Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாமக திமுகவோடு சேரக்கூடாது.. கடுமையாக வேலை பார்க்கும் விசிக பாலாஜி.. பின்னணியில் ஷாக் காரணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராமதாஸ் தரப்பு பாமக திமுக கூட்டணிக்குள் எக்காரணம் கொண்டும் வரக்கூடாது என விசிக எம்எல்ஏ S.S. பாலாஜி தீவிரமாக காய் நகர்த்தி வருகிறாராம். இதில் திருமாவளவனுக்கு ஒரு கணக்கு இருந்தால் விசிக S.S. பாலாஜிக்கு வேறு ஒரு கணக்கு உள்ளதாம். இதன் காரணமாகவே அவர் பாமக வருகையை தீவிரமாக தடுக்க முயன்று கொண்டு இருக்கிறாராம்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த செல்வப்பெருந்தகை பாமக - திமுக கூட்டணி பற்றி கூறி இருந்தார், தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது. அதை சிதைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை திமுக கூட்டணியில் இருந்து வெளியே கொண்டுவர வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை பிரித்து தனிமையாக்கி, அதன் வாக்கு வங்கியை குறைத்து, சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின வாக்குகளை சிதறடித்து தமிழகத்தை பிடித்துவிட வேண்டும் என மதவாத பாஜக கனவு காண்கிறது.

VCK MLA Balaji

காங்கிரஸ் பாமக நிலைப்பாடு

பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக கூட்டணிக்குள் வருவதை திமுக தலைவர் தான் முடிவு செய்யவேண்டும். அவர்தான் கூட்டணிக்கு தலைவர். ராமதாஸும், விசிக தலைவர் திருமாவளவனும் நெருக்கமாக இருந்தவர்கள் தான். இருவருக்கும் இடையே இடைவெளி எல்லாம் இல்லை. அவருக்கு ஒன்று என்றால் இவர் பேசுவார். இவருக்கு ஒன்று என்றால் அவர் பேசுவார்.

விசிக கொடியை ராமதாஸ் ஏற்றியிருக்கிறார். வன்னியர் சங்க கொடியை திருமாவளவன் ஏற்றியிருக்கிறார். இவ்வாறு இணக்கமாக இருந்தவர்கள் தான் இருவரும். எனவே தேவை என்றால் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசி சரி செய்து கொள்வார்கள். அதை அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும் எனத் செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார்.

எஸ்.எஸ். பாலாஜி

இதன் காரணமாக தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பாமக இணையக்கூடும் என்ற யூகங்கள் எழுந்துள்ளது. இப்படி இருக்க, அந்த வாய்ப்பை முளையிலேயே கிள்ளியெறிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (VCK) திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி தீவிரமாக களமிறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எஸ்.எஸ். பாலாஜியின் இந்த திட்டங்களுக்குப் பின்னால் ஒரு முக்கியமான அரசியல் அச்சம் உள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திருப்போரூர் தொகுதியில் போட்டியிட்ட பாலாஜி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ம.க வேட்பாளரை வெறும் 1,900 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோற்கடித்தார்.

இந்த மிகச்சிறிய வாக்கு வித்தியாசம் தான் பாலாஜியின் தற்போதைய கவலைக்குக் காரணம். ஒருவேளை டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க, திமுக கூட்டணிக்குள் நுழைந்தால், தொகுதிப் பங்கீட்டின் போது திருப்போரூர் தொகுதி பா.ம.க-விற்குச் செல்ல வாய்ப்புள்ளது.

திருமாவளவன் ஒரு பக்கம் - பாலாஜி மறுபக்கம்

விசிக தலைவர் தொல். திருமாவளவன் தேசிய அரசியலையும், கொள்கை ரீதியான கூட்டணிகளையும் முன்னிறுத்திச் செயல்படும் வேளையில், எஸ்.எஸ். பாலாஜி தனது தனிப்பட்ட அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேறு ஒரு பாதையில் பயணிக்கிறார்.

பயத்தின் பின்னணி: ராமதாஸின் ஆதரவாளராகக் கருதப்படும் திருக்கச்சூர் ஆறுமுகம், எப்படியாவது திமுக கூட்டணியில் இடம் பிடித்து இதே திருப்போரூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதில் குறியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

தடுப்பு முயற்சி: இதனால், பா.ம.க எக்காரணம் கொண்டும் திமுக கூட்டணிக்குள் வரக்கூடாது என்பதில் பாலாஜி மிகுந்த உறுதியுடனும், தீவிரமாகவும் செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உட்கட்சிப் பூசல்: 'கோஷ்டி' மோதல் வெடிக்கிறதா?

பாலாஜிக்கு வெளிப்படையான அச்சுறுத்தல்கள் ஒருபுறம் இருக்க, விசிக-வின் உள்ளேயே அவருக்கு எதிராக ஒரு குழு உருவாகியுள்ளது கட்சித் தலைமையைத் திணறடித்துள்ளது.

30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்சிக்காக உழைத்தவர்கள், போராட்டங்களில் ஈடுபட்டு வழக்குகளையும் காயங்களையும் சந்தித்தவர்கள் இன்னும் எவ்விதப் பலனும் இன்றி இருக்கிறார்கள். ஆனால், மிக எளிதாக உள்ளே வந்தவருக்கு மீண்டும் எம்.எல்.ஏ சீட் கொடுப்பதா? என்பதுதான் அவர்களின் கேள்வி.

கட்சியை அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்பிய தங்களுக்கு முன்னுரிமை அளிக்காமல், பாலாஜிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவதை பழைய நிர்வாகிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இது பாலாஜிக்கு இரட்டை முனை நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

பா.ம.க-வின் கூட்டணி வருகையைத் தடுப்பாரா அல்லது உட்கட்சி எதிர்ப்புகளைச் சமாளிப்பாரா? எஸ்.எஸ். பாலாஜியின் அரசியல் நகர்வுகள் வரும் தேர்தலில் அவருக்கு மீண்டும் கைகொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+