சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சைக்கிள் கேப்பில் பாஜக வந்து பதவி வாங்குனது யாரு? வாயை விட்ட காயத்ரி.. பாய்ந்து வந்த அண்ணாமலை கேங்க்

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக மூத்த நிர்வாகி காயத்ரி ரகுராமிற்கும் அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் இடையில் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய மோதலே ஏற்பட்டு உள்ளது. பாஜகவில் நிலவும் உட்கட்சி மோதலை அப்படியே படம் போட்டு காட்டி உள்ளது.

பொதுவாகவே உட்கட்சி மோதல் என்றால் காங்கிரஸ் கட்சிதான் நினைவிற்கு வரும். சமீபத்தில் கூட மண்டை உடைக்கும் அளவிற்கு காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி மோதல் ஏற்பட்டது. அதே சமயம் பாஜகவில் சத்தமே இல்லாமல் இன்னொரு உட்கட்சி மோதல் நிலவி வருகிறது.

பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் இருந்தே அவர் சீனியர் தலைவர்களை மதிக்கவில்லை என்ற புகார் சில சீனியர்களிடம் இருக்கிறது. முக்கியமாக வானதி சீனிவாசன் போன்றவர்களுக்கும், அவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்தில் கூட கோவையில் பந்த் நடத்தும் விவகாரத்தில் வானதி பந்த் நடத்தியே தீருவோம் என்று சொன்ன நிலையில், மாநில தலைமை பந்த் நடத்த அழைப்பே விடுக்கவில்லை என்று அண்ணாமலை பல்டி அடித்தார்.

ஆமைக்கறி சாப்பிட்டேன், கள்ளத்தோணியில் போனேன்.. தமிழக அரசியல்வாதிகளின் தினப் பேச்சு.. அண்ணாமலை பொளேர் ஆமைக்கறி சாப்பிட்டேன், கள்ளத்தோணியில் போனேன்.. தமிழக அரசியல்வாதிகளின் தினப் பேச்சு.. அண்ணாமலை பொளேர்

என்ன நடக்கிறது?

என்ன நடக்கிறது?

இந்த நிலையில்தான் தற்போது காயத்ரி ரகுராமிற்கும் பாஜகவில் உள்ள சில தலைக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது உள்ளது. கடந்த மே மாதம் பாஜகவில் கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டார். அண்ணாமலை, கட்சி உறுப்பினர்களை மாற்றி நடவடிக்கை எடுத்த போது அவரின் பதவி பறிக்கப்பட்டது. இதை பற்றி ட்விட்டரில் நீண்ட நாட்கள் காயத்ரி புலம்பி வந்தார். அதன்பின் ஒரு வழியாக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக காயத்ரி ரகுராம் தேர்வு செய்யப்பட்டார். ஆனாலும் அண்ணாமலைக்கும், இவருக்கும் இடையிலான மோதல் சரியாகவில்லை. இந்த நிலையில்தான் கட்சியால் தான் புறக்கணிக்கப்படுவதாக புகார் வைத்துள்ளார். முக்கியமாக காசியில் நடந்த காசி தமிழ் சங்கமம் விழாவிற்கு இவரை அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அனுமதி இல்லை

அனுமதி இல்லை

வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்தும் கூட வெளிமாநிலத்தில் நடக்கும் தமிழ் தொடர்பான நிகழ்வில் தன்னை அனுமதிக்காததுதான் காயத்ரி ரகுராம் கோபம் கொள்ள காரணம். இதற்கான ஆற்றாமையை அவர் ட்விட்டரில் வெளிப்படுத்தி இருந்தார். அதில், சில சமயங்களில் சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் இருக்கிறதா என்று எனக்கு சந்தேகம் வரும். என்னைப் பற்றியும் எனது வேலையைப் பற்றியும் நான் வருத்தப்பட்டேன் சொன்னதற்காக ட்ரோல் செய்யப்பட்டேன் அதுவும் ஒரு விசுவாசி குழு பெரும்பாலும் கட்சி ஆதரவாளர்கள் மட்டுமே. திமுக விசிக ட்ரோல்களைப் பற்றி எனக்கு கவலை இல்லை. நான் கட்சியையோ அல்லது எந்த தலைவரையோ எதிர்த்து பேசியதில்லை. ஆனால் சில உண்மையான காரியகர்த்தாக்கள் நான் உணர்ந்ததை புரிந்து கொண்டனர், சிலர் அழைத்தார்கள் மற்றும் பலர் எனக்கு ஆறுதல் கூறினர். நன்றி. எனது வருத்தம் ஒரு கட்சியின் உள் பிரச்சினை அல்ல. யாரிடமும் குறை புகார் கொடுக்க முடியாது. என் கடின உழைப்பின் நம்பிக்கையும் தோல்வியும் மட்டுமே எனக்கு பதிலளிக்க முடியும். கடவுள் மட்டுமே பதில் சொல்ல முடியும். கட்சியை விட்டு வெளியேறும்படி என்னைக் கேட்டவர்கள், குறிப்பாக விசுவாசமான குழு - என்னிடம் ஒரு பதில் உள்ளது - நான் 8 ஆண்டுகள் எனது தொழில்& தனிப்பட்ட வாழ்க்கையை விட்டு தேசத்திற்காக சேவை செய்துள்ளேன், தொடர்ந்து செய்வேன். என்னை கட்சியை விட்டு வெளியேறுமாறு கேட்க யாருக்கும் உரிமை இல்லை., என்று குறிப்பிட்டார்.

பதில்

பதில்

இந்த நிலையில்தான் பாஜக ஆதரவு ஐடி ஒன்று காயத்ரி பெயரை குறிப்பிடாமல் அவரை கடுமையாக விமர்சனம் செய்தது. அதில், அதில், ட்விட்டர்ல 4 followers வெச்சுக்கிட்டு PM ரேஞ்சுக்கு எனக்கு மரியாதை தரனும்னு ஒரு கோமாளி எதிர்பார்த்து சுத்திகிட்டு இருக்கு...தலைவர் அண்ணாமலை வழிகாட்டுதலின்படி இருந்தா இரு இல்லனா மானாட மயிலாட போய் choreographer வேலைய பாரு, என்று காயத்ரி தொழிலை சுட்டிக்காட்டி அவரை விமர்சனம் செய்துள்ளார். அதாவது அண்ணாமலை சொல்வதை கேளு என்பது போல விமர்சனம் செய்து உள்ளனர். இதை தமிழ்நாடு பாஜக தொழிற்பிரிவு துணை தலைவர் செல்வகுமார் லைக் செய்துள்ளார். இதுதான் தற்போது காயத்ரியை மேலும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

 கோபம்

கோபம்

இதற்குத்தான் தற்போது காயத்ரி பதில் விமர்சனம் வைத்துள்ளார். அதில், செல்வகுமார் காவி சோசியல் மீடியா கம்பனி ஒன்றை நடத்தி வருகிறார். அந்த கம்பனியில் 2000 பேர் இருக்கிறார்கள். என்னை மற்றும் சீனியர் பாஜக தலைவர்களை கிண்டல் செய்வதுதான் வேலை இவர்களுக்கு. பெண்ணான எனக்கு எதிராக குழுவாக அவர்கள் போஸ்ட் செய்கிறார்கள், என்று விமர்சனம் செய்துள்ளார். இதையடுத்து பாஜக நிர்வாகி ஒருவர், ரொம்ப புத்திசாலித்தனமா பேசுறீங்க மேடம். சைக்கிள் கேப்பில நீங்களும் சீனியர் லீடர்ன்னு சொல்றீங்க. அதுலயும் பொண்ணுன்னு சொல்லி பிரச்னையை திசை திருப்புறீங்க..உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. ஆனா இந்த கட்சியில் இல்லை. ராமசுப்பு மாதிரி வெளியேறி திராவிடர்களை ஆதரியுங்கள் என்று கூறி உள்ளார்.

 காயத்ரி கோபம்

காயத்ரி கோபம்

இதற்கு பதில் அளித்த காயத்ரி ரகுராம்.. நான் கட்சியில் 8 வருஷமா இருக்கேன். சைக்கிள் கேப்பில கட்சிக்கு வந்து பெரிய பதவி வாங்குனது யார் என்று கேட்டுள்ளார். இதையடுத்து இன்னொரு போஸ்டில், செல்வகுமார் ஆட்கள் எனக்கு எதிராக போஸ்ட் செய்து வருகின்றன. நீங்கள் என்னை ட்ரோல் செய்வதர்கள் காசு பெறவில்லை. போய் "அந்த" ட்விட்டர் பக்கத்தில் எப்போதும் போல 4000+ லைக்குகளை போடுங்கள் என்று கூறியுள்ளார். காசு வாங்கிக்கொண்டு எப்போதும் போல அண்ணாமலைக்கு லைக் போடுங்கள் என்று இவர் மறைமுகமாக விமர்சனம் செய்ததாக நெட்டிசன்கள் இதை பற்றி விளக்கி உள்ளனர். இதையடுத்து அண்ணாமலை டிபி வைத்த நெட்டிசன்கள் பலர் காயத்ரியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

English summary
Why does Gayathri Raghuram get furious on Annamalai and his supporters in Tamil Nadu BJP?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X