நள்ளிரவில் நாய்கள் குரைப்பது ஏன் தெரியுமா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே! புது தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பகலில் எந்த வம்புக்கும் போகாமல் கிடக்கும் நாய்கள் கூட இரவு நேரத்தில் சொல்லி வைத்தாற் போல் வண்டிகள், வாகனங்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்களை மறித்து குரைத்து மிரட்டி விட்டுவிடும். ஆள் நடமாட்டம் இருக்கும் நேரத்தில் இப்படி என்றால், யாருமே இல்லாத நேரத்தில் கூட திடீரென நாய்கள் ஊளையிடுவதையும், குரைப்பதையும் கிட்டத்தட்ட அனைவருமே கவனித்து இருப்போம். அது ஏன் என்பதை இங்கே பார்க்கலாம்.

இரவு நேரங்களில் நடந்தோ, பைக்குகளிலோ சென்றால் சில சமயம் தெரு நாய்கள் பீதியை கிளப்பிவிடும். பின்னாலேயே துரத்துவது.. கடிப்பது போல வருவது.. என வாகன ஓட்டிகளை நடு நடுங்க வைத்துவிடுகிறது. நகரம், கிராமம் என பாகுபாடு இல்லாமல் எல்லா நாய்களும் சொல்லி வைத்தாற்போல இரவு வந்துவிட்டால், தனது சுபாவத்தையே மாற்றிவிடும்.

dog weird trend

பகலில் எந்த வம்புக்கும் போகாமல் கிடக்கும் நாய்கள் கூட இரவில், கிராஸ் செய்பவர்களை மிரள வைத்துவிடும். ஆள் நடமாட்டம் இருக்கும் நேரத்தில் இப்படி என்றால், யாருமே இல்லாத நள்ளிரவில் திடீரென நாய்கள் ஊளையிடுவதையும், குரைப்பதையும் கிட்டத்தட்ட அனைவருமே கவனித்து இருப்போம். ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது திடீரென இப்படி நாய்கள் குரைப்பது, தூக்கத்தையும் கெடுத்துவிடும்.

தெருவில் எதுவும் ஆள்நடமாட்டம் இருக்குமோ என பார்த்தால் ஒரு ஈ, காக்கா கூட இருக்காது. ஆனால் நாய்கள் இஷ்டத்திற்கு அவ்வப்போது குரைப்பதும், ஊளையிடுவதுமாக பாடய்பாடுத்தி விடும். தெருநாய்கள் மட்டும் இல்லை. வீட்டில் வளர்க்கும் நாய்கள் கூட இப்படி நள்ளிரவில் குரைத்துக் கொண்டு இருக்கும். தெருநாய்கள் குரைப்பதற்கு பல காரணங்களையும் சொல்கிறார்கள்... பல கட்டுக்கதைகளும் அடித்து விடப்படுவது வழக்கம்..

அதாவது நாய் குரைப்பது கெட்ட சகுணம் அல்லது மரணம் வருவதை முன்கூட்டியே அறிவிக்கிறது என்றெல்லாம் கூட சிலர் சொல்வார்கள். ஆனால் உண்மையில் தெருநாய்கள் இப்படி குரைப்பது ஏன்? என்பது பற்றிய சமீபத்திய ஆய்வு முடிவில் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* தெருநாய்கள் தங்களது கூட்டத்தில் உள்ள பிற நாய்களுக்கு சிக்னல் கொடுக்கும் விதமாக குரைக்கிறதாம்.. சில நேரங்களில் தொலைதூர இடங்களுக்கு சென்றுவிட்டால் பாதுகாப்பான இடத்தை கண்டறிவதற்காக இப்படி சத்தம் போட்டுக்கொண்டே இருக்குமாம்.. அது போக சுற்றியுள்ள நாய்களுடன் உரையாடிக்கொள்ளும் விதமாகவும் இப்படி குரைக்குமாம்..

* சில தெருக்களில் தெருநாய்களுக்குள் அடிக்கடி சண்டை நடக்கும். அதுமட்டும் இன்றி அங்கு இருக்கும் சூழலும் நாய்களுக்கு பிடிக்காத வகையில் இருந்தால் நாய்கள் இப்படி நள்ளிரவில் ஊளையிடுமாம். தனது வேதனையை வெளிப்படுத்தும் விதமாக இப்படி கத்திக்கொண்டு இருக்குமாம்.

*அதுபோக இந்த எல்லை தன்னுடையது. வேறு நாய்கள் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என எச்சரிக்கும் விதமாகவும் இப்படி குரைத்துகொண்டு இருக்குமாம்.. சுற்றுச்சூழலில் நடைபெறும் சின்ன மாற்றங்களை கூட எளிதில் உணர்ந்து கொள்ளும் ஆற்றல் நாய்களுக்கு இயற்கையாகவே உள்ளது. இதனால், சுற்றுசூழலில் ஏற்படும் சத்தங்கள் அதாவது, சைரன், வாகனங்களின் ஹார்ன்ஸ், பட்டாசுகள், பார்ட்டிகளில் எழுப்பப்படும் அதிக ஒலிகள் ஆகியவை கூட நாய்கள் எரிச்சல் அடைந்து குரைப்பதற்கு வழிவகுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+