வந்ததும் பதவி.. "இயற்கை" மருத்துவம்.. பாஜகவை உலுக்கிய ஒரு பெண்.. யார் இந்த டாக்டர் டெய்சி சரண்?
சென்னை: பாஜகவின் கமலாலய அலுவலகத்திற்குள் புதிய புயலையே கிளப்பி இருக்கிறார் திருச்சி சூர்யா. இவர் பாஜகவின் டெய்சி சரண் உடன் பேசிய ஆடியோதான் இந்த புயலுக்கு காரணம். வடகிழக்கு பருவமழை காலத்தில் ஒரு புயல் கூட தமிழ்நாட்டை தாக்காத நேரத்தில்தான் பாஜக அலுவலகத்தை பெரும் புயல் புரட்டி போட்டு உள்ளது.. திருச்சி சூர்யா யார் என்பது அறிந்தது.. ஆனால் இந்த டெய்சி சரண் யார்?
பாஜகவில் மாநில சிறுபான்மை அணித் தலைவர் பதவி வகித்து வருபவர் டெய்சி சரண். திருப்பூரை சேர்ந்த இவர் சென்னையில் வசித்து வருகிறார். இவரும் ஓபிசி நலப்பிரிவு தலைவர் சூர்யாவிற்குதான் மோதல் ஏற்பட்டு இருக்கிறது.
பாஜகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் டெய்சி சரண் தனது துறைக்கு கீழே கமிட்டி உருவாக்குவதற்கு திருச்சி சூர்யா எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் கமிட்டியில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக டெய்சியிடம் சூர்யா கோபமாக பேசியதாக கூறப்படுகிறது.

யார் இவர்?
சில கட்சிகளில் இணைந்த சில மாதங்களில் வேகமாக உயர் பதவிகளை அடைந்துவிடலாம். உதாரணமாக பாஜகவில் இணைந்து ஒரு வருடத்திற்கு உள்ளாகவே அண்ணாமலை பாஜக தலைவராக உருவெடுத்தார். அதே சமயம் பாஜகவில் பல காலமாக இருக்கும் தலைவர்களுக்கு பதவி பறிக்கப்படும் சம்பவங்களும் நடந்து உள்ளன. மூத்த தலைவர்களுக்கு ஆளுநர் பதவி கொடுத்து ரிட்டயர்மெண்ட் கொடுக்கும் சம்பவங்களும் கூட நடந்து இருக்கின்றன. அதேபோல்தான் பாஜகவில் வந்த உடனே எளிதாக பதவி வாங்கியவர் டெய்சி சரண். 2020ல்தான் பாஜகவில் இவர் இணைந்தார். அதே வருடம் இவருக்கு பதவியும் வழங்கப்பட்டது.

டெய்சி சரண்
பாஜக மாநில தலைவராக அப்போது எல் முருகன் இருந்தார். அவரால் கட்சியில் சேர்க்கப்பட்டவர் டெய்சி, அதே நாள் பாஜக மாநில சிறுபான்மை அணித் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். சரியாக சொல்ல வேண்டும் என்றால் பாஜகவில் திருச்சி சூர்யாவிற்கு இவர் ஒன்றரை வருட சீனியர். இவரை மருத்துவர் என்று அழைத்தாலும்.. உண்மையில் இவர் அலோபதி பயின்ற மருத்துவர் கிடையாது. இவர் இயற்கை மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவர் பட்டம் படித்தவர் கிடையாது. ஆனாலும் டாக்டர் டெய்சி என்றுதான் பாஜகவினரால் அழைக்கப்பட்டு வருகிறார்.

பின்னணி
இயற்கை மருத்துவம், அழகுக்கலை ஆகிய பணிகளை இவர் செய்து வருகிறார், திருப்பூரில் மெயின் மருத்துவமனை வைத்து இருக்கும் இவர் சென்னையில் கிளைகள் வைத்து இருக்கிறார். இவரின் கணவர் சித்த படித்த மருத்துவர். அவரிடம் இவர் மருத்துவம் தொடர்பான குறிப்புகளை கற்றுக்கொள்கிறார். அந்த குறிப்புகள் வழியாக இவர் தனியாக கிளினிக் தொடங்கி மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இணையத்தில் பல மருத்துவ குறிப்புகளை கொடுத்து வந்துள்ளார். முக்கியமாக யூ டியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார்.

சேனல்
இந்த சேனலில் மருத்துவம் தொடர்பாக நிறைய குறிப்புகளை கொடுத்து வந்துள்ளார். பாஜகவில் அண்ணாமலை வந்த பின் பல நிர்வாகிகள் மாற்றப்பட்டனர். கடந்த மே மாதம் நிர்வாகிகள் பலர் ஓரம்கட்டப்பட்டனர். பாஜக மாநில புதிய நிர்வாகிகள் பட்டியலை மாநில தலைவர் அண்ணாமலைதான் தேர்வு செய்து வெளியிட்டார். மாநில துணைத் தலைவர்களாக வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், சசிகலா புஷ்பா, நாராயணன் திருப்பதி, பால் கனகராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டார். இதையடுத்து அப்பதவிக்கு பெப்சி சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டார். தனது பதவி பறிக்கப்பட்டது பற்றி காயத்ரி ரகுராம் தொடர்ந்து பல்வேறு ட்விட்களை போட்டு வந்தார். பதவி பறிக்கப்பட்ட சில நிமிடங்களில், எனது ஒரே தலைவர் பிதாமகன் மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி ஜி என்று காயத்ரி ரகுராம் போஸ்ட் செய்து இருந்தார்.

வளர்ச்சி
அப்போது காயத்ரி நீக்கப்பட்டு இருந்தாலும், டெய்சி மட்டும் நீக்கப்படவில்லை. சிறுபான்மைத்துறை பிரிவின் தலைவராக டெய்சி தொடர்ந்து நீடித்து வந்தார். அவரின் பதவியில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனாலும் கடந்த சில மாதங்களுக்கு அண்ணாமலையுடன் இவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் கருப்பு முருகானந்தம் போட்டோ பெரிதாக வைக்கப்பட்டு அண்ணாமலை போட்டோ சிறியதாக வைக்கப்பட்டு இருந்துள்ளது. அதோடு ட்விட்டரில் அண்ணாமலை இவரை பின்தொடரவில்லை. முருகானந்தம் மட்டுமே பின் தொடருகிறார். இந்த கருத்து வேறுபாடு இருவருக்கும் இருந்துள்ளது.

என்ன நடந்தது?
இந்த நிலையில்தான் அண்ணாமலைக்கு நெருக்கமான திருச்சி சூர்யா இவரை போன் செய்து மோசமாக திட்டி இருக்கிறார். 16 நாட்களுக்கு முன் டெய்சிக்கு அதிகாலை 6. 20 மணிக்கு போன் செய்து சூர்யா கடுமையாக பேசியதாக ஆடியோ வெளியாகி உள்ளது. அந்த ஆடியோவில் மிக மோசமான வார்த்தைகளை அவர் பயன்படுத்தி இருக்கிறார். முழுக்க முழுக்க கெட்ட வார்த்தைகள் ஆடியோவில் நிரம்பி வழிகின்றன. அதோடு.. உன்னை தீர்த்துடுவேன் என்று சொல்வதோடு, கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் சூர்யா பேசியதாக கூறப்படுகிறது. உன்னுடைய உடல் மெரினாவில் கிடக்கும் என்றும் அந்த ஆடியோவில் மிரட்டல்கள் விடுக்கப்பட்டு உள்ளது. எதிரில் டெய்சி அமைதியாக விளக்கம் கொடுக்க முயன்றும், சூர்யா தொடர்ந்து கடுமையாக பேசிக்கொண்டு இருந்துள்ளார். இது தொடர்பாக பாஜகவில் உட்கட்சி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்?












Click it and Unblock the Notifications