உள்ளே வந்த தோனி.. இந்திய டி20 கேப்டன் மட்டுமன்றி ஆர்சிபி கேப்டன்சியையும் துறந்த கோலி.. பெரிய பிளான்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய டி 20 கேப்டன் பதவி மட்டுமின்றி ஆர்சிபி கேப்டன் பதவியையும் கோலி துறந்ததற்கு பின் மிகப்பெரிய காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பல விஷயங்களை மனதில் வைத்து கோலி இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்திய டி 20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்துள்ளார். டி 20 உலகக் கோப்பைக்கு பின் மொத்தமாக கேப்டன்சியில் இருந்து விலகிவிடுவேன். இந்திய ஒருநாள் மற்றும் டி 20 அணியில் மட்டுமே கேப்டனாக இருப்பேன் என்று கோலி அறிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிரடி திருப்பமாக ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்தும் கோலி பதவி விலகினார்.

இதுதான் கேப்டனாக என்னுடைய கடைசி ஐபிஎல் தொடர். நான் தொடர்ந்து எப்போதும் ஆர்சிபியில் இருப்பேன். ஆனால் கேப்டனாக இதுதான் கடைசி தொடர் என்று கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் முடிவிற்கு என்ன காரணம், ஏன் இப்படி கோலி பதவி விலகினார் என்று பலர் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். கோலியின் இந்த முடிவிற்கு பின் நிறைய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இது முழுக்க முழுக்க கோலியின் தனிப்பட்ட முடிவுதான் என்றாலும் 2 விதமான காரணங்களை மனதில் வைத்துதான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கோலி வருத்தம்

கோலி வருத்தம்

முதல் விஷயம் கோலி தனிப்பட்ட வகையில் டி 20 கேப்டன்சியை கூடுதல் சுமையாகவே கருதியதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கோலி மோசமாக பார்ம் அவுட் ஆகவில்லை என்றாலும் அவரின் பேட்டிங் கடந்த ஒன்றரை வருடமாக அவ்வளவு சிறப்பாக இல்லை. முக்கியமாக அதிக ரன்கள் எடுக்க முடியாமல் கோலி கஷ்டப்பட்டு வந்தார். தனிப்பட்ட வகையில் கோலி பேட்டிங் கொஞ்சம் மோசமான நிலையில் இருந்த காரணத்தால் அவர் இந்த முக்கியமான முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

அதிக அழுத்தம் ஐபிஎல்

அதிக அழுத்தம் ஐபிஎல்

தொடர் டி 20 போட்டிகள், ஐபிஎல் போட்டிகள், கொரோனா காரணமாக விதிக்கப்படும் பயோ பபுள் விதிகள் காரணமாக கோலி கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கோலி சுயமாக கேப்டன்சி மாற்றம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. முக்கியமாக ஐபிஎல் டி 20 பார்மெட் போட்டிகளால் கேப்டனாக கோலி அதிக அளவில் அழுத்தத்தை எதிர்கொள்கிறார். இந்த அழுத்தம் தனது தனிப்பட்ட பேட்டிங்கில் பாதிப்பை ஏற்படுத்தியதாக கோலி கருதியதாக கூறப்படுகிறது.

போட்டிகளால் கஷ்டப்பட்டார்

போட்டிகளால் கஷ்டப்பட்டார்

தொடர் போட்டிகள், கேப்டன்சி காரணமாக டி 20 போட்டி கேப்டன்சியில் இருந்து ஒதுங்கி இருக்கவே கோலி விரும்பி உள்ளார். இதைத்தான் அவர் மீட்டிங்கிலும் பேசியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தேசிய டி 20 அணி மட்டுமின்று ஐபிஎல் கேப்டன்சியில் இருந்தும் விலகும் முடிவை கோலி எடுத்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தொடங்கி வைத்ததாக கூறப்படுகிறது. கோலி முன்னெடுப்பின் பேரில் ரவி சாஸ்திரிதான் மீட்டிங்கில் இதை பற்றி பேசி இருக்கிறார்.

ரவி சாஸ்திரி தொடங்கி வைத்தார்

ரவி சாஸ்திரி தொடங்கி வைத்தார்

தான் பயிற்சியாளராக இருக்கும் போதே கேப்டன்சி மாற்றம் குறித்த முடிவை எடுத்துவிட வேண்டும். இதில் சிக்கல் ஏற்பட கூடாது. புதிய கேப்டனை புதிய பயிற்சியாளர் தேர்வு செய்யட்டும் என்று ரவி சாஸ்திரி கருதியதாக கூறப்படுகிறது. ரவி சாஸ்திரி தனது பயிற்சியாளர் பதவியில் இருந்து டி 20 உலகக் கோப்பைக்கு பின் பதவி விலக இருக்கிறார். அதற்கு முன்பே கேப்டன்சி மாற்றம், அது தொடர்பான பிரச்சனைகளை தீர்த்து வைத்துவிட வேண்டும் என்று ரவி சாஸ்திரி நினைத்து இருக்கிறார்.

தோனி வருகை பெரிய பிளான்

தோனி வருகை பெரிய பிளான்

அதேபோல் இந்திய டி 20 அணியின் உலகக் கோப்பை தொடருக்கான ஆலோசகராக தோணி நியமிக்கப்பட்டும் இருப்பதும் தற்காலிகமான முடிவு கிடையாது என்றும் கூறுகிறார்கள். தோனியின் வருகை எதிர்கால திட்டங்களை மனதில் வைத்து பிசிசிஐ எடுத்த முடிவாக பார்க்கப்படுகிறது. இந்திய டி 20 அணியை புதுப்பிக்கும் முயற்சி இது என்கிறார்கள். தோனியின் ஆலோசனைக்கு கீழ் புதிய டி 20 கேப்டனை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய அணியின் எதிர்காலம்

இந்திய அணியின் எதிர்காலம்

டி 20 உலகக் கோப்பை தொடருக்கு பின்பும் தோனிக்கு என்று பிசிசிஐ முக்கிய டாஸ்குகளை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு பக்கம் கோலியின் தனிப்பட்ட பேட்டிங் பார்ம் மற்றும் பிரஷருக்கு விடுதலை தர வேண்டும் என்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் இந்திய அணியின் எதிர்காலம் கருதி கோலியின் கேப்டன்சி மாற்றம், தோனியின் வருகை, பயிற்சியாளர் மாற்றம் உள்ளிட்ட எல்லா முடிவுகளும் ஒரே சேர எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+