மேட்ச் முடிந்ததும்! அப்படியே மூட்டை கட்டிக்கொண்டு.. ஊருக்கு போன சிஎஸ்கே வீரர்! தோனிக்கு மெகா சிக்கல்
சென்னை: சிஎஸ்கே அணியின் முக்கியமான வீரரான பென் ஸ்டோக்ஸ் சரியாக ப்ளே ஆப் சமயத்தில் அணியில் இருந்து வெளியேறுவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிஎஸ்கே அணி ஒரு வழியாக போராடி ப்ளே ஆப் போட்டிங்களுக்கு ஐபிஎல் 2023 சீசனில் சென்றுள்ளது. இதுவரை சிஎஸ்கே ஆடிய 14 போட்டிகளில் 12ல் சிஎஸ் கே அணி ப்ளே ஆப் சென்றுள்ளது.

வெளியேற்றம்
இந்த நிலையில்தான் அணியில் இருக்கும் முக்கியமான வீரரான பென் ஸ்டோக்ஸ் நாட்டிற்கு திரும்பி செல்ல முடிவு செய்துள்ளார்.
டெல்லி அணிக்கு எதிராக நடக்கும் போட்டிக்கு பின்பாக அவர் நாட்டிற்கு திரும்பி சென்றுள்ளார். டெல்லியை நேற்று சிஎஸ்கே அணி வீழ்த்தியது. சிஎஸ்கே அணி ப்ளே ஆப் ஆட உள்ள நிலையில் பென் ஸ்டோக்ஸ் அணியில் இருக்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
என்னாச்சு?
காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தவர் தற்போது சொந்த ஊருக்கு கிளம்பி செல்கிறார்.
சிஎஸ்கே அணியில் கேப்டன் மெட்டீரியலாக இருப்பவர் பென் ஸ்டோக்ஸ். ஆனால் அவர் இந்த சீசனில் சரியாக ஆடவில்லை. அவர் காயம் காரணமாக களமிறங்கவில்லை. வாய்ப்பு கிடைத்த போட்டிகளிலும் சரியாக ஆடவில்லை.
தொடக்கத்தில் சில போட்டிகளில் ஆடியவர் மோசமாக சொதப்பினார். இவருக்கு 16 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. தோனி - ஸ்டோக்ஸ் காம்போ பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் காரணமாக இவரால் ஆட முடியவில்லை. இதுவே சிஎஸ்கே அணிக்கு எதிராக திரும்பியது .
இங்கிலாந்து வீரர்களாக ஆர்ச்சர், பில்லிங்ஸ் போன்றவர்கள் இதேபோல் காயம் என்று கூறி பாதியில் வெளியேறும் சம்பவங்களும் கூட ஐபிஎல் தொடரில் அடிக்கடி நடக்கிறது. அதில் சிஎஸ்கே அணியில் தற்போது ஸ்டோக்ஸ் இணைந்துள்ளார். அடுத்த சீசன் இவர் இருப்பாரா என்பதே சந்தேகம். அதனால் சிஎஸ்கே அணிக்கு அவரை கேப்டனாக போடுவது பற்றி யோசிப்பதும் ரிஸ்க்.
ஊருக்கு செல்கிறார்
இந்த நிலையில்தான் சிஎஸ்கே அணி ப்ளே ஆப் ஆடும் நேரத்தில் அணியில் இருக்கும் முக்கியமான வீரரான பென் ஸ்டோக்ஸ் நாட்டிற்கு திரும்பி செல்ல முடிவு செய்துள்ளார்.
காயம் காரணமாக அவர் ஊருக்கு செல்கிறார். இவரின் இந்த முடிவால் சிஎஸ்கே ரசிகர்கள் அப்செட்டில் இருக்கிறார்கள். இவர் காயம் வந்த போதே வெளியேறி இருந்தால் அணி மாற்று வீரரை இந்த சீசனுக்கு எடுத்து இருக்கும். மாற்று வெளிநாட்டு வீரரை கொண்டு வந்து இருக்கலாம்.
அது அணிக்கு சாதகமாக மாறி இருக்கும். சிஎஸ்கேவில் மொயின் அலி நன்றாக ஆடாத நிலையில் பென் ஸ்டோக்ஸுக்கு ஒரு மாற்று வீரர் இருந்தால்.. மொயின் அலி இடத்தில் அவ்வப்போது இறக்கி இருக்கலாம். மொயின் அலியால் சென்னை போன்ற நல்ல ஸ்பின் பிட்சில் கூட சரியாக ஆட முடியவில்லை. அவர் பேட்டிங், பவுலிங் இரண்டுமே மோசமாக உள்ளது.
ஸ்டோக்ஸ் மற்றும் முன்பே போய் இருந்தால் வேறு ஒரு மாற்று வீரரை கொண்டு வந்திருக்க முடியும்.
ஆனால் ஸ்டோக்ஸ் இந்த லீக் முழுக்க இருந்துவிட்டு.. இப்போது முக்கிய நேரத்தில் கிளம்பி செல்கிறேன் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பரபரப்பு:
இப்போது தோனி இவருக்கு மாற்று வீரரை தேட வேண்டும். ஆனால் சிஎஸ்கே வட்டாரத்தில் விசாரித்ததில் சிஎஸ்கே அணி மாற்று வீரரை தேட வாய்ப்பு இல்லை. இருக்கின்ற வீரர்களை வைத்தே தோனி விளையாடுவார் என்று கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications