கோவையில் மனைவியுடன் நெருக்கமாக இருந்ததை இன்ஸ்டாவில் போட்ட கணவன்? ஸ்டேஷனில் தர்ம அடி

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மகளிர் காவல் நிலையத்தில், அந்தரங்கப் படங்களைச் சமூக வலைதளத்தில் பதிவிட்ட விவகாரம் தொடர்பான விசாரணைக்கு வந்த வாலிபரை அவரது மனைவியின் உறவினர்கள் தாக்க முயன்றதுடன், அதனைத் தடுக்கச் சென்ற போலீசார் மீதும் தாக்குதல் தொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பெண்ணின் சகோதரன் உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம், செலகரச்சல் பகுதியைச் சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மகள் சண்முகப்பிரியா (25). இவரும், மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராம் பிரகாஷ் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் திருமணத்தை ராம் பிரகாஷின் குடும்பத்தினர் ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தம்பதியர் இருவரும் மலுமிச்சம்பட்டி பகுதியில் வாடகை வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.

Wife s family attacks the husband at Karumathampatti police station due to post video in insta

இந்நிலையில், கடந்த சில நாட்களாகக் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. சண்முகப்பிரியாவை ராம் பிரகாஷ் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சண்முகப்பிரியா, ராம் பிரகாசுடன் தனது உறவை முறித்துக்கொள்வதாகத் தெரிவித்தார்.

மனைவி தன்னை விட்டு விலகுவதாகத் தெரிவித்ததால் கடும் மனவேதனைக்கு ஆளான ராம் பிரகாஷ், இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்தபோது எடுத்த அந்தரங்க வீடியோக்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சண்முகப்பிரியா, தனது நெருக்கமான வீடியோக்களைச் சமூக வலைதளத்தில் வெளியிட்ட கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கருமத்தம்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகார் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி கணவர் ராம் பிரகாசுக்குக் காவல்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி அவர் காவல் நிலையத்திற்கு வந்தபோது, அங்கு ஆத்திரத்துடன் காத்திருந்த பெண்ணின் உறவினர்கள் திடீரென ராம் பிரகாஷ் மீது தாக்குதல் நடத்த முயன்றனர்.

அப்போது, அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றனர். அதில் ஆத்திரமடைந்த பெண்ணின் வீட்டார், அதனைத் தடுக்கச் சென்ற போலீசார் மீதும் தாக்குதல் தொடுத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாகத் தாக்குதலில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரன் உள்ளிட்டோர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கணவர் ராம் பிரகாஷ் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, காவல் நிலையத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், கருமத்தம்பட்டி உட்கோட்டத் துணைக்காவல் கண்காணிப்பாளர் கரிகால் பாரி சங்கர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும், காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைப் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். அதில் பெண்ணின் வீட்டார், சண்முகப்பிரியாவின் கணவரைத் தாக்க முயல்வதும், அதனைத் தடுக்கச் சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்துவதும் தெளிவாகப் பதிவாகியுள்ளன. காவல் நிலைய வளாகத்திலேயே போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+