அறநிலையத்துறை குறித்த பெருமிதம் இருக்கட்டும் சார்.. நடைமுறையில் கோவில்களில் என்ன நடக்கிறது தெரியுமா?
சென்னை: திமுகவின் 3 ஆண்டுகால ஆட்சியில் 2 ஆயிரத்து 226 திருக்கோவில்களில் திருப்பணிகள் முடித்து குடமுழுக்கு விழா சிறப்பாக நடத்தப்பட்டிருக்கிறது. 10 ஆயிரத்து 238 திருக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது என இந்து சமய அறநிலையத்துறை குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்கள், எப்படி இருக்கிறது என்பதை முதல்வர் ஸ்டாலின் தயவு செய்து அறிந்திருக்க வேண்டும் என்பது பக்தர்களின் குமுறல்.
கோவில்களுக்கு செல்வதே வழிபடுவதற்குதான்.. கோவில்களில் அர்ச்சனை செய்வதை பக்தர்கள் மிக முக்கியமான ஒன்றாக விரும்புகின்றனர். ஆனால் தமிழ்நாட்டின் எத்தனை கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை 'முறைப்படி' அர்ச்சனை பொருட்களை விற்பனை செய்கிறது? கோவில்களின் அடிப்படையான அர்ச்சனை பொருட்கள் எந்த கோவிலிலும் விற்பனை செய்யப்படுவதில்லை என்பதுதான் நாம் கீழே பயணித்த கோவில்களில் நேரில் கண்ட உண்மை.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றோம்.. அர்ச்சனைக்கான பொருட்கள், அங்க வஸ்திரம் உள்ளிட்டவற்றை காலணிகள்- செல்போன் பாதுகாக்கும் இடத்தில் ஒரே ஒரு ஒருவர் விற்பனை செய்கிறார். அர்ச்சனை பொருட்கள் அத்தனையும் மொத்தமாக அவரிடம்தான் வாங்கியாக வேண்டும். மொத்த அர்ச்சனை பொருட்களுக்கும் ரூ.700 வாங்குகிறார்.. இவ்வளவு தொகையா? என கேட்டால் நிர்வாகம்தான் விற்பனை செய்ய சொல்கிறது என்கிறார். சரி ரூ.700-க்கு பில் தருகிறார்களா? இல்லை. உண்மையிலேயே இந்து சமய அறநிலையத்துறையோ கோவில் நிர்வாகமோதான் இப்படி விற்க சொல்கிறதா? என்பது எவருக்குமே தெரியாது.. கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு விட்டு வந்தால் போதும் என்கிற அவசரகதியில் கடந்து செல்வது வழக்கமாகிவிட்டது. கோவிலுக்குள் நுழைந்து கட்டண ரசீதை வாங்கி வரிசையில் என்னதான் நின்று கொண்டிருந்தாலும், அர்ச்சகர்கள் , வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு கியூவில் நிற்பவர்களை ஏளனமாகப் பார்த்துவிட்டு சுவாமி தரிசனத்துக்கு அழைத்துச் செல்வது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மதுரை கள்ளழகர் திருக்கோவில், பழமுதிர்ச்சோலை முருகன் கோவில்களிலும் இதே நிலைமைதான்.

பழனி மலை முருகன் கோவிலில் ஏகப்பட்ட இந்துசமய அறநிலையத்துறை விற்பனை நிலையங்கள் இருக்கின்றன. அவை அனைத்துமே பஞ்சாமிர்த விற்பனை கடைகள்தான். அர்ச்சனை செய்யப்பட்ட பஞ்சாமிர்த கடைகள்தான் இவை.. ஆனால் அர்ச்சனைக்கான பொருட்கள் மலையில் எந்த ஒரு கடையிலுமே விற்கப்படுவதும் இல்லை. 3 பஞ்சாமிர்த டப்பா வாங்கினாலும் ரூ.10 மஞ்சள் பைக்காக தனியே கொடுத்தாக வேண்டும். இதற்கு எல்லாம் எந்த ஒரு பில்லுமே கிடையாது.. இந்து சமய அறநிலையத்துறையே பஞ்சாமிர்தம் வாங்கினால் கூடுதலாக ரூ.10க்கு மஞ்சள் பை விற்பனை செய்ய சொல்கிறதா? அல்லது விற்பனை செய்வரின் பாக்கெட்டில் அது சேருகிறதா? என்பது எப்படி பக்தர்களுக்கு தெரியும்?

சிதம்பரம் நடராஜர் கோவிலை எடுத்துக் கொள்ளுங்கள்.. காலணிகளைப் பாதுகாக்க கூட ஒரு இடம் கிடையாது. கோவில் முன்பாக உள்ள ஒரு தனியார் நடத்தும் இடத்தில்தான் ரூ.10 கொடுத்து காலணிகளை விட்டுச் செல்ல வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலிலும் இந்து சமய அறநிலையத்துறை பிரசாதம் விற்கிறது.. ஆனால் அர்ச்சனை பொருட்களை வெளி கடைகளில் இருந்துதான் வாங்கிச் செல்ல வேண்டும். ஏன் பக்தர்களின் வசதிக்காக கோவிலுக்கு வந்து முகம் சுளிக்காமல் மனம் நொந்து போகாமல் திரும்புவதற்காக நியாயமான விலையில் அர்ச்சனை பொருட்களை விற்பனை செய்ய ஒரு கடையை திறந்து வைக்க முடியாதா?
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள சூரியனார் கோவிலிலும் இப்படி வெளியே இருக்கும் கடைக்காரர்களுக்குதான் பணத்தை கொட்டித் தந்தாக வேண்டும்; அந்த கடைக்காரர்களே 'ஏஜெண்டுகளாக' மாறி கோவிலுக்குள் விரைவாக பூஜை செய்து தர அர்ச்சகர்களை ரெடி செய்துவிடுகிற கொடுமையையும் ஏற்றாக வேண்டிய நெருக்கடியை உருவாக்குகின்றனர். அந்த அர்ச்சகருக்கு தனியாக பணம் சாரி தட்சணை தந்தாக வேண்டும்.

அதேபோல பெரும்பாலான கோவில்களில் தற்போது தேங்காய் உடைப்பதற்கு தனியே 2 அர்ச்சகர்கள் இருக்கின்றனர். அந்த தேங்காயை உடைக்கவும் 'தட்சணை' கேட்கிற கொடுமையை பல கோவில்களில் பார்க்கத்தான் முடிகிறதே.
பக்தர்கள் ஆலயங்களுக்கு வந்துவிட்டு திரும்பும் போது இத்தகைய குமுறல்களுடன் திரும்புவதை தவிர்க்க, மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டிப் புகழும் இந்து சமய அறநிலையத்துறை இனியேனும் நடவடிக்கை எடுக்குமா? அல்லது கொள்ளையர்களின் கூடாரமாகவே கோவில்கள் இருந்துவிட்டு போக வேண்டுமா? என்பதே ஆன்மீக அன்பர்களின் ஆதங்கம்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications