2 குட் நியூஸ்.. இன்னும் 3 நாள்தான்.. மகளிர் போனுக்கு வரும் மெசேஜ்.. ரூ.1000 உரிமை தொகையில் ட்விஸ்ட்
சென்னை: தமிழ்நாட்டில் வழங்கப்பட உள்ள ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பாக இரண்டு முக்கியமான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலவர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதையடுத்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது. முதற்கட்ட முகாம் ஜுலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெற்றது.

இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதுவரை ஒரு கோடியே 75 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உரிய நாளில் விண்ணப்பம் பதிவு செய்ய வருகை புரிய இயலாத நபர்களுக்குச் சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் விண்ணப்பப் பதிவு முன்னேற்றம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்கள்.
குட் நியூஸ் 1: இதற்காக விண்ணப்பங்கள் பெறக்கூடிய சிறப்பு கூட்டம் ஆகஸ்ட் 17- 20ம் தேதி வரை நடந்தது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் அளிக்க கால அவகாசம் முடிந்துவிட்ட நிலையில் இந்த திட்டம் தொடர்பான முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
அதன்படி பெண்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட வங்கி கணக்கு அவசியம். ஆனால் பல லட்சம் பேரிடம் தனியாக வங்கி கணக்கு இல்லை. இதை சரி செய்வதற்காக தமிழ்நாடு அரசு அதிரடியான திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன்படி அருகில் உள்ள போஸ்ட் ஆபிசில் ஆதார் கார்ட், பான் கார்ட் மூலம் எளிதாக இ கேஒய்சி செய்தி வங்கி கணக்கை தொடங்க முடியும் .
இதற்கான முகாம், சிறப்பு ஏற்பாடு இன்றில் இருந்து தொடங்கி உள்ளது. அதன்படி வங்கியில் சென்று உரிமை தொகைக்கு வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று கூறினால் 20 நிமிடத்தில் இ கேஒய்சி முறையில் உடனே வங்கி கணக்கு தொடங்கி தரப்படும்.
குட் நியூஸ் 2: ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் முதல் மாத பணம் எப்போது வங்கி கணக்கில் வரும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலவர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
திட்டம் தொடங்கப்பட்டு 5 நாட்களில் அதாவது செப்டம்பர் 20ம் தேதி முதல் மாத தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும். நேரடியாக வங்கி கணக்கில் மக்களுக்கு பணம் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து செப்டம்பர் 5ம் தேதிக்குள் இதுவரை விண்ணப்பம் செய்த எல்லோருக்கும் விண்ணப்பங்களை இறுதி செய்து, 1 கோடி பயனர்களை தேர்வு செய்யும் முடிவை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது.

அதாவது செப்டம்பர் 5ம் தேதிக்கு முன் இந்த திட்டத்திற்கு தேர்வானவர்கள் லிஸ்ட் எடுக்கப்பட்டு, அவர்களுக்கு மெசேஜ் மூலம் தகவல் செல்லும். தேர்வு செய்யப்படாதவர்களுக்கும் அந்த மெசேஜ் செல்லும்.
மெசேஜ்: முகாம்களில் விண்ணப்பங்களை கொடுத்தவர்களின் விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு வருகின்றன. இந்த விண்ணப்பங்கள் சோதனை செய்யப்பட்டு அதில் தேர்வாகும் நபர்களுக்கு உடனடியாக மெசேஜ் ஒன்று அனுப்பப்படுகிறது. அதாவது நீங்கள் திட்டத்தில் சேர்க்கப்பட்டதாக மெசேஜ் வரும். இந்த கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் பெறுவதற்காக நீங்கள் விண்ணப்பம் அளித்து அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் அதற்கான மெசேஜும் வரும். இல்லையென்றால் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று மெசேஜ் வரும்.
நிராகரிக்கப்படும் பட்சத்தில் அதை மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. அதாவது நீங்கள் விண்ணப்பம் கொடுக்கிறீர்கள், அது நிராகரிக்கப்படுகிறது என்றால் அதை மறுபரிசீலனை செய்ய மேல்முறையீடு செய்ய முடியும். உங்களிடம் ஆவணங்கள் எல்லாம் முறையாக இருந்து நீங்கள் தகுதியானவராக இருந்தால் நீங்கள் எளிதாக பரிசீலனை செய்ய முடியும்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித்












Click it and Unblock the Notifications