நள்ளிரவில் திக்திக்.. நடுக்கடலில் மோதிக் கொண்ட தமிழக- கர்நாடக மீனவர்கள்! நடுக்கடலில் நடந்தது என்ன
தமிழ்நாடு, கர்நாடக மீனவர்களுக்கு இடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாடு மற்றும் கர்நாடக மீனவர்களுக்கு இடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் குமரிக் கடல் பகுதியில் தினசரி பல ஆயிரம் மீனவர்கள் மீன்பிடி தொழிலைச் செய்து வருகின்றனர். ஏற்கனவே, அங்கு இலங்கை கடற்படையால் மீனவர்கள் சிக்கலை எதிர்கொண்டு வருகிறார்கள்.
இதற்கிடையே அங்குத் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மீனவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பு மீனவர்களும் நடுக்கடலில் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

மீனவர்கள்
தமிழ்நாட்டில் மீன்பிடி தொழிலையே பல லட்சம் பேர் பிரதான தொழிலாகச் செய்து வருகிறார்கள்.. பொதுவாகக் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வோர் இரு வகைகளாக மீன்பிடி தொழிலைச் செய்வார்கள். மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்துவிட்டு ஓரிரு நாட்களில் திரும்பிவிடுவார்கள். இவர்கள் பெரும்பாலும் கரையை ஓட்டியே மீன்பிடிப்பார்கள். கடலில் நன்கு உள்ளே இவர்களால் செல்ல முடியாது.

குமரி கடல் பகுதி
அதேநேரம் மற்றொரு தரப்பு மீனவர்கள் கடலிலேயே தங்கி மீன் பிடிப்பார்கள். அதாவது இவர்கள் சமையல் உள்ளிட்ட அனைத்து அடிப்படை பொருட்களை எடுத்துக் கொண்டு நடுக்கடலில் சென்று மீன்களைப் பிடிப்பார்கள்.. நாள் கணக்கில் இவர்கள் கடலில் சென்று மீன்பிடிப்பார்கள் என்பதால் இவர்களால் கடலில் அதிக தொலைவுக்குச் செல்ல முடியும்.. குளச்சல் முட்டம், தேங்காய் பட்டணம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களும் இப்படி தான் குமரிக் கடல் பகுதியில் தங்கி மீன் பிடித்து வருகிறார்கள்.

நடுக்கடலில் மோதல்
அதேபோல இங்குக் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்களும் மீன் பிடித்து வருகிறார்கள். அவ்வப்போது இரு தரப்பினருக்கும் இடையே சில சச்சரவுகள் எழுவது வாடிக்கை. இந்தச் சூழலில் நள்ளிரவில் நடுக்கடலில் இரு தரப்பு மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சாவாளை வகை மீன்களைப் பிடிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கர்நாடக மீனவர்கள் தடை செய்யப்பட்ட சாவாளை மீனைப் பிடித்ததாகக் கூறப்படுகிறது.

என்ன நடந்தது
கர்நாடகாவைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் குமரி நடுக்கடல் பகுதியில் சாவாளை மீன்களைப் பிடித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகக் கர்நாடக மீனவர்களைக் குமரி விசைப்படகு மீனவர்கள் தட்டி கேட்டுள்ளனர். மேலும், அவர்களின் படகுகளையும் குமரி விசைப்படகு மீனவர்கள் சிறைபிடிக்க முயன்றனர். இதன் காரணமாக நடுக்கடலிலேயே இரு தரப்பு மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்குப் பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications