இந்த பக்கம் சிங்கபூர் பறந்த ஸ்டாலின்.. அந்த பக்கம் அமைச்சர்களுக்கு பறந்து வந்த அறிவிப்பு?
சென்னை : ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூருக்கு பறந்தார். மறுபக்கம் நல்லபடியாக பார்த்துக்கோங்க என்று அமைச்சர்களுக்கு மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சிங்கப்பூருக்கு சென்றார். அடுத்த 9 நாட்கள் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். சிங்கப்பூரில் தொழில்முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அடுத்தபடியாக ஜப்பானுக்கும் செல்ல உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் பொதுவான நேரத்தில் பொறுப்பு அமைச்சர்கள் என்று அறிவிப்பதற்கும், வெளிநாடு செல்லும் போது பொறுப்பு அமைச்சர்கள் அறிவிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
தற்போது தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் தினசரி ஏதாவது ஒரு பிரச்சனைகளை கையில் எடுத்து குடைச்சல் கொடுத்து வருகின்றன. கள்ளச்சாரய மரணங்கள், டாஸ்மாக் பார் மரணங்கள் திமுகவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது..
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் திமுகவிற்கு கடும் நெருக்கடியை தருகிறார்கள். இந்த சூழலில் தான் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் சென்றுள்ளார். முதல்வர் வெளிநாடு சென்றுள்ள சூழலில் மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை அறிவித்துவிட்டு சென்றிருக்கிறார்.
இன்று சேலம், தேனி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, தென்காசி, இராமநாதபுரம், காஞ்சிபுரம், திருநெல்வேலி, மயிலாடுதுறை, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பொறுப்பு அமைச்சர்கள் அந்தந்த மாவட்டங்களில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதில் இணைந்து செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், பிரச்சனைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுக்கு பறந்த நிலையில், மறுபக்கம் நல்லபடியாக பார்த்துக்கோங்க என்று அமைச்சர்களுக்கு மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்களை நியமித்திருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications