சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கருப்பு ஆடுகள்".. டென்ஷனான திமுக.. ஆதாரத்தை திரட்ட உத்தரவு.. பதட்டத்தில் மாஜி..!

மாஜிக்களின் ஊழல் புகார் மீதான விசாரணை நடத்தப்படுமா?

Google Oneindia Tamil News

சென்னை: 8 மாஜிக்களுக்கு திமுக தரப்பில் கட்டம் கட்டினாலும், அதில் முக்கியமானவர் தூது நடவடிக்கையில் விடாமல் இருக்கிறாராம்.. மற்றொரு பக்கம் வழக்கறிஞர்கள் டீமுடன் தொடர்ந்து விவாதம் நடத்தி கொண்டிருக்கிறாராம்.

ஆட்சி பொறுப்புக்கு வந்ததுமே, அதிமுகவின் ஊழல் புகார்கள் குறித்து திமுக நடவடிக்கை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.. இப்போதுதான், வழக்கு விசாரணைகள் வேகமெடுக்க துவங்கி உள்ளன.

மதுரை, சேலம், புதுக்கோட்டை, விருதுநகர், கோவை, என எட்டுத்திக்கும் 8 பேரை குறி வைத்துள்ளது திமுக தரப்பு.. ஆனால் லிஸ்ட்டில் உள்ள 8 பேரையும் விட்டுவிட்டு, சம்பந்தமே இல்லாமல் எம்ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தவும், 8 பேர் உட்பட மொத்த பேரும் கலங்கி விட்டனர்.

அர்த்த ராத்திரியில்.. அன்று சோனியாவுக்கு பறந்த போன்.. திமுக கூட்டணி வேண்டாம்.. கேஎஸ் அழகிரி ஒரே போடு அர்த்த ராத்திரியில்.. அன்று சோனியாவுக்கு பறந்த போன்.. திமுக கூட்டணி வேண்டாம்.. கேஎஸ் அழகிரி ஒரே போடு

சமாதானம்

சமாதானம்

இதையடுத்து, டெல்லி விஜயம், சமாதானம் போன்ற நடவடிக்கைகளில் இறங்கினாலும், 2 விதமான செய்திகள் தற்போது வட்டமடித்து வருகின்றன.. 8 பேர் மீது நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்கின்றன.. தேர்தல்கள் அடுத்தடுத்து வருவதால், விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும், இதை எக்காரணம் கொண்டும் தள்ளி போடக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

பேட்டி

பேட்டி

2 நாளைக்கு முன்பு, கேசி பழனிசாமி ஒரு தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், ஓபிஎஸ்ஸூம், எடப்பாடியும், திமுகவுடன் டீல் செய்யவும் தயங்க மாட்டார்கள், இவர்கள் மீது உடனே நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.. இந்த டிசம்பருக்குள், விசாரணை எடுக்கப்படாவிட்டால், திமுகவும் இந்த ஊழல்களுககு துணை போன மாதிரியே கணக்கில் எடுத்து கொள்ளப்படும் என்று பரபரப்பு பேட்டி ஒன்றை தந்திருந்தார். எனவே, காலதாமதம் ஆகிவிடக்கூடாது என்பதே முதல் எண்ணமாக இருக்கிறது.

கூட்டத்தொடர்

கூட்டத்தொடர்

ஆனால், பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்க உள்ளதால் எதையும் அவசரப்பட்டு முடிவெடுக்க ஸ்டாலின் விரும்பவில்லையாம்.. திமுகவுக்கு இது முக்கியமான பட்ஜெட்.. ஸ்டாலினுக்கு முதல் பட்ஜெட்.. நிறைய அறிவிப்புகளை வெளியிட திட்டம் உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில், விசாரணை, ரெய்டு என்று நடத்தினால், அதையே சாக்காக வைத்து, பட்ஜெட் கூட்டத்தொடரில் குழப்பம் ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயலலாம் என்பதால், பட்ஜெட் முடிந்த பிறகு இதெல்லாம் பார்த்து கொள்ளலாம் என திமுக மேலிடம் நினைக்கிறதாம்.

மாஜிக்கள்

மாஜிக்கள்

இப்படிப்பட்ட சூழலில்தான், 8 பேர் ஒரு முக்கியமான மாஜி தரப்பானது திமுக தரப்புடன் தூது நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.. ஊழல் புகாரை சீனில் கொண்டு வந்துவிட்டால், அது கொங்குவில் அதிமுகவுக்கு வைக்கப்படும் முதல் செக்காக கருதப்படும் என்பதால்தான், அவர் பெயர் முன்னதாகவே அடிபட்டது.. ஆனால், அவர் திமுகவுக்கு பொதுவான நபரை வைத்து டீல் பேசி வெள்ளைக் கொடியை கையில் எடுக்க முயல்கிறார்.. ஆனால், அதற்கு திமுக தரப்பு இடம் தரவில்லையாம்.

வெள்ளைக்கொடி

வெள்ளைக்கொடி

எனினும், திமுக தரப்பில் எல்லாமே பேசி முடித்தாயிற்று.. ஒன்னும் பிரச்சனை இல்லை என்ற ரீதியில் தன்னுடைய ஆதரவாளர்களை சரிகட்டி வருகிறாராம் அந்த மாஜி.. இந்த விஷயமும் திமுக மேலிடத்துக்கு வந்ததையடுத்து, அவர் மீதான வழக்கின் ஆதாரங்களை மேலும் அதிகமாக திரட்டும்படி உத்தரவிட்டுள்ளதாம். அதுமட்டுமல்ல, இவரை வெற்றி பெற வைத்ததில் இருந்தே, சில திமுக புள்ளிகளே உடந்தையாக இருப்பதாகவும் சொல்லப்பட்டது..

 கருப்பு ஆடு

கருப்பு ஆடு

இதுபோன்ற கருப்பு ஆடுகளால்தான் கொங்குவில் திமுக சரிவை சந்தித்தது என்ற கோபம், தலைமைக்கு ஏற்கனவே இருந்தது.. அந்த வகையில் மறுபடியும் யாராவது மாஜி தரப்புக்கு உதவக்கூடுமோ? என்பதிலும் திமுக தீவிர கண்காணிப்பில் இறங்கி வருகிறதாம்... அந்த வகையில், 8 பேரில் ஒருவர் மீது மட்டும் நடவடிக்கை முன்னதாகவே எடுக்கப்பட்டுவிடுமா? அல்லது தள்ளிபோடப்படுமா? அல்லது வெள்ளைக்கொடிக்கு வேலை வந்துவிடுமா? தெரியவில்லை.. பார்ப்போம்..

English summary
Will CM Stalin take action against Ex Minister Kovai SP Velumani
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X