சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடிதூள்! "நரேந்தருக்கு" எதிராக திரும்பும் தேவேந்திரர்? உதயநிதியை அனுப்பிய ஸ்டாலின்! மெகா அசைன்மென்ட்

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஸ்டாலின் மீண்டும் தென் மண்டலங்களில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். அவர் முதல்வராக பதவி ஏற்றபின் அதிகமாக தென் மாவட்டங்களுக்கு செல்லவில்லை. பெரும்பாலும் கொங்கு மண்டலத்தில்தான் கவனம் செலுத்தினார்.

கொங்கு மண்டலத்தில் வளர்ச்சி அடைய பாஜக, அதிமுக முயன்று வருகிறது. அங்கே வந்தால் அப்படியே நூல் பிடித்து மற்ற மண்டலங்களிலும் பாஜக வென்றுவிடும் என்பதால் அதை தடுக்கும் விதமாக திமுக செந்தில் பாலாஜியை வைத்து கொங்கு மண்டலத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது.

இதனால் முதல்வர் ஸ்டாலினும் அடிக்கடி கோவைக்கு விசிட் அடித்து வருகிறார். இந்த நிலையில்தான் திடீரென முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் தென் மண்டலத்திற்கு சென்றார். முதல்வர் ஸ்டாலின் கன்னியாகுமரியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கி வைத்தார்.

சொந்த தொகுதி.. கொளத்தூர் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. ஏராளமான நிலத் திட்ட உதவிகள்சொந்த தொகுதி.. கொளத்தூர் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. ஏராளமான நிலத் திட்ட உதவிகள்

நெல்லை

நெல்லை

அதன்பின் நெல்லைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் அங்கு அரசு சார்பாக மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். இந்த நிலையில் மதுரையில் அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் முதல்வர் கலந்து கொண்டனர். இன்று மதுரையில் முதல்வர் ஸ்டாலின் மூர்த்தி வீட்டு திருமணத்திற்கு செல்லும் முன் முக்கிய நிர்வாகிகளை சந்தித்தார். அவர்களை குறைகளை கேட்டறிந்தார். 20 நிமிடம் வரை இவர்களிடம் ஆலோசனை செய்தார்.

ஸ்டாலின்

ஸ்டாலின்

நெல்லையிலும் இதேபோல் நிர்வாகிகளுடன் இரவோடு இரவாக அவர் ஆலோசனை செய்தார். இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் சென்னைக்கு திரும்பிய இரண்டு நாட்களில் உதயநிதி ஸ்டாலினை அவர் பரமக்குடிக்கு அனுப்பி உள்ளார். தியாகி இம்மானுவேல் சேகரனின் 65வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.

உதயநிதி

உதயநிதி

இந்த நிகழ்விற்கு பொதுவாக திமுக அமைச்சர்கள் செல்வார்கள். ஆட்சியில் இல்லாத நேரங்களில் எம்எல்ஏக்கள் செல்வார்கள். கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் சென்றார், ஆனால் இந்த முறை அவர் இப்போதுதான் தென் மண்டல பயணம் மேற்கொண்டதால், உதயநிதியை அனுப்பி உள்ளார் என்று கூறப்படுகிறது. தேவேந்திர குல வேளாளர் பிரிவை சேர்ந்த இம்மானுவேல் சேகரனின் நினைவு தினம் தென் மண்டலத்தில் முக்கியமான ஒன்றாகும்.

தேவேந்திர குல வேளாளர்

தேவேந்திர குல வேளாளர்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாகவும், முக்குலத்தோர் அதிமுகவில் அவமதிக்கப்பட்டுவிட்டதாக எழுந்துள்ள விவாதம் காரணமாகவும் முக்குலத்தோர் வாக்குகள் அப்படியே அதிமுகவில் இருந்து திமுக பக்கம் சென்று உள்ளது. ஆனால் தேவேந்திர குல வேளாளர் வாக்குகள் அப்படி இல்லை. அவர்களில் கணிசமானோர் பாஜகவிற்கு ஆதரவு தருகிறார்கள். அதேபோல் கிருஷ்ணசாமி போன்றவர்களும் கணிசமான வாக்குகளை பிரிகிறார்கள். இருந்தாலும் கடந்த முறை தென் மண்டலத்தில் இந்த இரண்டு கட்சிகளும் பெரிதாக வாக்குகளை பெறவில்லை.

மோடி பாஜக

மோடி பாஜக

இந்த தேவேந்திர குல வேளாளர் பிரிவினரின் வாக்குகளை மொத்தமாக அள்ளும் பட்சத்தில் அது மிகப்பெரிய கேம் சேஞ்சாக அமையும். தென் மண்டலத்தில் இவர்களின் ஆதரவை பெறும் கட்சி 2024 லோக்சபா தேர்தலில் எளிதாக வெற்றிபெற முடியும். இந்த நிலையில்தான் இவர்களின் ஆதரவை பெறும் வகையில் உதயநிதியை முதல்வர் ஸ்டாலின் அனுப்பியதாக கூறப்படுகிறது. தான் இப்போதுதான் சென்று வந்தோம்.. அதனால் மீண்டும் செல்ல முடியாது என்பதால் அமைச்சர்களை அனுப்பாமல்.. உதயநிதியை ஸ்டாலின் அனுப்பியதாக கூறப்படுகிறது.

என்ன பேசினார்?

என்ன பேசினார்?

தேவேந்திர குல வேளாளர் பிரிவினரின் மதிப்பை பெறுவதே இவருக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட் என்கிறார்கள். அதோடு உதயநிதியின் வருகையை தேவேந்திர குல வேளாளர் பிரிவினர் விரும்பியதாகவும் தென் மண்டல வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கடந்த சட்டசபை தேர்தலில் நீங்கள் தேவேந்திரர்.. நான் நரேந்திரர் என்று மோடி பேசியது தேவேந்திர குல வேளாளர் பிரிவினரின் இடையே கவனம் ஈர்த்தது. இப்போது அதே நரேந்திரரை வீழ்த்த தேவேந்திரர் அஸ்திரத்தை திமுக கையில் எடுத்துள்ளது என்று கேட்க தோன்றுகிறது.

English summary
Why does CM Stalin send Udhayanidhi for Immanuel Sekaran Anniversary? What is the plan?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X