அதுமட்டும் நடந்துடவே கூடாது.. செந்தில் பாலாஜியை கண்காணிக்கும் கோட்டை வட்டாரம்? 2 ஷாக் காரணங்கள்
சென்னை: புழல் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆளும் தரப்பு தீவிரமாக கண்காணித்து வருகிறதாம். இரண்டு முக்கியமான காரணங்களுக்காக அவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
சமீபத்தில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை ரெய்டுக்கு உள்ளானார். அதோடு அமலாக்கத்துறை மூலம் கைதும் செய்யப்பட்டார்.
அவர் வீட்டில் ரெய்டு மற்றும் கைதுக்கான காரணத்தை அமலாக்கத்துறை பொதுவில் வெளியிடவில்லை. அதே சமயம் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் ஓய்வில் இருந்தார். அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
புழல் சிறையில் முதல் வகுப்பு செல்லில் அவர் அடைக்கப்பட்டு உள்ளார். புழல் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆளும் தரப்பு தீவிரமாக கண்காணித்து வருகிறதாம். இரண்டு முக்கியமான காரணங்களுக்காக அவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
அதன்படி செந்தில் பாலாஜியின் உடல்நிலையை தீவிரமாக அரசு தரப்பு கண்காணித்து வருகிறது. புழல் சிறை மருத்துவர்களே காலை மாலை செந்தில் பாலாஜி உடலை ஆய்வு செய்கிறார். ஆனாலும் கூட இடை இடையே முதல்வர் தரப்பில் இருந்தும் செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்த அப்டேட் கேட்கப்படுகிறதாம். முக்கியமாக அவருக்கு மூச்சு விடுவதில் சிரமமாக இருக்கிறதா? ஓய்வு எடுப்பதில் சிரமமாக இருக்கிறதா என்றும் கேட்டு வருகிறார்களாம்.
உடல்நிலை நலிவுற்று இருக்கும் அவர் எக்காரணம் கொண்டும் கஷ்டத்தை அனுபவிக்க கூடாது என்பதில் அரசு சிரத்தையாக இருக்கிறதாம். ஆனால் அதே நேரம் அவருக்கு அதீதமாக சேவைகள் வழங்கப்பட கூடாது. புழல் சிறையில் முதல் வகுப்பு கைதிக்கு வழங்கப்படும் சலுகைகள் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும் அரசு உறுதியாக இருக்கிறதாம்.
அவர் இப்போது கேண்டீனில்தான் வாங்கி சாப்பிடுகிறார். உள்ளே கொடுக்கும் சாப்பாட்டை சாப்பிடுவது இல்லையாம் . விரைவில் மனு வெளியில் இருந்து அவர் வாங்கி சாப்பிட வாய்ப்பு உள்ளது. மற்றபடி முதல் வகுப்பு கைதிகளுக்கு இருக்கும் மேசை, சேர், ஃபேன் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதாம். அங்கே, புழல் சிறையில் முதல் வகுப்பு கைதிக்கு வழங்கப்படும் சலுகைகள் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும் அரசு உறுதியாக இருக்கிறதாம்.
இதற்கு முக்கிய காரணம் உள்ளது. அவருக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டால் அதை காரணம் காட்டி செந்தில் பாலாஜியை திகாருக்கு கொண்டு செல்ல அமலாக்கத்துறை மனு கொடுக்கும். அதை தடுக்கவே ஆளும் தரப்பை விட்டு பிடிக்க முடிவு செய்துள்ளதாம்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications