ரொம்ப முக்கியமான முடிவு.. மா.செக்களை வரச்சொன்ன எடப்பாடி பழனிசாமி.. "அதுக்கு" ரெடியாகிட்டாராமே!
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட,செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தமிழ்நாட்டு அரசியலை அதிர வைத்து.. இப்படியெல்லாம் கூட கொலைகள் நடக்குமா என்று யோசிக்க வைத்த சம்பவம் என்றால் அது கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம்தான். ஒரு கொள்ளை.. அதை செய்வதற்கு ஒரு கொலை.. அதை செய்தபின் கொள்ளை அடித்தவர்கள் எல்லோரும் வரிசையாக கொலை செய்யப்படுவது என்று அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் இந்தியாவையே உலுக்கின.

ஜெயலலிதா மரணத்திற்கு பின் கடந்த 2017 ஏப்ரல் 24ல் கோடநாட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதில் எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் என்பவரும் கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். அதன்பின் கொள்ளையில் குற்றஞ்சாட்டப்பட்ட பலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இந்த கோடநாடு மர்ம மரணங்கள் மற்றும் கொள்ளை பற்றி தமிழ்நாடு போலீஸ் 5 தனிப்படை அமைத்து விசாரித்து வந்தது.
இந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்திற்கு பின் சரியாக 4 நாட்கள் கழித்து கொள்ளையில் ஈடுப்பட்ட கனகராஜ் விபத்து ஒன்றில் மர்மமாக மரணம் அடைந்தார். இவர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர். அதேபோல் இன்னொரு முக்கிய குற்றவாளி சயான் குடும்பத்தினர் விபத்தில் கொல்லப்பட்டனர். இதில் சயான் நூலிழையில் உயிர் தப்பினார்.
இந்த வழக்கில் சயான் நேரடியாக எடப்பாடி பழனிசாமி மீதே குற்றஞ்சாட்டி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை நோக்கி இவர் தனது கையை திருப்பி உள்ளார். எடப்பாடி பழனிச்சாமி சொல்லித்தான் கனகராஜ் இந்த திட்டங்களை தீட்டியதாக சயான் போலீசில் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இப்படி வழக்கில் போகஸ் எடப்பாடி பக்கம் திரும்பி உள்ளது. இந்த நிலையில்தான் வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக கூட்டம்: இந்த நிலையில்தான் திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட,செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதிமுக கூட்டத்தில் கோடநாடு வழக்கு விசாரணை மற்ற மாஜி அமைச்சர்கள் மீதான வழக்குகள் பற்றி விசாரணை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால் எதிர்கொள்வது குறித்து ஆலோசனை செய்யப்படும். தேர்தல் எப்போது நடந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பது குறித்து கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை செய்யப்படும் என்கிறார்கள். பாஜக கூட்டணி குறித்தும் ஆலோசனை செய்யப்படும் என்கிறார்கள்.
ஒரே நாடு ஒரே தேர்தல்: அதன்படி லோக்சபா தேர்தலை முன்கூட்டியே சில மாநில தேர்தல்களோடு சேர்த்து நடத்தவும், இதன் மூலம் ஒரே நாடு தேர்தல் முறையை கொண்டு வரவும் பாஜக முயல்வதாக கூறப்படுகிறது.
அதாவது இந்த வருட இறுதியிலேயே லோக்சபா தேர்தல் வரலாம் என்கிறார்கள். பல மாநில தேர்தல்களோடு சேர்ந்து இந்த தேர்தல் நடக்கலாம் என்று கூறப்படுகிறது. 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய அரசு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வரும் நிலையில்தான் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்து வருகிறது. செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ள நிலையில்தான் இந்த குழு அமைக்கப்பட்டு உள்ளது.
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழுவுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்குவார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்!












Click it and Unblock the Notifications