பட்டா. சிட்டா டாக்குமென்ட்டுகள் எதற்காக பயன்படுத்தப்படுகிறது? பட்டாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: பட்டாவின் பயன்கள், பட்டா எதற்காக தேவைப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். பட்டா சிட்டா ஆவணங்கள் எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதையும் பார்க்கலாம்.
இதுகுறித்து சுயதொழில் தொடங்குவோம் என்ற சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பட்டாவின் பயன்கள். பட்டா எதற்காக தேவைப்படுகிறது?

நிலப்பதிவு செய்வதற்காக: ஒரு விவசாய நிலத்தினையோ, காலி இடத்தையோ அல்லது கட்டிடத்துடன் கூடிய இடத்தை விற்பனை செய்யவோ அல்லது வாங்குவதற்கோ பட்டா சிட்டா கண்டிப்பாக தேவைப்படுகிறது. பட்டா சிட்டாவை வைத்தே ஒரு நிலத்தை வாங்கவோ விற்பனை செய்யவோ முடியும். தமிழ் நாட்டில் நில உடைமைக்கான ஆவணமாக பட்டா சிட்டா உள்ளது.
கடன் பெறுவதற்கு மற்றும் இழப்பீடு பெறுவதற்காக:
வங்கிகள் மூலம் சொத்தின் பேரில் கடன் பெறுவதற்கு பட்டா சிட்டா ஆவணம் தேவைப்படுகிறது. சொத்தின் உரிமை, சொத்தின் அளவு, சொத்து அமைந்துள்ள இடம் போன்றவற்றை கொண்டே கடன் பெறும் தகுதியை முடிவு செய்கிறார்கள். விவசாயம் நிலம் மற்றும் விவசாயாம் செய்து இயற்கை அழிவுகளால் பாதிப்பு அடைந்தாலோ, நிலத்தினை அரசு உபயோகத்திற்காக எடுத்துக்கொண்டாலோ அதற்கான இழப்பீட்டுத்தொகை பெறுவதற்கு பட்டா சிட்டா ஆவணம் முக்கியமான ஆவணமாக தேவைப்படுகிறது
சட்டபூர்வமாக நிலத்தின் உரிமையை நிலைநாட்ட:
நிலத்தின் மீது நில உரிமையாளரின் சட்ட பூர்வ உரிமையை நிரூபிக்க பட்டா சிட்டா முக்கிய ஆவணமாக இருக்கிறது. கட்டிடங்கள் போன்ற ஆக்கிரமிப்பை நிறுவி அவற்றை நிரூபிக்க எளிதாக இருக்கலாம். ஆனால் காலி நிலத்தையோ அல்லது விவசாய நிலத்தை அப்படி செய்ய முடியாது.
பட்டா வாங்க தேவையான ஆவணங்கள்,
பட்டாவை பெறுவதற்கு கட்டணம் எவ்வளவு? : ஆன்லைனில் பட்டாவினை கட்டணம் ஏதுமின்றி இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால் பட்டா மாறுதலுக்கு இசேவை மூலம் ரூ 60 கட்டணம் செழுத்த வேண்டும்.
ஆன்லைன் பட்டா பெறுவது எப்படி? பட்டாவினை ஆன்லைனில் பொது மக்கள் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் மற்றும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
1.சரியான அரசு இணையத்தளத்திற்கு https://eservices.tn.gov.in/eservicesnew/home.html செல்லவேண்டும்.
2.பின்வரும் பக்கத்தில் உள்ள 'பட்டா/சிட்டா விவரங்களை பார்வையிட' என்ற இணைப்பின் வழியாக சென்றால் , நிலப்பதிவேடு நில உரிமை(பட்டா/சிட்டா) விவரங்களை பார்வையிட என்ற பக்கம் தோன்றும்.
3.நில விவரங்களை பார்வையிடும் பக்கத்தில் மாவட்டம், வட்டம் மற்றும் நில வருவாய் கிராமம் ஆகியவற்றை மெனு மூலம் தேர்ந்தெடுக்கவும். இதில் பட்டா எண் அல்லது சர்வே நெம்பர் மற்றும் உட்பிரிவு போன்றவற்றை போன்றவற்றை உள்ளீடு செய்து பக்கத்தில் தெரியும் பாதுகாப்பு அங்கீகார மதிப்பை உள்ளீடு செய்து சமர்பிக்கவும் பட்டனை அழுத்தவும்.
உடனடியாக உங்களுக்குரிய பட்டா முழு விவரங்களுடன் தோன்றும். இதை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். சேமித்துக் கொள்ளலாம்.
புதியதாக நிலம் வாங்கினால் ஆன்லைனிலேயே பட்டா மாறுதல் விண்ணப்பிக்கலாம்
பட்டா சிட்டா ஆன்லைனில் பார்வையிட பிரிண்ட் செய்ய லிங்க்: 👇https://eservices.tn.gov.in/eservicesnew/home.html
பட்டா மாறுதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க்:👇
https://tamilnilam.tn.gov.in/citizen/
ஆன்லைனில் வின்னப்பித்து இருந்தால் பட்டா சிட்டா விவரங்களை குறிப்பு எண் கொண்டு ஆன்லைனில் சரிபார்க்க பட்டா நகலை பார்வையிட:
பட்டா சிட்டா ஆன்லைனில் பார்க்க லிங்க்: 👇https://eservices.tn.gov.in/eservicesnew/home.html
மேலும் விவரங்கள்: 👇👇👇
https://drive.google.com/drive/folders/1q2OZ9Qk6vpZj6EXgi8OozYVr0PAJK5NX?usp=drive_link
இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications