மூன்றே மாதங்களில் மக்களிடம் குறைந்த ரஜினிகாந்த் செல்வாக்கு.. காரணம் இதுதான்!
Recommended Video

சென்னை: இந்தியா டுடே டிவி சேனல், ஆக்சிஸ் மை இந்தியா ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவில், நடிகர் ரஜினிகாந்த் செல்வாக்கு மக்களிடையே குறைந்து விட்டது என்பது தெரியவந்துள்ளது.
2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் கமல்ஹாசன் முதல்வராக வரவேண்டும் என்று 8 சதவீத மக்கள் விரும்பினர்.
அதேநேரம், இப்போது ஜனவரி நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கமல்ஹாசன் செல்வாக்கு 2 சதவீதம் அதிகரித்துள்ளது.

கமல்ஹாசன் மக்கள் ஆதரவு
அதாவது, கமல்ஹாசன் முதல்வராக வரவேண்டும் என்று 10 சதவீத மக்கள் விருப்பம் தெரிவிக்கிறார்கள். எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று 43 சதவீத மக்கள் விரும்பும் நிலையில், அவருக்கு அடுத்த இடத்தில், கமல்ஹாசன் முன்னேறியுள்ளார். பாமகவின் அன்புமணி ராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், உள்ளிட்டோருக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

வித்தியாசம்
இதில் ரஜினிகாந்த் மட்டும் வித்தியாசம். அக்டோபரில் 6 சதவீதம் பேர் ரஜினிகாந்த் முதல்வராக விரும்பிய நிலையில் இப்போது 5 சதவீதம் பேர் மட்டுமே அவ்வாறு தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். கட்சியை தொடங்காத நிலையில் ரஜினிகாந்தின் செல்வாக்கு ஏன் சரிவடைந்தது என்ற கேள்வி சாமானிய மக்களிடமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், இந்த மூன்று மாத கால கட்டங்களில் ரஜினிகாந்த் அளித்த சில பிரஸ்மீட்தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

சர்ச்சை
அதில் முக்கியமான ஒன்று, 'யார் அந்த 7 பேர்' என்பது. நவம்பர் மாதம், சென்னை ஏர்போர்ட்டில் பிரஸ் மீட் செய்தார் ரஜினிகாந்த். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 தமிழர்களை விடுதலை செய்வது தொடர்பான கேள்விக்கு யார் அந்த ஏழு பேர் இன்று ரஜினிகாந்த் அளித்த பதில் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மோடிக்கு ஆதரவு
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ரஜினிகாந்த் மறுநாளே மற்றொரு பிரஸ்மீட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அதிலும் ஒரு சர்ச்சை கருத்தை தெரிவித்தார். மோடிக்கு எதிராக பல கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ள சூழ்நிலையில் மோடிதான் பலசாலி என்பது தெளிவாகிறது என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

கட்சி அறிவிப்பு
இந்தியா டுடே, கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் மோடியின் செல்வாக்கு குறைந்து உள்ளது. ராகுல் காந்தியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், செல்வாக்கு குறைந்து கொண்டிருந்த ஒருவருக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியது இவரது செல்வாக்கையும் குறைந்து விட்டது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதேபோல 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி புதிதாக கட்சி, தொடங்க உள்ளதாக அறிவித்தார் ரஜினிகாந்த். ஓராண்டு நிறைவடைந்து விட்ட நிலையில் படங்களில் பிசியாக உள்ளார் ரஜினிகாந்த். இன்னும் கட்சியை துவங்கவில்லை.

ஓராண்டு ஆன கட்சி அறிவிப்பு
கடந்த டிசம்பர் மாதம் வரை காத்திருந்த பொதுவான மக்களும் கூட இப்போது அவரது பேச்சில் நம்பிக்கை அற்று அவர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கலாம். இதுவும் ரஜினிக்கு, மக்கள் செல்வாக்கு குறைந்ததற்கு ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. ரஜினிகாந்த் இன்னமும்கூட திரையுலகில் உச்ச நட்சத்திரமாக உள்ளார். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அவரது திரைப்படங்களால், ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால் அரசியல் என்று வந்து விட்டால், அவரது பேட்டிகள் சாமானியர்களையும் கோபப்படுவதாக அமைந்துவிடுகிறது, அதைத்தான் இந்த கருத்துக் கணிப்பு தெளிவாக காட்டுகிறது.
-
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
திமுகவில் மீண்டும் ‘செயல் தலைவர்’ பதவி? களமிறக்கப்படும் உதயநிதி - கனிமொழி.. ஸ்டாலின் பிளான் என்ன? -
கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து... பறந்து போயிடுத்து! ஸ்டாலினை பார்த்த ஆளூர்? எம்பியாக்கும் திருமா? -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
ஃபேக் நியூஸ்.. தூக்கம் தொலைத்த திமுக நிர்வாகிகள்.. களம் இறங்கிய திமுக தலைமை.. வில்சன் எம்பி அதிரடி -
திமுகவிற்கு குட்பையா? தனிச்சின்னத்தில் போட்டியிட துடிப்பது ஏன்? சர்ச்சைக்கு நடுவே விளக்கிய ஜவாஹிருல்லா -
வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ! திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் தவெக! அடித்து துவைத்த அர்ஜுன் சம்பத் -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம்












Click it and Unblock the Notifications