சொத்து ஆவணங்கள் அவசியமா? உயில் பத்திரம் ஓகே, அதென்ன சமாதான ஆவணம்? வகை வகையான பத்திரங்கள்
சென்னை: உயில் பத்திரம் என்றால் என்ன? சமாதான பத்திரத்தின் முக்கியத்துவம் என்ன? சொத்துக்களின் உரிமை மாற்றத்தை குறிப்பிடும் ஆவணங்களில், ஒருசில பத்திரங்களின் வகைகளை குறித்து பார்க்கலாம்.
சொத்தை விற்பனை செய்தவரிடம் இருந்து, உங்களுடைய பெயருக்கு பதிவு செய்யப்படுவதே ஆவணமாக கருதப்படும்.. இந்த ஆவண பத்திரங்களை பத்திரமாக பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
அதேபோல, ஒரு இடத்தை பதிவு செய்வதன் மூலம் நீங்கள் நிலத்தின் முழு உரிமையாளராகிவிட முடியாது.. பதிவு என்பது உரிமையை மாற்றுவதற்கான ஒரு ஆவணம் மட்டுமேயாகும்..

பத்திர பதிவை முடித்ததும், அந்த பதிவின் அடிப்படையில் நீங்கள் சொத்தை மாற்றினால்தான், அது சொத்து மாற்றமாக கருதப்படும்.. அதேபோல, வீடு - மனை, நிலம் உள்ளிட்ட சொத்துக்களின் உரிமை மாற்றத்தை குறிப்பிடும் பத்திரங்களில் சிலவற்றை சுருக்கமாக பார்க்கலாம்.
விடுதலைப் பத்திரம்:
ஒருவரது சொத்துக்களை அவர் இறந்த பிறகு அவருடைய நேரடி வாரிசுகள் மற்றும் வாரிசுகளின் வாரிசுகள் அவர்களின் உரிமையை விட்டுக்கொடுத்து அதற்கு ஈடாக பணமாகவோ பொருளாகவோ பெற்றுக் கொண்டு, எழுதிக் கொடுக்கும் ஆவணம் விடுதலை பத்திரம் என்பர். ஒருவேளை இருவர் பெயரில் கூட்டாக ஆவணம் பதிவு செய்யப்பட்டிருந்தால் ஒருவர் தனக்கு உண்டான உரிமையை பிறருக்கு விட்டுக் கொடுப்பதற்கு எழுதிக்கொடுக்கும் ஆவணமும் விடுதலை பத்திரம் எனப்படும்.
பரிவர்த்தனை ஆவணம்:
ஒருவர் பெயரில் உள்ள ஆவண சொத்தின் உரிமையை இன்னொருவருக்கு எழுதி கொடுத்துவிட்டு அவருடைய பெயரில் உள்ள ஆவண சொத்தின் உரிமையை தனது பெயரில் மாற்றிக்கொள்ளும் ஆவணம் (அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ஈடுக்கு ஈடு) பரிவர்த்தனை ஆவணம் ஆகும்.
உயில் பத்திரம்:
ஒருவருக்கு சொந்தமான வீடு, மனை, நிலம், பொருள் (அசையும் மற்றும் அசையா சொத்துக்கள்) உள்ளிட்ட இதர சொத்துக்களை அவரது காலத்துக்கு பிறகு நடைமுறைக்கு வரும் வகையில், வாரிசுகள், உறவுகள், மூன்றாம் நபர்கள் என யார் யாருக்கு என்னென்ன அளவுகளில் உரிமை என்ற விவரங்களை உயில் மூலம் எழுதி வைப்பது உயில் பத்திரம் எனப்படுகிறது.
ஒருவர் உயிருடன் இருக்கும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் அவர் எழுதிய உயிலை ரத்து செய்துவிட்டு புதிய உயில் எழுதலாம் அல்லது மாற்றி எழுதலாம். இறுதியாக எழுதும் உயில் பத்திரம் மட்டுமே நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரைய உடன்படிக்கை ஆவணம்:
தனிநபர் அல்லது நபர்களின் பெயரிலோ அல்லது நிறுவனத்தின் பெயரிலோ உள்ள சொத்தை விற்கவும் அதனை வாங்கவும் முடிவு செய்து, விற்பவர் மற்றும் வாங்குபவர் இடையே முழு சொத்து அல்லது பகுதி சொத்து என்ற விவரம், சொத்தின் அளவு, நான்கு பக்க எல்லைகள் உள்ளிட்ட ஆவணத்தின் விவரங்கள், விலை, முன்பணம், நிபந்தனைகள், கால அவகாசம் உள்ளிட்டவற்றை எழுதிக்கொண்டு உடன்படிக்கை செய்து கொள்ளும் ஆவணம் கிரய உடன்படிக்கை ஆவணம் எனப்படும்.
பொது அதிகார ஆவணம்:
தனிநபர் அல்லது நபர்களின் பெயரிலோ அல்லது நிறுவனத்தின் பெயரிலோ உள்ள சொத்துக்களை குடும்ப உறுப்பினர் அல்லது உறுப்பினர்கள் மூன்றாம் நபர் அல்லது நபர்கள் பராமரிக்கவும், அனுபவிக்கவும், விற்பனை செய்யவும், உரிமை மாற்றம் உள்ளிட்ட அனைத்து விதமான ஆவணங்களையும் எழுதி கொடுக்கும் அனைத்து விதமான அதிகாரங்களையும் கொடுத்து பொதுவாக எழுதிக் கொடுக்கும் அதிகார ஆவணம் பொது அதிகார ஆவணம் எனப்படும்.
சிறப்பு அதிகார ஆவணம்:
தனிநபர் மற்றும் நபர்களின் பெயரிலோ அல்லது நிறுவனத்தின் பெயரிலோ உள்ள சொத்துக்களை ஒரு குறிப்பிட்ட செயலை மாத்திரம் செய்வதற்கு (உதாரணத்திற்கு பராமரிப்பு செய்வதற்கு அல்லது வாடகையை வசூல் செய்வதற்கு, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதற்கு என வைத்துக்கொள்ளலாம்) ஒரு அதிகார முகவரை நியமித்து எழுதிக்கொடுக்கும் ஆவணம் சிறப்பு அதிகார ஆவணம் எனப்படும்.
சமாதான பத்திரம்:
இரு நபர்களுக்குள் சொத்து சம்பந்தமாக ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள், தாவா, எல்லைப் பிரச்சனை, வழி பிரச்சனை, வாய்க்கால் பிரச்சனை, வாய்த்தகராறு போன்றவற்றால் ஏற்பட்டுள்ள வழக்குகள் மற்றும் பிரச்சனைகளுக்கு நீதிமன்றத்துக்கு வெளியே பேசி சுமூகமாக சமாதானம் பேசி அவர்களுக்குள் தீர்வினை ஏற்படுத்தும் வகையில் எழுதிக் கொள்ளும் பத்திரம் சமாதான பத்திரம் எனப்படும்.
சம்மத பத்திரம்:
சொத்து சம்பந்தமாக விற்பவர்களின் வாரிசுகளுக்குள் ஏதாவது கையொப்பம் விடுப்பட்டு இருந்தால், அல்லது துணை ஆவணங்களோ, உரிமைகளோ, பின் தொடர்ச்சியோ, வாரிசுரிமை பிரச்சனைகளோ ஏற்பட்டிருந்தால் அதனை சரி செய்யும் வகையில், தங்களின் முன்னோர்கள் விற்பனை செய்தவற்றை சம்மதம் தெரிவித்து எந்தவிதமான பிரதிபலனையும் பெறாமல் எழுதி கொடுக்கும் ஆவணம் சம்பந்த பத்திரம் எனப்படும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications