இப்போ வேணாம்ங்க.. சிக்கல்.. நாமளே பாயிண்ட் கொடுக்கலாமா?- எடப்பாடி பின்வாங்கியதற்கு பின்னணி இதுதானா?
சென்னை : பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி நடத்துவதற்கு ஓ.பன்னீர்செல்வம் சட்டரீதியாக பல்வேறு சிக்கல்களை தருவார் என்பதாலும், ஒரேயடியாக ஓரங்கட்டினால் தொண்டர்களின் அனுதாபம் அவருக்கு கிடைத்துவிடும் என்பதாலுமே எடப்பாடி பழனிசாமி பின்வாங்கியதாக கூறப்படுகிறது.
Recommended Video
ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திட்டமிட்ட நிலையில், அதுகுறித்து நேற்று அறிவிக்கவில்லை.
எடுத்தோம், கவிழ்த்தோம் என செயல்பட்டால் ஓபிஎஸ் தரப்பினர் தீவிரமடைவதற்கு அதுவே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது போலாகிவிடும் என்பதாலேயே ஈபிஎஸ் தரப்பினர் அமைதி காத்ததாக கூறப்படுகிறது.

அதிமுக குழப்பம்
அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை குழப்பம் தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று அதிமுக தலைமைக் கழகத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தினர். ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அரங்கேறிய மோதல் நிகழ்வுகளைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்திற்கு தெரியாமலேயே தலைமை நிலைய செயலாளர் பெயரில் திடீரென தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இது சட்டவிரோதமானது என ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நேற்று காலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான 65 தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

1 மணி நேரம்
அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி, தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர் பங்கேற்ற தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சுமார் 1 மணி நேரம் நடந்தது. இந்த கூட்டத்தில், கடந்த 23ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டபடி வருகிற ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவை நடத்த வேண்டும், அதற்கான இடத்தை தேர்வு செய்வது, பொதுக்குழுவுக்கான அழைப்பிதழ் அனுப்புவது, சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பது, பொதுக்குழு ஏற்பாடுகளைச் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

பொதுச் செயலாளர்
இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகி உள்ளதால், கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகளின் எண்ணப்படி ஒற்றைத் தலைமை பதவியை கொண்டு வர வேண்டும். அதன்படி, பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும் வரை தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் இனி கட்சி சார்பில் வெளியிடப்படும் அறிவிப்புகள் அனைத்தும் எடப்பாடி பழனிசாமி பெயரிலேயே கையெழுத்து போட்டு வெளியிடப்பட வேண்டும் என்றும் முக்கிய நிர்வாகிகள் கூறியதாகத் தெரிகிறது.

பதவி நீக்கம்
மேலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டு வருவதால், அவரை அதிமுகவின் பொருளாளர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ்ஸை நீக்கினால் என்னென்ன பிரச்சனைகள் வரும், அதை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதன்படியே, இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என தீர்மானித்ததாக கூறப்படுகிறது.

இப்போது வேண்டாம்
ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட இருப்பதாக தகவல் கசிந்த நிலையில், கூட்டத்தில் அதுபற்றி விவாதிக்கப்பட்டும் எந்த முடிவும் எடுக்கப்படாமல் அந்த திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இது வெளியே திரண்டிருந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியது. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் இந்த முடிவுக்குப் பின்னால் முக்கியமான காரணங்கள் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

சட்டச் சிக்கல்
ஓபிஎஸ்ஸை பதவியில் இருந்து நீக்கும் முடிவுக்கு தலைமைக் கழக நிர்வாகிகள் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்த நிலையிலும், எடப்பாடி பழனிசாமி, இந்த நடவடிக்கை இப்போது வேண்டாம் எனக் கூறியுள்ளார். அவர்கள் நாம் சட்டவிரோதமாக கட்சியைக் கைப்பற்ற முயற்சிப்பதாக தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என சட்டப் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர். இந்த நேரத்தில் கட்சியில் இருந்து நீக்குவது அவர்களுக்கு நாமே பாயிண்ட் எடுத்துக் கொடுப்பது போலாகிவிடும் என ஈபிஎஸ் கூறியுள்ளாராம்.

ஜூலை 11ல் பார்த்துக் கொள்ளலாம்
மேலும், இப்போது ஒரே அடியாக ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டுவது அவருக்கு அனுதாபத்தை தேடித் தந்தாலும் தரலாம். அவர் ஏற்கனவே தொண்டர்களை நோக்கி சுற்றுப்பயணம் நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த நேரத்தில் முழுமையாக அவரை நீக்கினால் தொண்டர்கள் மத்தியிலும் நமக்கு அவப்பெயர் ஏற்படும். இந்த பிரச்சனையில் நாம் பொறுமையாகச் செயல்படுவதாகவே தொண்டர்கள் அறிய வேண்டும். எனவே, இப்போது இதுபற்றி யாரும் எங்கும் பேச வேண்டாம், பொதுக்குழுவில் பார்த்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
-
நள்ளிரவில் ‘செக்’ வைக்கும் காக்கிகள்.. சென்னையில் இரவு நேரத்தில் வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
ஒன்றரை மாதத்தில் என்ன ஆகும்? அரியணை ஆட்டம்.. 2016 Vs 2021.. தமிழக தேர்தல் களத்தின் 'பவர்' ரிப்போர்ட் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
இரட்டை இலை சின்னத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி? எடப்பாடி போடும் அதிரடி பிளான்! -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
அதிமுக கதை குளோஸ்.. விஜய் வீட்டு கதவை தட்டும் எடப்பாடி பழனிசாமி.. பங்கப்படுத்திய பன்னீர்செல்வம் -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக்












Click it and Unblock the Notifications