செம டைமிங்.. அதிமுக ஆபீஸ் சாவி வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி கேவியட் மனு.. சிக்கலில் ஓபிஎஸ்
அலுவலக சாவியை ஒப்படைக்க கோரி எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தின் கட்சி சாவியை ஒப்படைக்க கோரிய வழக்கில் எடப்பாடி பழனிசாமி சுப்ரீம்கோர்ட்டில் இந்த கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.. அப்பீல் மனுவை விசாரிக்கும்போது தன் கருத்தையும் கேட்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தன்னுடைய மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் தந்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ பன்னீர் செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் என்று அதிமுகவே இரண்டு குழுக்களாக பிரிந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி
எனவே, அதிமுக பொதுக்குழு கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நேரத்தில் ஓபிஎஸ் தன்னுடைய ஆதரவாளர்களோடு வந்து சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைலைமை அலுவலகத்தை கைப்பற்றினார். அப்போது ஓபிஎஸ் - எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. வன்முறையும் வெடித்தது.. இந்த சம்பவத்தில் 45க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

வன்முறை
மேலும் ஏராளமான வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.. பலர் மண்டை உடைந்து ரத்த காயங்கள் அடைந்தனர்.. இந்த வீடியோக்கள் அனைத்தும் சோஷியல் மீடியாவில் வெளியாகின.. இந்த சம்பவத்தால் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் கலவரத்தை தணிக்கவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் வருவாய்த்துறை அதிகாரிகள் 145வது சட்டப்பிரிவை பயன்படுத்தி அதிமுக அலுவலகத்தை சீல் வைத்து பூட்டினர்...

ஹைகோர்ட்
இதையடுத்து, மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெகஜீவன்ராம் கட்டுப்பாட்டில் கட்சி அலுவலகம் அன்றைய தினமே கொண்டு வரப்பட்டது... கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்ற வேண்டும் என்று, ஓபிஎஸ்ஸும், எடப்பாடி பழனிசாமியும் சென்னை ஹைகோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்... இந்த வழக்கில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி சதீஸ்குமார் தீர்ப்பு வழங்கியிருந்தார்.

கேவியட் மனு
இந்த நிலையில், அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் தந்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.. கட்சி சாவியை ஒப்படைக்க கோரிய வழக்கில் எடப்பாடி பழனிசாமி சுப்ரீம்கோர்ட்டில் இந்த கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.. அப்பீல் மனுவை விசாரிக்கும்போது தன் கருத்தையும் கேட்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தன்னுடைய மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
-
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி! -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications