234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்ல முடியுமா?.. வாசகர்கள் சொன்ன பதிலை பாருங்க!.. செம சர்வே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணிக்கு 234 தொகுதியிலும் வெற்றி கிடைக்கும் என உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தது குறித்து மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இதற்கு 234 தொகுதிகளா அதெல்லாம் சான்ஸே இல்லை என்ற ரேஞ்சுக்கு பதில் கூறியுள்ளார்கள்.

கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெறுகிறது. இந்த 10 ஆண்டுகளில் நடந்த இரு தேர்தல்களிலும் ஜெயலலிதா என்ற ஒரு பெண் சிங்கத்திற்காக மக்கள் வாக்களித்தனர்.

தற்போது 2021 இல் சட்டசபை தேர்தல் வரவிருக்கிறது. இந்த நிலையில் ஜெயலலிதா உயிருடன் இல்லை. அது போல் மிகப் பெரிய ஜாம்பவானான கருணாநிதியும் உயிருடன் இல்லை. இதனால் அந்த இரு தலைவர்களுக்கு நிகர் யார் என்பதில் கட்சிகளிடையே போட்டா போட்டி நடைபெறுகிறது.

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகள்

அந்த இரு தலைவர்களாக மக்கள் யாரை பார்க்கிறார்கள் என்பதை அறிய அரசியல்வாதிகள் ஆர்வம் அதிகமாகவே இருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி ஒரு தொகுதியை தவிர்த்து தமிழகத்தில் உள்ள 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதனால் வரும் சட்டசபை தேர்தலில் திமுகவே அரியணை ஏறும் என கருதுகிறார்கள்.

234 தொகுதிகளிலும் வெற்றி

234 தொகுதிகளிலும் வெற்றி

தமிழகத்தில் திமுக ஆட்சி உதயமாக்க ஸ்டாலின் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். அதன்படி திமுக இளைஞரணி செயலாளரும் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், ஊர் ஊராக சென்று திமுகவுக்கு பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் ஒரு கூட்டத்தில் திமுக கூட்டணிக்கு 234 தொகுதியிலும் வெற்றி கிடைக்கும் என தெரிவித்திருந்தார்.

234 தொகுதிகள்

234 தொகுதிகள்

கடந்த வாரம் திமுக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலினே 200 தொகுதிகளுக்கு மேல் தங்கள் குறி என கூறியிருந்தார். ஆனால் மகன் உதயநிதியோ 234 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்க வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து ஒன் இந்தியா தமிழ் வாசகர்களிடம் கருத்துக் கணிப்புகளை நடத்தினோம்.

வாய்ப்பில்லை

வாய்ப்பில்லை

அதில் 4 ஆப்ஷன்களையும் கொடுத்துள்ளோம். வாய்ப்பில்லை ராஜா, நிச்சயம் வெல்லும், 200 கிடைக்கலாம், 150 வரை வர வாய்ப்பிருக்கு ஆகிய ஆப்ஷன்கள் இருந்தன. அதில் வாய்ப்பில்லை ராஜா என்ற ஆப்ஷனுக்கு 45.9 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது நாற்பதும் நமதே என நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் கூறியிருந்தார்.

அதிமுக

அதிமுக

ஆனால் தமிழகத்தில் ஒரு தொகுதியில் அதிமுகவும் புதுவையில் ஒரு தொகுதியில் காங்கிரஸும் வெற்றி பெற்றது. எனவே 234 தொகுதிகளிலும் ஒரு கட்சி வெற்றி பெறுவது சாத்தியம் இல்லை என்கிறார்கள் மக்கள். 8.2 சதவீதம் பேர் நிச்சயம் வெல்லும் என கூறியுள்ளார்கள்.

200 தான் இலக்கு

200 தான் இலக்கு

200 கிடைக்கலாம் என 23.5 சதவீதம் பேர் கூறியுள்ளார்கள். அதாவது ஸ்டாலினின் இலக்கு 200தான். 200க்கு ஒரு தொகுதியல்ல ஒரு இன்ச் கூட குறையக் கூடாது என தொண்டர்களுக்கு அன்பு கட்டளையிட்டுள்ளார். 150 தொகுதிகள் வரை கிடைக்கும் என 22.4 சதவீதம் பேர் தெரிவித்துள்ளார்கள்.

117 பலம்

117 பலம்

பெரும்பான்மைக்கு 117 அல்லது 118 தேவைப்படுகிறது. எனவே 150 எடுத்தாலும், 200 எடுத்தாலும் திமுக ஆட்சிக்கு வரும் என்பது மக்களின் தீர்ப்பு. இதே மனநிலை தேர்தலில் பிரதிபலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் நடுநிலையாளர்கள், புதிய அரசியல் கட்சிகளுக்கான ஓட்டுகள் என்பதையும் கருத்தில் கொண்டாக வேண்டுமே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+