தலைமை போட்ட ரகசிய உத்தரவு.. ஆனால் வெளியே வந்ததுமே ஓப்பனா சொல்லி.. ஒரே சங்கடம்.. பின்னணியில் இதுவா?
சென்னை : அதிமுகவில் இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின்போது வெளியே தொண்டர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என கோஷமெழுப்பினர்.
இந்த முழக்கம் உள்ளேயும் எதிரொலித்துள்ளது. இன்று மாவட்ட செயலாளர்கள் பலரும் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஒற்றைத் தலைமை தொடர்பாக நடைபெற்ற விவாதம் வெளியே செல்லக் கூடாது என உத்தரவிடப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளிப்படையாகச் சொல்லி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அதிமுக கூட்டம்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். வரும் 23-ஆம் தேதி பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஒற்றைத் தலைமை கோஷம்
அதிமுக அலுவலகத்திற்கு வெளியே நின்றிருந்த தொண்டர்கள் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என தொடர்ந்து கோஷம் எழுப்பினர். அப்போது அங்கிருந்த மற்றொரு தரப்பினர் ஓ.பன்னீர்செல்வம் தான் கட்சித் தலைமை பதவிக்கு வர வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் எழுந்தது. இதையடுத்து, அதிமுக கட்சி அலுவலக நிர்வாகிகள் நேரடியாக வந்து சமரசத்திற்கு ஈடுபட்டு கோஷம் எழுப்பியவர்களை சமாதானப்படுத்தினர்.

உள்ளேயும் குரல்
வெளியே ஒலித்த குரல் உள்ளே நடந்த கூட்டத்திலும் எதிரொலித்தது. கருத்துக் கேட்பு முறையில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலானோர் கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என வலியுறுத்தியுள்ளனர். மேலும், நான்காண்டு காலமாக அதிமுக ஆட்சியை வழிநடத்திய எடப்பாடி பழனிசாமியே ஒற்றைத் தலைமையாக வரவேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்கள் இக்கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வமே முன்மொழிய வேண்டும்
மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தனக்கு எதிராகத் திரும்பியதால் ஒ.பன்னீர்செல்வம் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக ஓ.பன்னீர்செல்வமே முன்மொழிய வேண்டும் என்றும், அ.தி.மு.கவில் 20 பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தலைவராக இருப்பார் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது.

முக்கிய உத்தரவு
ஒற்றைத் தலைமை பற்றி நடந்த விவாதம் வெளியே கசியக்கூடாது என கூட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில் பொன்னையன் பேசிய விஷயம் லீக்காகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இதனால், இன்றைய மீட்டிங்கில் நடக்கும் விஷயம் வெளியே கசிந்து விடக்கூடாது என்பதற்காக நிர்வாகிகள் செல்போன் எடுத்து வரக்கூடாது என முன்கூட்டியே உத்தரவிடப்பட்டிருந்தது.

ஜெயக்குமார்
ஆனால், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கூட்டம் முடிந்து வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்திக்கையில், கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பாக விவாதிக்கப்பட்டது என பகிரங்கமாக போட்டு உடைத்தார். பெரும்பான்மையான நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கழகத்திற்கு ஒற்றை தலைமைதான் தேவை என்பதை வலியுறுத்தியுள்ளனர். அதிமுக ஒரு வலிமையான இயக்கம் என்ற வகையிலே ஒற்றை தலைமை அவசியம் என்று வலியுறுத்திப் பேசினார்கள் எனத் தெரிவித்தார்.

போட்டு உடைத்த ஜெயக்குமார்
தொண்டர்களும் சரி, கட்சி நிர்வாகிகளும் சரி, ஒன்றைத் தலைமை தேவை என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது என்றும் காலத்தின் கட்டாயத்தின் அடிப்படையில் இன்றைக்கு அதுகுறித்து விவாதிக்கப்பட்டு, பெரும்பான்மையானவர்கள் அதற்கு அமோகமான ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள் என தீர்மானம் பற்றியும் ஓப்பனாகவே தெரிவித்தார் ஜெயக்குமார். உள்ளே நடந்த விஷயம் வெளியே கசியக்கூடாது எனக் கூறியிருந்த நிலையில், கூட்டம் முடிந்ததுமே ஜெயக்குமார் போட்டு உடைத்ததால் ஓ.பி.எஸ் ஏகத்துக்கும் அப்செட் ஆகியுள்ளார்.

ஓ.பி.எஸ் மீது கோபம்
ஜெயக்குமார், ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக குஷியாகி, செய்தியாளர்களிடம் பேசியதற்குக் காரணம் வேறு என்று கிசுகிசுக்கிறார்கள் அதிமுக சீனியர் நிர்வாகிகள். ராஜ்ய சபா தேர்தலில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான ஜெயக்குமாருக்கு சீட் கிடைக்காமல் போனதற்கு காரணம் ஓ.பி.எஸ் தான். தனது ஆதரவாளருக்கு சீட் வேண்டும் என அவர் முரண்டு பிடித்ததால் தான் ஜெயக்குமாருக்கு சீட் வாய்ப்பு பறிபோனது. இதனால், அவர் மீது ஆத்திரத்தில் இருந்து வந்தார் ஜெயக்குமார்.

பழிவாங்கல்
தனக்கு எம்.பி சீட் கிடைக்க விடாத ஆத்திரத்தை இன்று ஒற்றைத் தலைமை மேட்டரை பகிரங்கமாக வெளியில் சொல்லி பழிதீர்த்துக் கொண்டுள்ளார் ஜெயக்குமார். மீட்டிங்கில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக எழுந்த கருத்துகள், ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்பதையே சொல்கின்றன. இதனால் உற்சாகமான ஜெயக்குமார், வெளியே வந்ததுமே அந்த விஷயத்தை சொல்லி, விவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்த அதிமுக வட்டாரத்தினர்.
-
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications