முடிஞ்சா இதுக்கு வாங்க.. நிர்மல் குமார் சொன்ன விஷயம்.. சம்பந்தமே இல்லாம பேசுறீங்க.. உதயநிதி பதிலடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்ந்து பெரும் புயலைக் கிளப்பி வருகிறது. மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசை எதிர்க்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டாதது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு முதலமைச்சர் விஜய் பதில் அளிக்காமல் மௌனம் காத்ததும், இடையில் அமைச்சர் நிர்மல் குமார் தலையிட்டுப் பேசியதும் அவையில் காரசாரமான விவாதத்திற்கு வழிவகுத்தது.

அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டாதது ஏன்? - உதயநிதி சரமாரி கேள்வி

சட்டப்பேரவையில் மேகதாது அணை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், காவிரி உரிமைப் போராட்டத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி வேறுபாடின்றி ஒரே அணியில் திரண்டு நிற்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டினார்.

Why No All-Party Meeting on Cauvery Issue Udhayanidhi Questions Nirmal Kumar Intervenes

கர்நாடக அரசு மேகதாது அண கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் காவிரி உரிமையைப் பாதுகாக்கவும், நமது மாநிலத்தின் வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்யவும் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட தவெக அரசு கூட்ட மறுக்கிறது. ஏன் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட அரசு தயங்குகிறது? என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேரவையில் தொடர்ந்து அழுத்தம் திருத்தமாகக் கேள்வி எழுப்பினார்.

முதல்வர் விஜய் மௌனம்... அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி பதில்

காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகா செல்ல யோசித்ததாக முதல்வர் விஜய் விளக்கமளித்த போதிலும், அனைத்துக் கட்சி கூட்டம் குறித்த உதயநிதியின் நேரடிக் கேள்விக்கு அவர் பதில் எதுவும் கூறாமல் மௌனமாக இருந்தார்.

அப்போது, முதல்வருக்கு ஆதரவாகத் பேசிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நிர்மல் குமார் அவையில் எழுந்து, "நாங்கள் யாருக்கும் பயப்படவில்லை.. அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுவதற்கும் நாங்கள் பயப்படப் போவதில்லை. தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாகப் பேசுவதற்காகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கும் வரலாம்.. அனைத்து கட்சி கூட்டம் கேட்கும் நீங்கள்.. இதற்கும் வரலாம்" என்று பதில் அளித்தார்.

சம்பந்தமே இல்லாமல் பேசுகிறார் அமைச்சர்! - உதயநிதி பதிலடி

அமைச்சர் நிர்மல் குமாரின் இந்தப் பதிலைக் கேட்டு உடனடியாக எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சரின் குறுக்கீட்டிற்கு மிகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

"நாங்கள் இங்கே மிக முக்கியமான காவிரி நீர் விவகாரம் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். பேரவைத் தலைவரான நீங்கள்தான் காவிரி விவகாரம் குறித்து மட்டுமே அவையில் பேச வேண்டும் என்று உத்தரவிட்டீர்கள். நாங்களும் உங்களது வார்த்தைக்கும் அவையின் விதிமுறைகளுக்கும் மதிப்பு கொடுத்து, காவிரி மற்றும் மேகதாது பிரச்சனை பற்றி மட்டுமே பேசி வருகிறோம்

ஆனால், அமைச்சர் நிர்மல் குமார் எந்தவிதச் சம்பந்தமும் இல்லாமல் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தைக் கொண்டு வந்து பேசுகிறார். காவிரி குறித்துக் கேட்கப்படும் கேள்விக்கு நேரடி பதிலைக் கூற முடியாமல், அமைச்சர் சம்பந்தமே இல்லாமல் திசை திருப்பிப் பேசுகிறார்" என்று சாடினார்.

காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய நேரடிக் கேள்விகளுக்கு முறையான பதில் கிடைக்காததாலும், அமைச்சரின் சம்பந்தமில்லாத குறுக்கீட்டாலும் பேரவையில் சில நிமிடங்கள் பெரும் காரசாரமான விவாதமும் பரபரப்பும் நிலவியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+