மகளிர் உரிமைத் தொகையால் பல மடங்கு லாபம் பார்க்க முடியும்! கூட்டுறவு வங்கி மூலம் அடிக்கும் ஜாக்பாட்!
சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் வழங்கப்படும் ரூ.1000 பணத்தின் மூலம் நீங்கள் உங்களின் வருமானத்தை உயர்த்த முடியும். ஆம் இந்த பணத்தை நீங்கள் சரியாக முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெற முடியும். இதற்காக தமிழக அரசே கூட்டுறவு வங்கிகள் வழியாக சில திட்டங்களை வழங்கி வருகிறதாம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், தமிழ்நாட்டில் உள்ள தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவியை வழங்குகிறது. முன்னதாக நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில், ஏராளமான பெண்கள் இத்திட்டத்திற்காக விண்ணப்பித்திருந்தனர். அங்கு அதிகாரிகள் விண்ணப்பங்களைப் பெற்று தகுதியை சரிபார்த்தனர்.

மகளிர் உரிமைத்தொகை
இந்த முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர். ஆவணங்கள், வருமான விவரங்கள் மற்றும் குடும்ப நிலையை கவனமாக சரிபார்த்து, தகுதியான பயனாளிகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்தனர். இந்த விரிவான சரிபார்ப்புக்குப் பிறகு, புதிதாக தகுதியானோர் பட்டியலை தமிழக அரசு இறுதி செய்துள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, அவர்களின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்களுக்குக் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இச்செய்தி, அவர்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளிக்கிழமை முதல் உதவித்தொகை கிடைக்கும் என்றும் தெரிவிக்கிறது.
அதன்படி நாளை முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது. நாளை இதற்காக அரசு விழா நடக்க உள்ளது. ஆனால் அதற்கு முன்பாக இன்று மாலை அல்லது இரவே ரூ.1000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரூ.1000 பணத்தின் மூலம் நீங்கள் உங்களின் வருமானத்தை உயர்த்த முடியும்
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் வழங்கப்படும் ரூ.1000 பணத்தின் மூலம் நீங்கள் உங்களின் வருமானத்தை உயர்த்த முடியும். ஆம் இந்த பணத்தை நீங்கள் சரியாக முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெற முடியும். இதற்காக தமிழக அரசே கூட்டுறவு வங்கிகள் வழியாக சில திட்டங்களை வழங்கி வருகிறதாம்.
மகளிர் உரிமை தொகை திட்டம் நாளை முதல் விரிவாக்கம் செய்யப்படும் நிலையில் இப்போதே புதிய பயனாளிகளை பல மாவட்டங்களில் கூட்டுறவு வங்கிகள் அணுக தொடங்கி உள்ளன. அதன்படி.. நீங்கள் தனியார் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளீர்கள். எங்களிடம் கணக்கு தொடங்குங்கள். இந்த மாதம் தனியார் வங்கி வழியாக வேண்டுமானால் பணம் வாங்கிக்கொள்ளுங்கள். அடுத்த மாதம் எங்கள் வங்கி வழியாக வாங்கும் வகையில் மாற்றித்தருகிறோம் என்று கூறி வருகின்றனர்.
சில கூட்டுறவு வங்கிகளில் சேமித்தால் அதற்கு கூடுதல் வட்டி கிடைக்கும் என்று தமிழ்நாடு அரசு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டு உள்ளது. அதாவது இந்த தொகைக்கு என்று கூடுதலாக வட்டி கொடுக்கும் நிறைய திட்டங்கள் உள்ளன.
பொதுவாக வங்கியில் பணம் சேமிக்க 3-4 சதவிகிதம் மட்டுமே வட்டி கிடைக்கும். ஆனால் இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 7.5 சதவிகிதம் வரை வட்டி பெறலாம். 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தில் பணம் சேர்க்க முடியும். தமிழ்நாடு அரசு கூட்டுறவு வங்கிகளை முடுக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் பெண்கள் சேமிக்க முடியும், அவர்களுக்கு வட்டியும் கிடைக்கும், அதோடு அரசின் பணமும் மீண்டும் கூட்டுறவு வங்கிகள் வழியாக அரசின் கஜானாவிற்கே (பெண்கள் பயன்படுத்தும் வரை) வரும்.
இதனால அரசின் நிதி நிலையும் சீராக இருக்கும். அதே சமயம் பெண்கள் தேவையான நேரத்தில் பணத்தை எடுக்க முடியும். அதற்கு வட்டியும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications