஏற்றதாக இருக்காது. எடப்பாடி தான்தான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லிக்கொள்கிறார். இன்னொரு பக்கம் அவர் பாஜக உடன் சேர்வாரா என்பது சந்தேகம். ஏனென்றால் அவர்கள்தான் விஜயின் கொள்கை எதிரி. இதனால் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிடும் அந்த பிரம்மாண்ட கட்சி எது என்ற கேள்வி எழுந்துள்ளது.
எடப்பாடியை யாரும் சீண்டவில்லை?
ஆனால் எடப்பாடி பழனிசாமியின் அதிமுக உடன் கூட்டணி வைக்க இதுவரை எந்த பெரிய கட்சியும் வெளிப்படையாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எடப்பாடி அழைப்பு விடுத்து 1 மாதம் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை அதிகாரபூர்வமாக எடப்பாடி உடன் பேச்சுவார்த்தை நடத்த யாரும் தயாராக இல்லை.
தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கூட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியைச் சந்திக்க தீவிரமாக முயன்று வருகிறார். விஜயின் இந்த முயற்சி தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சந்திப்புக்கு நேரம் ஒதுக்கலாமா என்பது குறித்து ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் தங்கள் கட்சி மூத்த தலைவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜயுடன் கூட்டணி வைக்க சின்ன கட்சிகள் கூட ரெடியாக இல்லை. அப்படி இருக்க.. பெரிய கட்சியான நாம் விஜயுடன் சென்றால் சரியாக இருக்காதே. அவரை சந்திக்கலாமா வேண்டாமா என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ராகுல் காந்தி - சோனியா காந்தி ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. விஜயும் அதிமுக உடன் கூட்டணி வைக்க ரெடியாக இல்லாத காரணத்தால்.. அதிமுகவுடன் இணையும் அந்த பிரம்மாண்ட கட்சி எது என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications