பிளான் பி.. சசிகலாவின் திடீர் அட்டாக்.. குறி அதிமுகவிற்கு இல்லையாம்.. விழித்து பார்த்த திமுக
சென்னை: சசிகலா திடீரென ஆளும் திமுகவை விமர்சனம் செய்து பேசுவதற்கு பின் பல்வேறு முக்கிய காரணங்கள் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்பதில் சசிகலா தீவிரமாக இருக்கிறார். ஆனால் அதிமுகவில் இருக்கும் டாப் நிர்வாகிகள் யாரும் சசிகலாவுக்கு ஆதரவாக இல்லை.
சமீபத்தில் வந்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு கூட சசிகலாவுக்கு ஆதரவாக இல்லை சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளர் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மேல்முறையீடு
இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு செய்யும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு இடையில்தான் தற்போது சசிகலா ஆன்மீக பயணத்தை மூன்றாம் கட்டமாக நடத்தி வருகிறார். திருச்சி, மதுரை, திருச்செந்தூர் என்று கோவில் கோவிலாக சசிகலா மூன்றாம் கட்ட பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தை அப்படியே அரசியல் பயணமாக மாற்றும் திட்டத்திலும் அவர் இருக்கிறாராம். அதாவது போகிற வழியில் தொண்டர்கள், உள்ளூர் அளவில் வலுவாக இருக்கும் அதிமுக நிர்வாகிகளை சந்திக்கும் திட்டத்தில் அவர் இருக்கிறாராம்.

ஆனால் சிக்கல்
இதற்கு முன்பே இதே போன்ற திட்டதோடுதான் சசிகலா ஆன்மீக பயணம் மேற்கொண்டார். ஆனால் அதில் அவருக்கு பெரிய ஆதரவு கிடைக்கவில்லை. ஓ ராஜாவை சந்தித்ததை தவிர பெரிதாக அதிமுக பக்கத்தில் இருந்து சசிகலாவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. இந்த ஆன்மிக பயணதிலாவது தனக்கு அதிமுக நிர்வாகிகள் சிலர் ஆதரவு தருவார்கள் என்று அவர் நம்புகிறாராம். அதோடு இந்த பயணத்தின் ரியாக்சனை பார்த்துவிட்டு பல்வேறு மாவட்ட அளவில் கூட்டங்களை நடத்த அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கூட்டங்கள் மூலம் தனது பலத்தை காட்ட நினைக்கிறாராம்.

என்ன பிளான்
இந்த நிலையில்தான் திடீரென திமுகவை வலுவாக எதிர்க்கும் வியூகத்தை சசிகலா கையில் எடுத்துள்ளார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தன்னை எதிர்கட்சி போல முன்னிறுத்த அவர் முடிவு செய்துள்ளார். இதன் மூலம் அதிமுகவின் கவனத்தை ஈர்க்க முடியும் என்று அவர் நம்புகிறார். திமுகவை கடுமையாக விமர்சித்தால் அதிமுக தொண்டர்கள் குஷியாகி தன்னை பார்ப்பார்கள் என்று சசிகலா நம்புகிறாராம். இதற்காகவே நேற்று திமுகவின் ஓராண்டு ஆட்சி தினத்தன்று அக்கட்சியை கடுமையாக விமர்சித்தார் என்கிறார்கள்.

என்ன சொன்னார்
திமுக ஆட்சி சரியாக இல்லை. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றவில்லை. நான் ஆட்சிக்கு வந்தால் அம்மா எப்படிச் செய்தார்களோ அது போல எந்த குறையும் இல்லாமல் செய்வேன். நல்ல ஆட்சியை மக்களுக்கு நான் வழங்குவேன். இப்போது சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை. மக்களின் கஷ்டத்தை நான் போக்குவேன்.
Recommended Video

மக்கள் கஷ்டம்
மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். திமுக ஆட்சியில் மக்களுடைய மனது நிறைந்ததாகத் தெரியவில்லை, என்று சசிகலா திமுகவை விமர்சிக்கவும் இதுவே காரணம் என்கிறார்கள். அதோடு திமுகவை விமர்சனம் செய்தால் பாகவின் ஆதரவு பார்வை தன் பக்கம் திரும்பும் என்று சசிகலா நம்புகிறாராம். சசிகலாவின் திடீர் எதிர்ப்பை திமுகவும் கூர்ந்து கவனித்து வருகிறதாம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications