அப்போலாம் பார்ப்பதே அரிதாச்சே.. இப்போ அடிக்கடி தோன்றும் விஜயகாந்த்.. பூரிக்கும் தேமுதிக தொண்டர்கள்!
பொதுவெளியிலும் புகைப்படத்திலும் அடிக்கடி தோன்றும் விஜயகாந்த்
சென்னை: தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் அண்மைக்காலமாக அடிக்கடி பொதுவெளியிலும் புகைப்படங்களிலும் தோன்றுவதற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
போலீஸ் உடையில் மிடுக்குடன் 80, 90களில் வெளிவந்த படங்களில் நடித்தவர் விஜயகாந்த். கமல்ஹாசன், ரஜினிகாந்த் என நடிகர்கள் டாப்பில் இருந்த நிலையிலும் விஜயகாந்த் தனக்கென ஒரு பாணியை வகுத்து கொண்டு அவர்களுக்கு இணையாக நட்சத்திரமாக ஜொலித்தார்.
இதற்கு நடிப்பு மட்டும் காரணமில்லை, அவரது இளகிய மனசு, கடும் உழைப்பு, உதவும் குணம் உள்ளிட்டவை ஆகும். இவரது படங்கள் அந்த நாட்களில் 100 நாட்கள் வரையெல்லாம் ஓடி பிளாக்பஸ்டர் படங்களாக இருந்துள்ளன.

விஜயகாந்த்
விஜயகாந்தையும் ஆக்ஷனையும் பிரிக்க முடியாது என்பது போல் இவரது சண்டை காட்சிகள் பக்காவாக அமைந்திருக்கும். நிறைய புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். அதிலும் தான் டாப் ஸ்டாராக இருந்த போதிலும் புதுமுக இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு வாழ்வளித்தார். இவர் கடைசியாக 2009 ஆம் ஆண்டு கடைசியாக எங்கள் ஆசான் எனும் படத்தில் நடித்திருந்தார்.

தேமுதிக
அதற்கு முன்னதாக 2005 ஆம் ஆண்டு தேமுதிக எனும் அரசியல் கட்சியை தொடங்கினார். 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார். 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் போட்டியிட்டு எம்எல்ஏவானார். அது போல் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எதிர்க்கட்சித் தலைவரானார்.

முதல்வராக இருந்த ஜெயலலிதா
முதல்வராக இருந்த ஜெயலலிதாவை சட்டமன்றத்திலேயே பாயிண்ட் பாயிண்ட்டாக கேட்டு அவையில் அனல் பறக்க செய்தார். இவருக்கு அண்மைக்காலமாக உடல்நல பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் அரசியல் பணிகளில் தற்போது ஈடுபடாமல் கட்சி நலனுக்கான முடிவுகளை மட்டும் எடுத்து வருகிறார். மற்றபடி கட்சியை மனைவி பிரேமலதா, மகன் விஜய பிரபாகரன், மைத்துனர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் நடத்தி வருகிறார்கள்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் திருமண நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி விஜயகாந்தின் வீட்டிற்கு அவருடைய மைத்துனரும் கட்சியின் துணை பொதுச் செயலாளருமான சுதீஷ் தனது மனைவி பூரண ஜோதியுடன் சென்றிருந்தார். அங்கு தனது அக்கா பிரேமலதா, மாமா விஜயகாந்தை சந்தித்து திருமண நாள் வாழ்த்துகளை கூறினார். விஜயகாந்த் இன்று 33 ஆவது திருமண நாளை கொண்டாடினார்.

ஊதா நிற சட்டை
விஜயகாந்த் ஊதா நிற சட்டை அணிந்திருந்தார். பட்டு வேட்டியில் ஜொலித்தார். அது போல் பிரேமலதாவும் ஊதா நிற பார்டரில் இளம் பச்சை நிறத்தில் பட்டுப் புடவை அணிந்திருந்தார். இருவரும் மாலையும் கழுத்துமாக இருந்தனர். உடல் மெலிந்து காணப்பட்டார். அது போல் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகரும் விஜயகாந்த்- பிரேமலதாவை நேரில் சந்தித்து திருமண நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.

சுதந்திர தினம்
ஏற்கெனவே சுதந்திர தினத்தன்று விஜயகாந்த் கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார். அது போல் அவருடைய பிறந்தநாள் அன்றும் அவர் தொண்டர்களை சந்தித்தார். ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு பண்டிகையையொட்டி தொண்டர்களை சந்தித்த அவர் தன்னை பார்க்க வந்தவர்களுக்கு ரூ 200 புதிய தாளை பிரேமலதா கையால் வழங்கினார். பின்னர் பொங்கல் பண்டிகை அன்று விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் கொண்டாட்டம் நடத்தியது குறித்த போட்டோவும் சமூகவலைதளங்களில் வைரலானது.

விஜயகாந்த் தான் பலம்
இவற்றை பார்க்கும் போது அண்மைக்காலமாக விஜயகாந்த் பொதுவெளியிலும் புகைப்படங்களிலும் அதிகம் தோன்றுகிறார். அதைவிட அவர் அதிகம் காட்டப்படுகிறார் என்றே கூறலாம். விஜயகாந்திற்கு உடல்நிலை சரியில்லாததால் அவரால் இனி அரசியல் செய்ய முடியாது என கருதிய கட்சிகள் கூட்டணி பேசும் போது குறைந்த சீட்டுகளையே கொடுக்கிறார்கள். தேமுதிகவுக்கு விஜயகாந்த்தான் பலம். அவரை பார்த்துதான் அவருடைய ரசிகர்கள் கட்சியில் இணைந்து தொண்டர்களாக மாறிவிட்டனர். அவர் நேரடியாக கட்சி பணிகளில் ஈடுபடாததால் தேமுதிகவின் செல்வாக்கும் முடங்கிவிட்டதாகவே பிற அரசியல் கட்சிகள் கருதுகிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தல்
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவ்வப்போது விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் அப்பாவின் உடல்நிலை முன்னேறி வருவதாக கூறுகிறார்கள். எனவே விஜயகாந்த் நலமாக இருக்கிறார். விரைவில் சிங்கம் போல அரசியலுக்கு திரும்புவார், என்பதை அரசியல் கட்சிகளுக்கு சொல்வதற்காகவே பிரேமலதா, விஜயகாந்தை அதிகம் "லைம் லைட்டிலேயே" வைத்திருக்கிறார் என விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

நிர்வாகிகள் கருத்து என்ன?
இதுகுறித்து தேமுதிக நிர்வாகிகள் சிலரிடம் கேட்ட போது, வரும் லோக்சபா எலெக்ஷனுக்காக கேப்டனை அடிக்கடி காட்டுகிறார்களோ இல்லையோ, எங்களுக்கு கேப்டனை பார்க்கும் போது ஒரு விதமான மகிழ்ச்சி ஏற்படுகிறது. இதற்கு முன்னர் அவர் எப்படி இருக்கிறார் என தெரியாமல் தவித்தோம். ஆனால் இப்போது அவர் நேரில் தோன்றுவதும் புகைப்படங்களில் வைரலாவதையும் பார்க்கும் போது கேப்டன் விரைவில் பழைய கர்ஜனையுடன் சிங்கமாக மீண்டு வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இது தொண்டர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கிறது. கேப்டன்தான் எல்லாமே. அப்படியிருக்கும் போது அவர் நன்றாக இருக்கிறார் என தெரிந்தால் நாங்களும் நிம்மதியாகவும் மனநிறைவுடனும் களப்பணியாற்றுவார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதையெல்லாம் கேப்டன் முடிவு செய்வார். அவர் கைகாட்டும் நபர் பிரதமராவார் என்ற நிலை நிச்சயம் ஏற்படும் என்றார்கள்.
-
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே! -
என்னது வாக்காளர்கள் பணம் வாங்கணுமா.. உளறி கொட்டிய விஜய்.. சிபிஐ வீரபாண்டியன் புகாரால் தவெக ஷாக் -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
ஆதவ் உட்பட ஒரே குடும்பத்திலிருந்து களமிறங்கும் 3 வேட்பாளர்கள்.. கட்சி வேறு வேறு.. சுவாரஸ்யம்! -
வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்.. அன்புமணி அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து போட்டி! -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
கன்னியாகுமரியில் கடன் தந்த வங்கிக்கு ட்விஸ்ட் தந்த காங்கிரஸ் பெண் பிரமுகர்.. பாய்ந்த வழக்கு












Click it and Unblock the Notifications