பத்திரிகை, ஊடக உரிமையாளர்களை சட்டென அழைத்த ஸ்டாலின்.. இன்று திடீர் அவசர மீட்டிங்.. என்னாச்சு?
சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 11 மணிக்கு தமிழகத்தின் முக்கிய பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் (தொலைக்காட்சி உட்பட) ஆகியவற்றின் உரிமையாளர்கள், ஆசிரியர்கள், பதிப்பாளர்கள் ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார்.
இதற்கான அழைப்பு, தமிழக அரசின் செய்தித்துறை இயக்குநர் வைத்திநாதன் ஐ.ஏ.எஸ். மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. நான்காண்டு முடிந்து ஐந்தாம் ஆண்டில் திமுக அரசு அடியெடுத்து வைக்கும் சூழலில், இந்த சந்திப்பு நடக்கிறது. இந்த சந்திப்பில், நான்காண்டு சாதனைகளை முதல்வர் விவரிப்பார் என்றும், அதற்காகவே இந்த சந்திப்பு என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால், தேர்தல் நெருங்குவதால் தேர்தலை மையப்படுத்தி முதல்வர் சில முக்கிய விசயங்களை பகிர்ந்து கொள்ளவிருக்கிறார். அந்த பகிர்வுகளுக்காத்தான் இந்த சந்திப்பு என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலுக்கு ரெடி:
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு கட்சிகள் ரெடியாகி வருகின்றன. ஒரு பக்கம் எடப்பாடி முக்கிய சந்திப்புகளை மேற்கொண்டு வருகிறார். தமிழக அரசியலில் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் கவனம் பெற தொடங்கி உள்ளார். வரிசையாக 11 தேர்தல்களில் தோல்வி அடைந்தாலும் கூட தற்போது நம்பிக்கையாக 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராக தொடங்கி உள்ளார். இதற்காக அவர் சில சீக்ரெட் மீட்டிங்குகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளார்.

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி செய்துள்ளார். பொதுவாக அரசியலில் இன்ப்ளூயன்ஸ் செய்ய சிலர் இருப்பார்கள். அரசியல் வியூகம் வகுப்பவர்கள், சில பிரிவினரை ஒரு தலைவருக்கு கீழ் கொண்டு வருபவர்கள், ஒரு அரசியல் தலைவருக்கு ஆதரவாக களத்தை மாற்றுபவர்கள் என்று அரசியல் களத்தில் இன்ப்ளூயன்ஸ் செய்ய பலர் இருக்கிறார்கள்.
அரசியல் விமர்சகர்கள் தாண்டி.. விமர்சனம் செய்யாமல் உள்ளே களத்தில் இருந்து மட்டும் பணிகளை செய்ய கூடியவர்கள் இப்படி பலர் உள்ளனர். இப்படி சிலரைத்தான் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க தொடங்கி உள்ளார். முதல் கட்டமாக சமீபத்தில் இதேபோன்ற பின்னணி கொண்ட ஒருவரை எடப்பாடி பழனிசாமி சந்தித்து உள்ளார். அடுத்த கட்டமாக இன்னும் 2-3 பேரை இப்படி எடப்பாடி பழனிசாமி நேரடியாக, ரகசியமாக சந்திக்க உள்ளார். தனக்கு ஏற்றபடி அரசியல் சூழலை மாற்றுவதற்கு வசதியாக எடப்பாடி பழனிசாமி ஏற்பாடுகளை செய்து வருகிறார். தனக்கு ஆதரவாக கருத்து கொண்டு வருவதற்கான மூவ்களையும் எடப்பாடி பழனிசாமி செய்வார் என்று கூறப்படுகிறது.
ஸ்டாலின் மீட்டிங்
இப்படிப்பட்ட நிலையில்தான் செய்திகளை சந்திக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதில் பின்வரும் இரண்டு விஷயங்கள் ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1. நான்காண்டு முடிந்து ஐந்தாம் ஆண்டில் திமுக அரசு அடியெடுத்து வைக்கும் சூழலில் அதை பற்றி ஆலோசனைகள் ஆட்சி செய்த சாதனைகள், செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி பேசுவார்.
2. நான்காண்டு சாதனைகளை முதல்வர் விவரிப்பார்.. அதே சமயம் கடந்த 4 ஆண்டுகளில் பத்திரிகையாளர்களுக்கு பல நலத்திட்டங்களை ஸ்டாலின் வழங்கினார். அதேபோல் மீண்டும் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
3. அதே சமயம் தேர்தல் நெருங்குவதால் தேர்தலை மையப்படுத்தி முதல்வர் சில முக்கிய விசயங்களை பகிர்ந்து கொள்ளவிருக்கிறார் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications