அரசு அதிகாரிகளை போட்டுக்கொடுத்த தவெக எம்எல்ஏக்கள்.. டைரியில் குறிப்பெடுத்த விஜய்.. ஏன்? பின்னணி
சென்னை: மாமல்லபுரத்தில் இன்று முதல்வர் விஜய், தவெக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஒவ்வொரு எம்எல்ஏக்களையும் தனித்தனியாக சந்தித்து பேசினார். இந்த சமயத்தில் தவெக எம்எல்ஏக்கள் சிலர் அரசு அதிகாரிகளை போட்டு கொடுத்த நிலையில் முதல்வர் விஜய் தனது டைரியில் அரசு அதிகாரிகளின் துறை, பெயர் விவரங்களை குறிப்பெடுத்து கொண்ட நிலையில் விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை பாய்கிறதா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு 6 மாதத்தை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் தான் இன்று மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் ட்ராப்பில் சிக்கிவிடாமல் தொகுதிகளில் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
அதோடு எம்எல்ஏக்களை தனித்தனியாக சந்தித்து பேசினார். அப்போது அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொகுதியில் கடந்த 6 மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் பற்றி எம்எல்ஏக்களிடம் கேட்டதோடு, புதிய திட்டங்கள் ஏதுவும் தேவையாக உள்ளதா? என்பது பற்றியும் கேட்டறிந்தார்.
மேலும் அதிகாரிகள் யாராவது பணி செய்ய விடாமல் தடுக்கிறார்களா?'' என்று எம்எல்ஏக்களிடம் தனித்தனியாக முதல்வர் விஜய் கேட்டுள்ளார். இந்த சமயத்தில் சில எம்எல்ஏக்கள் அரசு அதிகாரிகளை முதல்வர் விஜய்யிடம் போட்டு கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சில எம்எல்ஏக்கள், முதல்வர் விஜய்யிடம், எங்களை மக்கள் பணி செய்ய உள்ளூர் அதிகாரிகள் தடுக்கிறார்கள். அவர்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை. எங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்று கூறியுள்ளனர். இதையடுத்து அந்த அதிகாரியின் பெயர், பணியாற்றும் துறை உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்த விஜய் அதனை தனது டைரியில் குறிப்பெடுத்து கொண்டார். இதனால் அந்த அதிகாரிகள் மீது விரைவில் ஆக்ஷன் பாய்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.



Click it and Unblock the Notifications
