பீகார், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் காலி.. மோடி தன்னை கடவுளின் பிறவி என்று கூற "இதுதான்" காரணமா? போச்சு
சென்னை: பாஜகவில் இருப்பவர்களே மோடியின் இந்த பேச்சை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பாஜக தோல்வி அடையும் என்று மோடிக்கு தெரிந்துவிட்டது. அந்த பதற்றத்தில் இப்படி எல்லாம் உளறுகிறார். பாஜக 70-80 இடங்களை கண்டிப்பாக இழக்கும். மெஜாரிட்டி கிடைக்காது என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் மூன்று கட்டத் தேர்தலில் முறையே 66.1, 66.7 மற்றும் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 தேர்தலை விட இதுவரை வாக்குப்பதிவு குறைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் 4ம் கட்ட தேர்தல் 9 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் நடந்தது. ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 67.25 சதவிகித வாக்குகள் பதிவானது.

கடந்த 3 நாட்களுக்கு முன் 6 மாநிலங்களில் 5ம் கட்ட தேர்தல் நடந்தது. இதில் காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இதில் 60.48% வாக்குகள் பதிவாகி உள்ளது. இனி 6ம் மற்றும் 7ம் கட்ட தேர்தல்கள் நடக்க உள்ளன. மே 25ம் தேதி 6ம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது.
பேட்டி: இந்த நிலையில் லோக்சபா தேர்தல் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் அளித்த பேட்டியில், கர்நாடகாவில் பாஜகவின் நம்பர் பாதி குறையும். பீகாரில் நிதிஷ் குமார் பிரச்சாரம் செய்யவில்லை, 1 ரோடு ஷோ தவிர வேறு இடங்களில் பிரச்சாரம் செய்யவில்லை. பீகாரில் 37 இடங்களில் 40ல் ஜெயித்தது. அங்கே பாதிக்கு பாதிதான் பாஜக ஜெயிக்கும். அங்கே பெரிய சறுக்கல். ராஜஸ்தானில் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வளர்ந்தது. அங்கே பாஜக சரியும். குஜராத், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வளர்ந்துள்ளது. அங்கே பாஜக சரிவு.
மகாராஷ்டிராவில் பாஜக கண்டிப்பாக சரியும். பாஜக இதன் மூலம் 70-80 இடங்களை கண்டிப்பாக இழக்கும். மிக மோசமாக சரிவை சந்திக்கும். 80 இடங்கள் வரை கண்டிப்பாக பாஜக சரிவை சந்திக்கும். தன்னை கடவுள் என்று மோடி சொல்வது இதனால்தான். மோடி பெரிய அளவில் அச்சத்தில் இருக்கிறார். மோடி பயத்தில் இப்படி எல்லாம் பேசுகிறார். பாஜகவில் இருக்கும் மூளை உள்ளவர்கள் கூட இதை எதிர்ப்பார்கள்.
பாஜகவில் இருப்பவர்களே மோடியின் இந்த பேச்சை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பாஜக தோல்வி அடையும் என்று மோடிக்கு தெரிந்துவிட்டது. அந்த பதற்றத்தில் இப்படி எல்லாம் உளறுகிறார். பாஜகவில் நான் சொன்ன கணக்குப்படி 70-80 இடங்களை கண்டிப்பாக இழக்கும். மிக மோசமாக சரிவை சந்திக்கும். மெஜாரிட்டி எப்படி கிடைக்கும்.
மோடி தன்னை கடவுள் என்கிறார். என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்; பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. சிலர் இதற்கு எதிராக பேசலாம். ஆனால், நான் இதை முழுமனதாக நம்புகிறேன். என் தாயார் உயிரோடு இருக்கும்வரை, இந்த உலகிற்கு என் தாய் மூலம்தான் வந்தேன் என நம்பிக்கொண்டிருந்தேன் என்கிறார். இதை எல்லாம் தோல்வி பயத்தில் மோடி சொல்லிக்கொண்டு இருக்கிறார், என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications