பாஜகவிற்கு போன உளவு ரிப்போர்ட்? 400 இடங்களில் வெற்றி.. கோஷத்தையே நிறுத்திட்டாராமே மோடி? என்னாச்சு?
சென்னை: பாஜகவினர் 400 இடங்களில் வெற்றி என்ற கோஷத்தை நிறுத்திவிட்டனர். அதை பற்றி பேசுவது இல்லை. கடந்த வருடமாக செய்த எதையும் அவர்களால் பேச முடியவில்லை. காங்கிரஸ் இந்துக்களுக்கு எதிரி, சனாதனத்திற்கு எதிரி என்றெல்லாம் பேசுகிறார்கள். இஸ்லாமியர்களை வைத்து அரசியல் செய்கிறார்கள். ஆனால் இதெல்லாம் எடுபடாது, என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.
2024 லோக்சபா தேர்தல் தொடக்கத்தில் 400 இடங்களை பெறுவோம் என்று பாஜக முழக்கம் வைக்க தொடங்கியது. ஆப் கி பார்.. சார்சோ பார் என்று கோஷம் போட்டது. அதாவது இந்த முறை 400 இடங்களில் வெல்வோம் என்று கோஷம் போட்டது.

பாஜக கோஷம்: ஆனால் பாஜக இப்படி கோஷமிட்டது கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி உள்ளது. 400 இடங்களை வெல்வோம் என்று அந்த கட்சியின் முழக்கம் முதல் கட்ட தேர்தலில் மிக பலமாக ஒழித்தது. ஆனால் இரண்டாம் கட்ட பிரச்சாரம் எதிலும்.. மூன்றாம் கட்ட பிரச்சாரத்திலும் அந்த சத்தம் கேட்கவே இல்லை.
உதாரணமாக மோடி கடைசியாக ராஜஸ்தானில் செய்த மூன்று பிரச்சாரத்திலும் 400 என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லை. மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்பதை மட்டுமே கூறினார். மாறாக இலக்கு 400 என்பதை அவர் எங்குமே குறிப்பிட்டு கருத்து தெரிவிக்கவில்லை.
பேட்டி; இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார் . அதில், பாஜகவினர் 400 இடங்களில் வெற்றி என்ற கோஷத்தை நிறுத்திவிட்டனர். அதை பற்றி பேசுவது இல்லை. கடந்த வருடமாக செய்த எதையும் அவர்களால் பேச முடியவில்லை. காங்கிரஸ் இந்துக்களுக்கு எதிரி, சனாதனத்திற்கு எதிரி என்றெல்லாம் பேசுகிறார்கள். இஸ்லாமியர்களை வைத்து அரசியல் செய்கிறார்கள். ஆனால் இதெல்லாம் எடுபடாது.
ஏனென்றால் இதெல்லாம் பிரச்சனையே கிடையாது. தேர்தல் பத்திரங்கள் ஊழல் பற்றிய விவகாரம் வெளியே வந்துவிட்டது. வேலை இல்லா திண்டாட்டம் உச்சத்தில் இருக்கிறது. மக்களுக்கு விலைவாசி பிரச்சனை விண்ணை முட்டுகிறது. இரண்டு மாநில முதல்வர்களை கைது செய்தது பாஜகவிற்கு பெரிய அளவில் எதிராக மாறி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையும் பாஜகவிற்கு பெரிய அளவில் எதிராக மாறி விட்டது.
செஸ் வரி வசூலில் மாநிலங்களை ஏமாற்றும் பாஜகவின் சட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மாநிலங்களுக்கு அதன் உரிமைத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலங்களிடம் பிடுங்கப்பட்ட நிதிகள் மீண்டும் வழங்கப்படும். நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும். இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50% என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும். ST, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும். ST, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.
100 நாள் வேலைத்திட்டத்தின் தினக்கூலி ரூ.400 ஆக உயர்த்தப்படும். தேசிய அளவில் குறைந்தபட்ச ஊதியம் என்பது நாளொன்று ரூ.400 என்பது உறுதி செய்யப்படும். அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனை மற்றம் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் . மாநிலம் வாரியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், என்றெல்லாம் காங்கிரஸ் கூறி உள்ளது. இதெல்லாம் பாஜகவிற்கு பெரிய அளவில் சவுக்கடியாக மாறி உள்ளது.
ஓபிசி மத்தியில் காங்கிரஸ் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. முதல் கட்ட தேர்தலில் இது பாஜகவிற்கு எதிராக மாறிய உள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பீகாரில் உள்ள 30 தொகுதிகளில் பாஜகவிற்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. அவர்களுக்கு உளவுத்துறை ரிப்போர்ட் அல்லது அவர்க்ளின் எக்சிட் போல் ரிப்போர்ட் தெரிவித்து இருக்கலாம். அதனால்தான் பாஜகவினர் 400 இடங்களில் வெற்றி என்ற கோஷத்தை நிறுத்திவிட்டனர், என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications