ரொம்ப ஸ்ட்ரிக்ட்! ஸ்டாலின் போட்ட "ஹிட் லிஸ்ட்"! உள்ளே லைனாக இருந்த அமைச்சர்கள் பெயர்! அதிரும் கோட்டை
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை மிகப்பெரிய மாற்றத்தை எதிர்நோக்கி காத்து இருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்த அமைச்சரவை மாற்றத்திற்காக முதல்வர் ஸ்டாலின் முக்கியமான லிஸ்ட் ஒன்றை உருவாக்கி இருக்கிறாராம்.
தமிழ்நாடு அமைச்சரவையில் வரும் நாட்களில் பெரிய மாற்றங்கள் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. தங்கம் தென்னரசு, துரைமுருகன், ரகுபதி, மனோ தங்கராஜ் ஆகியோர் பதவிகளில் மாற்றங்கள் இருக்கலாம்.
அவர்களுக்கு பெரிய அளவில் இலாக்கா மாற்றங்கள் இருக்கும். அமைச்சரவையில் இருந்து நாசர் நீக்கப்பட்டு உள்ளார். ஆனால் வேறு அமைச்சர்கள் யாரும் நீக்கப்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
இதில் அமைச்சர்களின் செயல்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் ஒரு ரிப்போர்ட் மூலம் கண்டுபிடித்து உள்ளார். உளவுத்துறை மூலம் அமைச்சர்களின் செயல்பாடுகள் பற்றி லிஸ்ட் எடுத்து அதை வாங்கி வைத்து இருக்கிறார்.

அது போக சில அதிகாரிகளை வைத்து, அமைச்சர்களின் செயல்பாடுகள் பற்றியும் மார்க் போட்டுள்ளார்.
காரணம்:அமைச்சரவை மாற்றத்திற்கு முதல் காரணம் முதல்வர் ஸ்டாலின் கைக்கு சென்று இருக்கும் பர்பார்மன்ஸ் ரிப்போர்ட். பொதுவாக அமைச்சர்களின் செயல்பாடுகள், குறைகள் பற்றி ரிப்போர்ட் முதல்வர் கைக்கு குறிப்பிட்ட மாத இடைவெளியில் செல்வது வழக்கம். எல்லா மாநிலங்களிலும் இது வழக்கத்தில் உள்ளது.
அந்த வகையில் தமிழ்நாடு அமைச்சர்கள் பற்றிய ரிப்போர்ட்டை வைத்து அமைச்சர்களின் நிறை, குறைகளை முதல்வர் ஸ்டாலின் பேச உள்ளார் என்று கூறப்படுகிறது. சில அமைச்சர்களுக்கு டோஸ் விடப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமைச்சரவை மாற்றம் பற்றிய பேச்சுக்கள் மீண்டும் எழுந்துள்ளன. அமைச்சர்களின் செயல்பாடு, அவர்கள் மீது உள்ள புகார், 2024 லோக்சபா தேர்தல் என்று பல விஷயங்களை மனதில் வைத்து இந்த அமைச்சரவை மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்பட்டது.
இதை வைத்துதான் முதல்வர் ஸ்டாலின் ஹிட் லிஸ்ட் ஒன்றை உருவாக்கி உள்ளார். அதில் அமைச்சர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய ஆக்சன், மாற்றப்பட வேண்டியவர்கள், நீக்கப்பட வேண்டியவர்கள் பெயர்கள் உள்ளன. நீக்கப்பட வேண்டியவர்கள் லிஸ்டில் நாசர் பெயர் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.

அமைச்சரவை மாற்றத்தில் பெரிய அளவில் இலாக்கா மாற்றம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் பரவின. அதாவது சில அமைச்சர்களிடம் இருக்கும் இலாக்கா குறைக்கப்பட்டு அதில் புதிய அமைச்சர்கள் களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராக திமுக தீவிரம் காட்டி வருகிறது. தேர்தலை கருத்தில் கொண்டு நிர்வாகிகள் மாற்றப்பட்டு உள்ளனர். இதையடுத்து தற்போது அமைச்சர்களின் பர்பார்மன்ஸ் அடிப்படையில், அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது அமைச்சர்களின் செயல்பாடு, அவர்கள் மீது உள்ள புகார், 2024 லோக்சபா தேர்தல் என்று பல விஷயங்களை மனதில் வைத்து இந்த அமைச்சரவை மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்பட்டது.
வேறு மாற்றங்கள்:அமைச்சரவை மாற்றத்திற்கு இடையில் தமிழ்நாட்டில் முக்கியமான வேறு சில நிர்வாக மாற்றங்களும் இருக்கும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டதும், அமைச்சர்களுக்கு ஏற்ற அதிகாரிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்காக அதிகாரிகள் மாற்றம் குறித்து அமைச்சர்களிடன் கருத்தை சமீபத்தில் கேட்டறிந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அதில் 20-க்கும் மேற்பட்ட துறைகளில் அமைச்சர்களுக்கும் உயரதிகாரிகளுக்கும் ஒத்துப் போகவில்லை. அமைச்சர்களுக்கு தெரியாமலே பல விசயங்களை நடைமுறைப்படுத்துகின்றனர். இது ஒரு கட்டத்தில் அமைச்சர்களுக்கு தெரியவரும் போது அவர்களுக்கு கோபம் வருகிறது.
உடனே தனது துறையின் உயரதிகாரிகளிடம் அமைச்சர்கள் கோபம் காட்டும் போது, முதல்வரின் செயலாளரை கேட்டுக்கோங்க சார் என்று பதில் வருகிறதாம். எங்களுக்கு எதுவும் தெரியாது.. முதல்வரிடம் பேசுங்கள் என்று அதிகாரிகள் கூலாக சொல்லிவிடுகிறார்களாம். இதனால் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் பல துறைகளில் சின்க் இல்லாமல் செல்கிறதாம்.
இதனால் அதிகாரிகளும் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications