சிக்கிய அடுத்த திமுக மாஜி அமைச்சர்? சிவசங்கர் மீது ரூ.3.35 கோடி மோசடி புகார்.. பகீர் கிளப்பிய தொழிலதிபர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மீது ரூ.3.35 கோடி மோசடி புகார் எழுந்துள்ளார். இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தொழிலதிபர் அருண்ராஜ் இன்று புகார் அளித்து பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

சென்னை கேகே நகரை சேர்ந்தவர் அருண்ராஜ். தொழிலதிபர். இவர் திமுகவின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சிவநேசன், உதவியாளர் லூயிஸ் கதிரவன் ஆகியோர் தன்னிடம் ரூ.3.35 கோடி மோசடி செய்திருப்பதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தொழிலதிபர் அருண்ராஜ் இன்று புகார் அளித்தார்.


Click it and Unblock the Notifications
