நீங்க பார்த்துக்கோங்க.. விஜய்யை எச்சரித்த டெல்லி உளவுத்துறை.. உடனே கேன்சல் செய்த விஜய்.. என்னாச்சு?
சென்னை: மதிமுக தலைவர் வைகோவின் நாடாளுமன்ற உரைகளை தொகுத்து நூல் வடிவில் வெளியிடப்படும் விழா, ஆகஸ்ட் 4-ந்தேதி டெல்லியில் நடக்கிறது. மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, இந்த புத்தகத்தை வெளியிட முதல்வர் விஜய் பெற்றுக்கொள்கிறார் என்பதாகத்தான் முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவில் தேசிய அளவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கின்றனர். குறிப்பாக, வைகோவுக்கு நெருக்கமான அரசியல் தலைவர்கள், சீனியர் வழக்கறிஞர்கள், நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர்கள், எம்.பி.க்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களையெல்லாம் வைகோவே தொலை பேசியில் தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். பலரும் விழாவில் கலந்து கொள்ள ஒப்புதல் தந்துள்ளனர். அந்த வகையில், ஆகஸ்ட் 4-ந்தேதி டெல்லியில் நடக்கும் இந்த விழா, தேசிய அளவில் விஜய்யை முன்னிறுத்தும் நிகழ்வாகவும் அமையும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தன.

விஜய் வேண்டாம்
ஆனால், விஜய்யை இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என அவரிடம் தெரிவித்துவிட்டதாக வைகோ சொல்லியிருக்கிறார். நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டால், கட்டுப்படுத்த முடியாத பெரும் கூட்டம் திரளும். அதனால் விழாவை நீங்கள் தவிருக்குமாறும், நூலின் தமிழ் வெளியிட்டை சென்னையில் நடத்துகிற நிகழ்வில் நீங்கள் கலந்து கொள்ளுங்கள் என விஜய்யிடம் அவர் தெரிவித்ததாகவும் வைகோ சொல்லியிருக்கிறார்.
மத்திய உளவுத்துறையான ஐ.பி.
இதற்கிடையே, விஜய்யை தவிர்க்க வைகோ சொன்னதன் பின்னணியில் மத்திய உளவுத்துறையான ஐ.பி. இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, டெல்லி விழாவில் விஜய் கலந்து கொண்டால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் சிக்கல் வரும். கூட்டத்தை சமாளிக்க முடியாது. கரூர் சம்பவம் போல் ஒரு சம்பவம் நடந்து விட்டால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு ஒப்புக்கொண்டால், நீங்கள் விழாவை நடத்தலாம் என ஐ.பி. அதிகாரி கள் வைகோவிடம் பேசியிருக்கிறார்கள். அவர்கள் சொல்வதிலும் ஒரு உண்மை இருக்கிறது ; மேலும் டெல்லி காவல்துறை , அமீத்சாவின் மத்திய அரசின் உள்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் போதிய பாதுகாப்பு ஏற்பாடு களை டெல்லி அரசாங்கம் செய்து தருமா? என்பதில் உறுதியில்லை. அப்படி யிருக்கையில் எதற்கு ரிஸ்க் எடுக்க வேண்டும்? என யோசித்துத்தான் இந்த முடிவை விஜய்யிடம் சொல்லியிருக்கிறார் வைகோ என்று மதிமுக தரப்பிலி ருந்து ஒரு தகவல் கிடைக்கிறது.
விரும்பத்தகாத சம்பவம்
அதேசமயம், இந்த ரிஸ்க் குறித்து விஜய்யிடம் மாநில உளவுத்துறை விவரித்ததுடன், ஏதேனும் விரும்பத்தகாத சம்பவம் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் நடந்து விட்டால் அதன் பழி உங்கள் மீதுதான் விழும். ஏற்கனவே கரூர் விசயத்தில் சி.பி.ஐ. விசாரணையை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் நீங்கள் கலந்து கொள்ளும் வைகோ புத்தக வெளியீட்டு விழாவில் ஏதேனும் நடந்தால் அதனை எதிர்கொள்வது அவ்வளவு எளிதாக இருக்காது . அதனால் டெல்லி செல்வதை தவிர்க்கலாம் என்று எச்சரிக்கை செய்ததாம் மாநில உளவுத்துறை. இதனை வைகோவுக்கு விஜய் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனடிப்படையில் தான் விஜய்-வைகோ சந்திப்பு நடந்தது. அப்போது, டெல்லி ப்ரோக்கிராமை தவிர்க்கச் சொல்லி என்னிடம் சொல்லி விட்டதாக நீங்களே சொல்வது போல சொல்லி விடுங்கள் என்று வைகோவிடம் விஜய் தெரிவித்திருக்கிறார். அதன்படி நடந்து கொண்டிருக்கிறார் வைகோ என்று உளவுத்துறை வட்டாரங்களில் செய்தி பரவியுள்ளது.
- சிறப்பு நிருபர் எழில்


Click it and Unblock the Notifications
