பாஜக யாருக்கு சப்போர்ட்? டெல்லியில் என்ன நடக்குது?எகிறிய எடப்பாடி.. ஓபிஎஸ் பற்றி காலையிலேயே விசாரணை
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ள நிலையில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனது வீட்டில் முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.
Recommended Video
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நேற்று அதிமுக பொதுக்குழுவில் கடுமையாக அவமதிக்கப்பட்டார். அவரை போடா, வாடா என்று எடப்பாடி ஆதரவாளர்கள் ஒரு பக்கம் கடுமையாக வசைபாடினர்.
இன்னொரு பக்கம் பொதுக்குழு மீண்டும் நடக்கும் என்று அவரின் அனுமதியே இல்லாமல் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார். ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடக்கும் என்று அவர் அறிவித்தார்.

டெல்லி பயணம்
இந்த நிலையில்தான் நேற்று பொதுக்குழு முடிந்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் டெல்லி சென்றார். நேற்று மாலை தனது மகன் ஓ பி ரவீந்திரநாத்துடன் அவர் விமானம் ஏறினார். டெல்லி சென்றுள்ள ஓ பன்னீர்செல்வம் அங்கு பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக ஓபிஎஸ் தரப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறதாம்.

தனியாக சந்திக்க திட்டம்
இன்று மாலைக்குள் அவரை எப்படியாவது 10 நிமிடமாவது சந்திக்க ஓபிஎஸ் முயன்று வருகிறாராம். இன்று குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்தலில் திரௌபதி முர்மு வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் உடன் இருந்தார். ஆனால் இவர்கள் தனியாக சந்திக்கவில்லை. பிரதமர் மோடியை தனியாக சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டுள்ளதால்.. இன்று இரவு சந்திப்பு நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு பொதுக்குழுவிற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஓபிஎஸ்
இந்த நிலையில் ஓபிஎஸ் டெல்லி சென்றது தெரிந்ததும் எடப்பாடி பழனிசாமி அதை பற்றி விசாரித்து இருக்கிறார். ஓபிஎஸ் மகன் மட்டும் டெல்லி செல்லாமல் அவரின் ஆதரவாளர்களும் பைகளோடு டெல்லி சென்றுள்ளனர். அவர்கள் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஓபிஎஸ்ஸின் அடுத்த மூவ் என்ன என்று எடப்பாடி இன்று காலை விசாரித்து இருக்கிறாராம்;.

திடீர் கூட்டம்
அவரின் வீட்டில் இன்று காலை திடீரென இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் வேலுமணி, தங்கமணி, பொள்ளாச்சி ஜெயராமன், கே.பி.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமி இவர்களிடம்.. ஓபிஎஸ் பிளான் என்ன.. டெல்லி பக்கம் சென்றுவிட்டார். டெல்லி அவர் பக்கம் நிற்குமா? ஏதாவது சிக்கலாக வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டு இருக்கிறாராம். டெல்லி சப்போர்ட் யாருக்கு இருக்கும் என்பது போல கேட்டு இருக்கிறாராம்.

என்ன நடக்கும்?
அதோடு இந்த மீட்டிங்கில்.. பாஜக நமது கட்சி விவகாரத்தில் தலையிட கூடாது. இதற்கு முன்பு வேண்டுமானால் தலையிட்டு இருக்கலாம். ஆனால் இப்போது தலையிட கூடாது. இனிமேல் பாஜக நம்முடைய விவகாரங்களில் கருத்து தெரிவிக்க கூடாது. கூட்டணி வேறு, உட்கட்சி விவகாரம் வேறு, என்று எடப்பாடி உறுதியாக சொல்லி இருக்கிறாராம். ஓபிஎஸ் மூலமாக டெல்லியில் இருந்து பிரஷர் வந்தாலும் அதை கண்டுகொள்ள கூடாது என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி தரப்பு இருக்கிறதாம்.
-
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்!












Click it and Unblock the Notifications