”536 மோட்டார்கள் தயார்” வடசென்னையில் மாலைக்குள் மழைநீர் அகற்றப்படும்.. அமைச்சர் கேஎன் நேரு!
சென்னை: சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் மாலைக்குள் நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கேஎன் நேரு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 29ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் சென்னையில் கடந்த ஆண்டு பெய்த மழையின் போது தண்ணீர் தேங்கிய பகுதிகளில், தற்போது தண்ணீர் தேங்காமல் வடிந்து வருகிறது. இருந்தும் சில பகுதிகளில் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வடசென்னை பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரால் மக்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

கேஎன் நேரு ஆலோசனை
இதனிடையே மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள் தமிழக அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பருவமழை குறித்து சென்னை ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன் தீப் சிங் பேடி, துணை ஆணையர்கள் மற்றும் குடிநீர் வாரியம், மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

வடசென்னையில் பணிகள் தீவிரம்
இந்த ஆய்வு கூட்டத்தில் சென்னையில் இன்று காலை நிலவரப்படி 20.55 செ.மீ சராசரி மழை பதிவாகியுள்ளது. 450 மோட்டார்கள் தயார் நிலையில் உள்ள நிலையில் 156 இடங்களில் மோட்டார்கள் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 19 முறிந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மழை நீர் அதிகம் தேங்கியுள்ள வட சென்னை பகுதிகளில் துரிதப்படுத்த வேண்டிய பணிகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

2 மடங்கு அதிக மழை
இந்த கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், 'தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்பாக ஆலோசித்துள்ளோம். 20.55 செ.மீ மழை சென்னையில் பெய்துள்ளது. கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு மழை பெய்துள்ளது. புளியந்தோப்பு, கொளத்தூர் ஆகிய இரண்டு பகுதிகளில் மட்டுமே மழை நீர் தேங்கியுள்ளது.

தயார் நிலையில் அரசு
திருவிக நகர் பகுதியில் 35 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதற்கு அளவுக்கு அதிகமான மழையே காரணம். மழைநீர் தொடர்ந்து வடிந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் 536 மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது. 156 மோட்டார்கள் பயன்பாட்டில் உள்ளது. 3 சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. ரயில்வே துறையிடம் அனுமதி கேட்டு விரைந்து மழை நீர் வெளியேற்றப்படும். 169 முகாம்கள் சென்னையில் தயாராக உள்ளது.

மாலைக்குள் வெளியேற்றம்
மழை நீர் தேங்கிய இடங்களில் இன்று மாலைக்குள் மழைநீரை முழுமையாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் மழை காரணமாக பலியான 2 பேருக்கு இன்று மாலை நேரில் சந்தித்து நிவாரண காசோலை வழங்கப்படும். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 200 வார்டுகளிலும் வரும் நவ.5 ஆம் தேதி மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications