இதுதான் ஓபிஎஸ்..சத்தமேயில்லை..ஒருத்தரும் எதிர்பார்க்கல..எடப்பாடி பழனிசாமிக்கு திமுக ஆதரவு? பலே பாஜக
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான காய்களை ஓபிஎஸ் தரப்பு நகர்த்த துவங்கியிருப்பதாக தெரிகிறது.. இதுதொடர்பான சில தகவல்கள் நமக்கு பிரத்யேகமாக கிடைத்திருக்கின்றன.
சென்னையில் சமீபத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.. அப்போது அதே தேதியில் கோவையில் தன்னுடைய ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருந்தார் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்.

கோவை ஏர்போர்ட்: நான் சில விஷயங்களை அவிழ்த்துவிட்டால் எடப்பாடி பழனிசாமி திகார் ஜெயிலுக்குத்தான் போக வேண்டும் என்று ஓபிஎஸ் கூறியிருந்தார்.. உடனே இதற்கு மறுநாளே கோவை ஏர்போர்ட்டில், இதற்கு பதிலடி தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அவருக்கு தெரிந்த ரகசியங்களை வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்று கேட்டிருந்தார்.
எடப்பாடியை திகாருக்கு அனுப்புவதாக சொன்ன ஓபிஎஸ்ஸின் மிகுந்த பரபரப்பை தந்திருந்தது.. அதிமுக ஆட்சியில் தன்னை சாட்சியாக வைத்துக்கொண்டு, எடப்பாடி பழனிசாமி சில காரியங்களை செய்ததாகவும், அது தொடர்பான உள் ரகசியங்களும் தனக்கு தெரியும் என்பதால்தான் ஓபிஎஸ் இப்படி பேசியிருக்கலாம் என்றும் யூகங்கள் கிளம்பின.
ஓபிஎஸ்: குறிப்பாக, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு, நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடுகள் போன்றவற்றை மனதில் வைத்தே ஓபிஎஸ் அப்படி பேசியிருக்கலாம் என்றார்கள்.
இன்னொரு காரணமும் சொல்லப்பட்டது.. அதாவது, கூட்டணியை அதிமுக முறித்து கொண்டுள்ள நிலையில், மீண்டும் எடப்பாடியை தங்கள் வழிக்கு கொண்டுவரவே, பாஜக தரப்பு ஓபிஎஸ்ஸை இப்படி பேச வைத்திருக்கலாம் என்றார்கள்.. இப்படிப்பட்ட சூழலில்தான், நேற்றைய தினம் திருச்சிக்கு வந்திருந்தார் பிரதமர் மோடி..
ஏர்போர்ட்: ஏர்போர்ட்டிலேயே பிரதமரை தனியாக சந்திக்க ஓபிஎஸ்சுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும், விமான நிலையத்தில் மோடியை சந்திக்கும் விஐபி வரிசையில் தான் ஓபிஎஸ்சுக்கு அனுமதி கிடைத்திருக்கிறது என்றும் நாம் நேற்று சொல்லியிருந்தோம். அதன்படியே சந்திப்பு நடந்திருக்கிறது.
ஆனால், ஓரிரு நிமிட சந்திப்பில், என்னத்த பேசிட முடியும் என்பதால், தனியாக சந்திக்க நேரம் வேண்டும் என்கிற கேட்க ஓபிஎஸ் யோசித்ததுடன், அதன்படியே அந்த கோரிக்கையையும் பிரதமர் தரப்பில் வைத்திருக்கிறார். அப்போது மோடி, நேரம் கேட்டு கடிதம் கொடுங்கள், சந்திக்க நேரம் ஒதுக்குகிறேன். சந்திக்கலாம்" என்று சொல்லிவிட்டு போனாராம்.
எடப்பாடி பழனிசாமி: அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிச்சாமி தொடர்பான ஒரு கடிதத்தையும் தயார் செய்து, கையோடு கொண்டு சென்றிருந்தாராம் ஓபிஎஸ்.. நேற்றைய தினம், அந்த கடிதத்தை மோடியிடம் கொடுத்துள்ளார் ஓபிஎஸ். அதில், எடப்பாடிக்கு எதிராக நடக்கும் வழக்குகளில் அவருக்கு சாதகமாக திமுக அரசு இருப்பதாக சுருக்கமாக சுட்டிக்காட்டியுள்ளாராம்.
டெல்லி சென்றதும் நிச்சயம் இந்த கடிதத்தை மோடி படித்துப் பார்ப்பார் என்றும், சந்திக்க நேரம் தருகிறேன், டெல்லிக்கு வாருங்கள் என்று மோடி சொல்லியிருப்பதால் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு ஓபிஎஸ் கடிதம் அனுப்பவிருக்கிறாராம்.
மோடியின் அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்து, அவரை சந்திக்கும்போது எடப்பாடிக்கும் திமுக அரசுக்குமான மறைமுக தொடர்ப்பு பற்றியும், அவரது ஊழல்கள் குறித்தும் விரிவாக எடுத்துச் சொல்ல ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளாராம்.
கும்பாபிஷேகம்: அந்தவகையில், பொங்கல் முடிந்ததும் அல்லது ராமர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததும் மோடியை சந்திக்க ஓபிஎஸ்சுக்கு நேரம் கொடுக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பில் ஓபிஎஸ் உள்ளாராம்.
பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்திக்கும்போது, பாஜகவுடனான கூட்டணியை ஓபிஎஸ் உறுதி செய்து விடுவார் என்றும், இரட்டை இலை சின்னம் எடப்பாடி தரப்புக்கு சென்றுவிடாமல் இருப்பதற்கான சில முயற்சிகளையும் டெல்லியில் எடுத்துவிட்டு வருவார் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் ஓபிஎஸ்சுக்கு நெருக்கமானவர்கள். ஆக மொத்தம், எடப்பாடியை திகார் ஜெயிலுக்கு அனுப்புவதாக ஓபிஎஸ் பேசியிருந்ததற்கு பின்னால், பல விஷயங்கள் ஒளிந்திருப்பதாக சொல்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications