கில்லி விஜயை இடுப்பு கிள்ளியாக்கிய பாஜக.. அண்ணாமலையால் அரண்டு கிடக்கும் நீலாங்கரை.. இப்படி ஆகிடுச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை சொன்ன கருத்துக்கள் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளன. தமிழக அரசியலில் அவரின் கருத்துக்கள் விவாதங்களை ஏற்படுத்தியதோடு.. தமிழக வெற்றிக் கழகம் வட்டாரத்திலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் ஊழல் செய்யப்பட்டதாக நேற்று பாஜக போராட திட்டமிட்டு இருந்தது. இதையடுத்து அண்ணாமலை உட்பட பாஜக நிர்வாகிகள் பலரும் கைது செய்யப்பட்டனர். இதை தமிழக வெற்றிக் கழகம் கிண்டல் செய்து இருந்தது. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அண்ணாமலை கருத்து

பாஜக போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக வெற்றிக் கழகம், பாஜக நாடகமாடுவதை விட்டுவிட்டு மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தது. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அண்ணாமலை, தமிழக வெற்றிக் கழகத்தை முதலில் களத்திற்கு வர சொல்லுங்க.. ஸ்கூல் பசங்க மாதிரி அரசியல் செஞ்சுட்டு இருக்காங்க. சினிமா சூட்டிங்கில் இருந்து அரசியல் செய்வாங்களா.. சினிமா சூட்டிங்கில் இருந்து கொண்டு, பாட்டு பாடிக்கொண்டு நடிகைகளின் இடுப்பை கிள்ளிக்கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறார் விஜய். திரும்ப எனக்கும் பேசத் தெரியும். தவெகவும் ஒரு லிமிட்டை கிராஸ் செய்யக்கூடாது.

Why did TVK Vijay not reply to BJP Annamalai comment on his politics yet

நானும் தமிழக வெற்றிக் கழகத்தை மரியாதையாக தான் பேசிக்கொண்டிருக்கிறேன். அறிக்கை விடும் போது அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். நான் என்ன விஜய் மாதிரி டேன்ஸ் ஆடிக்கொண்டு நடிகைகளின் இடுப்பை கிள்ளிக்கொண்டு அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறேனா.. நான் களத்தில் இருந்து போராடிக்கொண்டு, பேசிக்கொண்டு இருக்கிறேன். இது என்ன வொர்க் பிரம் ஹோம் அரசியலா செய்கிறார்., என்று கிண்டலடித்து இருந்தார்.

திணறும் விஜய் டீம்

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை சொன்ன கருத்துக்கள் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளன. தமிழக அரசியலில் அவரின் கருத்துக்கள் விவாதங்களை ஏற்படுத்தியதோடு.. தமிழக வெற்றிக் கழகம் வட்டாரத்திலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

ஏனென்றால் இத்தனை நாட்கள் பாஜகவை நேரடியாக விஜய் தாக்கவில்லை. அண்ணாமலை பற்றி எல்லாம் விஜய் பேசவே இல்லை. அதிகபட்சம் பாயசம், பாசிசம் என்பார். மகளிர் தினம் அன்று திமுகவை கூட கட்சி பெயரை சொல்லி.. விஜய் விமர்சனம் செய்துள்ளார். ஆனால் பாஜகவை அப்படி விஜய் செய்ததே இல்லை.

இப்படிப்பட்ட நிலையில் அண்ணாமலை மொத்தமாக இறங்கி அடித்து விஜயை கிண்டலடித்து உள்ளார். கில்லி விஜயை இடுப்பு கிள்ளி விஜய் என்று டிரெண்ட் செய்யும் அளவிற்கு பாஜகவினர் இறங்கி அடித்ததை பார்த்து தமிழக வெற்றிக்கழகம் திணறிப்போய் உள்ளதாம்.

இதற்கு தவெக ஐடி விங் பதிலடியை தந்தாலும்.. கட்சியின் டாப் தலைவர்கள் கப் சிப் என்று உள்ளனர். முக்கியமாக முதல்முறை நேரடியாக பெரிய விமர்சனத்தை எதிர்கொண்டு உள்ள விஜய்.. என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக இருக்கிறார். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அறிக்கையாவது வெளியிடும் விஜயின் நீலாங்கரை வீடு எந்த பதிலும் இல்லாமல் மௌனமாக இருக்கிறது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+