அதிமுக மாஜி அமைச்சரின் கட்சி பதவி பறிப்பு.. அதிரடி காட்டிய எடப்பாடி.. ‘ஜகா’ வாங்கியதுதான் காரணமாம்!
சென்னை: அதிமுகவின் அமைப்புச் செயலாளரான சி.த.செல்லப்பாண்டியனை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி மாலை விளாத்திகுளம் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில், பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழா மற்றும் மதுரை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தூத்துக்குடி எம்.பி கனிமொழி கருணாநிதி உட்பட முதல்வரின் குடும்பத்தினரை பொதுவெளியில் மிகவும் கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்தி இழிவாகப் பேசியுள்ளார். இதனை கண்டித்து, திமுக நிர்வாகிகள் விளாத்திகுளம் காவல் நிலையத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரை அருவருக்கத்தக்க வகையில் இழிவாகப் பேசிய முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி புகார் அளித்தனர்.
திமுகவினர் அளித்த புகாரின் பேரில், விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 294(B), 153(A), 505(2) , ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து முன் ஜாமீன் கேட்டு செல்லபாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசின் செயல்பாட்டை விமர்சித்ததாகவும், முதல்வருக்கு எதிராக அவதூறாகப் பேசவில்லை என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இல்லாமல் நடந்து கொள்வதாக உத்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, 15 நாட்களுக்கு விளாத்திகுளம் போலீசில் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து, செல்லபாண்டியனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், செல்லப்பாண்டியன் வகித்து வந்த அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் சி.த.செல்லப்பாண்டின் அவர்களும், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆ.இளவரசன் அவர்களும் இன்று முதல் அவர்கள் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வர்த்தக அணிச் செயலாளராக சி.த. செல்லப்பாண்டியன் (முன்னாள் அமைச்சர், தூத்துக்குடி தெற்கு மாவட்டம்) நியமிக்கப்படுகிறார். கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்கள் ஆ. இளவரசன், முன்னாள் எம்.பி (அரியலூர் மாவட்டம்), கோபி காளிதாஸ் (கோபிசெட்டிபாளையம், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்) ஆகியோர் வர்த்தக அணிச் துணை செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் வகித்து வந்த அமைப்புச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, அவருக்கு சார்பு அணியான வர்த்தக அணியின் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது திமுகவினர் தொடுத்த வழக்கில், இனி ஸ்டாலினை தவறாகப் பேச மாட்டேன் என சி.த.செல்லப்பாண்டியன் 'ஜகா' வாங்கியதன் காரணமாகவே அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
-
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
Sengottaiyan: செங்கோட்டையன் எம்எல்ஏ பதவிக்கு சிக்கல்? ஹைகோர்ட்டில் அதிமுக வேட்பாளர் வழக்கு! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்?












Click it and Unblock the Notifications