ராகு கேது பெயர்ச்சி 2026: கடகம், சிம்மம், கன்னி ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா?.. என்னென்ன யோகங்கள்?
ராகு கேது பெயர்ச்சி பலன் 2026: நிழல் கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு கேதுவின் பெயர்ச்சியானது நவம்பர் 13 ஆம் தேதி (ஐப்பசி 27) மாலை 5.14 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியால் கடகம், சிம்மம், கன்னி ஆகிய 3 ராசியினருக்கு கிடைக்கும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் வழிபாடுகள் குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
சர்ப்ப கிரகங்களில் ராகுவும் கேதுவும் சமசப்தம கிரகங்களாகும். 210 டிகிரிக்குள் இந்த கிரகங்களின் பார்வை இருக்கும். நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு கேது கிரகங்கள் 18 மாதங்களுக்கு ஒருமுறை பெயர்ச்சியாவது வழக்கம். வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஐப்பசி 27, நவம்பர் 13 ஆம் தேதி மாலை 5.14 மணியளவில் ராகு பகவான் அவிட்டம் மூன்றாம் பாதம், கும்பத்தில் இருந்து அவிட்டம் 2 பதமான மகரத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

கேது பகவான் மகம் 1 ஆம் பாதம் சிம்ம ராசியில் இருந்து, ஆயில்யம் 4 பாதமான கடக ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். இந்த சமயத்தில் கடகத்தில் குரு, மீனத்தில் சனி உள்ளனர். அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியால் கடகம், சிம்மம், கன்னி ஆகிய 3 ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசிக்கு ராகு பெயர்ச்சியாகிறார் என்பதால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பட்டீஸ்வரம் சென்று வருவது ஏற்றத்தைத் தரும். குடும்ப விஷயத்தில் அதீத கவனமாக இருப்பது நன்மை பயக்கும். மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவது, உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் மிகுந்த கவனம் தேவை. நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் இருப்பவர்கள், ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மாத்திரைகளை தவறாமல் சாப்பிடுவது நல்லது. இல்லையெனில் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு, வெர்டிகோ போன்ற நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
வண்டிகளில் செல்லும்போது சீட் பெட் கொள்வது நல்லது. ஹெல்மெட் போடுவது, குறைந்த வேகத்தில் வாகனங்களை இயக்குவது நன்மை பயக்கும். வாகனங்களில் உரிய விதிமுறைகளை கடைப்பிடிப்பது நல்லது. திருமண உறவில் பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குலதெய்வ வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். பட்டீஸ்வரம சென்று துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். 38 எலுமிச்சம்பழங்களை கொடுத்து வழிபாடு செய்து, அதில் 5ஐ மட்டும் வாங்கி வந்து பழச்சாறு செய்து அருந்துவது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு அற்புதமும், ஆனந்தத்தையும் தரும் காலகட்டம். பஞ்சபூத ஸ்தலங்களான காளகஸ்தி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சிதம்பரம், திருச்சியில் இருக்கும் திருவாணைக்காவலில் உள்ள கோயில்களுக்குச் சென்று வருவது மேன்மையைத் தரும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். ராகு கேது மாறினாலும், 12 இல் கேது வருவதால் விலையுயர்ந்த பொருள்கள், வேலை விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் அதீத கவனம் தேவை.
மனக் குழப்பங்கள் தீராத நிலைமை இருக்கும். யோசனை, கோபம், வருத்தப்படுவது, அழுவது, உங்களையே வருத்திக் கொண்டிருப்பது போன்ற நிலைமைகள் இருக்கும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவது நன்மையைத் தரும். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்து நல்ல மாற்றங்களும் வரும். மேலதிகாரிகளிடம் வார்த்தையை விடுவதைத் தவிர்ப்பது நல்லது.
கோபத்தை வெளிக்காட்டமால் இருப்பது நன்மையைத் தரும். இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் எல்லாம் பரிபூரண நிவர்த்தியாகும். கடல் கடந்த வியாபாரம், தொழில், உத்தியோகம், படிப்பு என இருக்கக்கூடியவர்களுக்கு நிறைய நன்மைகள் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பிலும், பழக்கவழக்கத்திலும் இருந்து வந்த கஷ்டங்கள் படிப்படியாகக் குறைவதை கண்கூடாகப் பார்க்கலாம். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளை அரவணைத்துக் கொள்ள வேண்டும்.
கன்னி
கன்னி ராசியினருக்கு கோயில் திருப்பணிகளை மேற்கொள்வது, யாத்திரைகள் மேற்கொள்வது போன்ற யோகங்கள் உண்டு. பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். கணவன், மனைவி சண்டை, குடும்ப சண்டை விஷயத்தில் எச்சரிக்கை தேவை. நிறைய விரயங்கள் ஏற்படும். விலையுயர்ந்த பொருள்களை அதீத கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ரங்கநாதப் பெருமாளை மனதாரா வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். எதிர்பார்க்காத நன்மைகள் பெரும் சந்தோஷத்தையும், ஏற்றத்தையும் ஏற்படுத்தும். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். குடும்பத்தில் யாருடைய தலையீடும் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. அதேபோல, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அலர்ஜி, சளி தொந்தரவு, தோல், கேல்சியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதீத கவனம் தேவை. விஷ்ணு காயத்ரி மந்திரத்தை தினந்தோறும் கேட்பது, படிப்பது நன்மையைத் தரும். வெள்ளிக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது ஏற்றத்தைத் தரும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்வதைத் தவிர்ப்பது நல்லது. கர்ப்பிணிகள் மருத்துவர்கள், பெரியவர்கள், துணையின் ஆலோசனைக் கேட்டு செயல்படுவது நல்லது. எந்த விஷயத்தையும் மனதிற்குள் போட்டுக் கொண்டு உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்ப்பது நல்லது.


Click it and Unblock the Notifications
