"கிழ சிங்கம்".. ஸ்பாட்டுக்கே வந்த பாஜக.. பலே ப்ளான்.. திமிறும் அதிமுக.. "அவங்க" ஒன்னு சேரப்போறாங்களா
சென்னை: மெகா கூட்டணி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பலமுறை கூறியிருந்த நிலையில், எந்தெந்த கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி என்று இதுவரை உறுதியாகவில்லை. அதேசமயம், பாஜக என்ன செய்ய போகிறது? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் விவகாரத்தில் தொடர் பிடிவாதம் பிடித்து வருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.. ஒன்றுபட்ட அதிமுகவை விரும்பும் பாஜகவோ, எடப்பாடியை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாத சூழலில் உள்ளதாக தெரிகிறது.

திமுக பாமக: திமுகவைவிட அதிக வாக்கு வங்கியை பெற்றுள்ள அதிமுகவை இழக்க மனசில்லாத பாஜகவோ, ஒருங்கிணைந்த அதிமுக என்ற விஷயத்தை லேசில் விடாது என்றும், எப்படியும் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி தரும் வேலையை விரைவில் ஆரம்பித்து விடும் என்றும் அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர்.
எதிர்பார்த்தபடியே, பாஜகவின் "காய்நகர்த்தல்" அதிமுகவிடம் ஆரம்பமாகி உள்ளதாக சொல்கிறார்கள். இதன் முதல்படியாக, தென்மாவட்டங்களில் பாஜக மேலிடம் தரப்பில் ஒரு சர்வே நடத்தப்பட்டுள்ளதாம்..
பறந்த ரிப்போர்ட்: அதாவது,தேனி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, குமரி, நெல்லை போன்ற மாவட்டங்களில் திமுகவுக்கு இருக்கும் செல்வாக்கு என்ன? எடப்பாடி மற்றும் ஓபிஎஸ், அமமுக, பாமகவுக்கான செல்வாக்குகள் என்ன? களநிலவரம் தற்சமயம் எப்படி உள்ளது? என்பது குறித்தெல்லாம் ஆய்வுகள் நடத்தப்பட்டு, அது சம்பந்தமான ரிப்போர்ட் மேலிடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாம்.
குறிப்பாக, ராமநாதபுரம், தென்காசி,நெல்லை, கன்னியாகுமரி போன்ற தொகுதிகளில் கடந்த ஒருவருட காலத்துக்கு மேலாகவே பாஜக களப்பணியில் இறங்கி உள்ளதால், தற்சமயம் களநிலவரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டதாம். அப்போது, தென்மண்டலங்களில் திமுகவின் கை பல்வேறு மாவட்டங்களில் ஓங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
மூத்த தலைவர்கள்: நெல்லையை பொறுத்தவரை நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரியை பொறுத்தவரை பொன்.ராதா என மூத்த தலைவர்கள், தங்களது தொகுதிப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தபோதிலும், திமுக -காங்கிரஸ் செல்வாக்கு சற்று உயர்ந்துள்ளதாகவும், அதிமுக ஒன்றிணையாமல் போனால் தென்மண்டலங்களில் சறுக்கல்களை சந்திக்க வேண்டி வரும் என்றும் டெல்லிக்கு சொல்லப்பட்டதாம்.
இதற்கான வியூகத்தைதான், மேலிட பாஜக, இனி எடுக்க போகிறது என்கிறார்கள்.. டிடிவி தினகரன், ஓபிஎஸ் இவர்கள் இருவரையும் தவிர்த்துவிட்டு, வெறும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி மட்டுமே சாத்தியமாகாது என்பதையும், அதிலும், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை போன்ற தொகுதிகளில் தினகரனுக்கான செல்வாக்கு இன்னமும் அப்படியே உள்ளதால், டிடிவி தினகரனை தவிர்த்துவிட்டு, கூட்டணி அமைக்க முடியாது என்பதையும் பாஜக மேலிடம் நன்கு அறிந்தே வைத்துள்ளதாம்.
எடப்பாடி பழனிசாமி: எனவே, அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலும், தென்மண்டலங்களில் ஓபிஎஸ், தினகரனும், கொங்கு மண்டலத்தில் பாமகவும் முக்கியம் என்பதால், ஒருங்கிணைந்த அதிமுக என்ற விஷயத்தை பாஜக, இனிவரும் நாட்களில் எடப்பாடி பழனிசாமியிடம் சற்று அழுத்தமாகவே வலியுறுத்தும் என்கிறார்கள்.
இதைத்தான், நயினார், பொன்.ராதா, வானதி சீனிவாசன் உட்பட பல மூத்த தலைவர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.. பாஜகவின் முன்னாள் நிர்வாகியும், பிரபல நடிகருமான எஸ்வி சேகரும் நேற்றுகூட இதை பற்றிதான் பேசினார்.
செய்தியாளர்களிடம் எஸ்வி சேகர் பேசும்போது, தமிழ்நாடு பாஜக தலைமை சரியான நிலைமையில் இல்லை என்றால் எல்லாம் கீழே ஆடத்தான் செய்யும்.. அவர் ஒரு நாளைக்கு 3 கிலோமீட்டர் நடக்கிறார். அதுவே, அவருக்கு முடியவில்லை. சிங்கம் என்று அவரே சொல்லி கொள்கிறார். ஆனால், நடப்பதை எல்லாம் பார்த்தால் ஏதோ கிழ சிங்கம் ஆன மாதிரி தெரிகிறது நமக்கு.
எஸ்வி சேகர்: அண்ணாமலை என்பது அரசியல் பூஜ்ஜியம். தமிழ்நாட்டில் பொறுத்தவரைக்கும் பாஜவில் குறைந்தது 10 வருடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்தால்தான் பாஜகவின் ஐடியாலஜி தெரியவரும்.. எதுவுமே தெரியாமல் யாரோ ஒருவரை சந்தோஷப்படுத்தி, அந்த நபர் இவரை சந்தோஷப்படுத்தி, திடுக்கென்று இந்த பதவியை கொடுத்திருக்கிறார்கள்.. இதனால், பாஜவுக்கு தான் நஷ்டம் ஏற்படுமே தவிர, அண்ணாமலைக்கு பெரிய லாபம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
டெல்லியில் ஆட்சிக்கு பாஜக வரும், தமிழ்நாட்டினுடைய உதவி இருக்காது. அண்ணாமலை இருக்கின்ற வரையில், தமிழ்நாட்டில் பாஜக ஒரு சீட்டு கூட பெறாது. வாய்ப்பே கிடையாது. ஏனென்றால், அண்ணாமலையை பொருத்தவரைக்கும் அதிமுக கூட்டணி வரக்கூடாது என்பது மாதிரியே அவர் பேசி வருகிறார். அதிமுக கூட்டணிதான் பாஜவிற்கு தமிழ்நாட்டில் பலம்.. அந்த பலத்தை அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும்.
அதிமுக தொண்டர்கள்: அண்ணாமலை இருக்கிற வரைக்கும் அதிமுகவினுடைய ஒரு ஓட்டு கூட பாஜக பக்கம் விழாது. பாஜவில் இருப்பவர்கள் மோடிக்காகவும், அமித்ஷாக்காகவும் அவர்கள் அந்த கூட்டணி தர்மத்தை மதித்தாலும், என்றைக்கு அண்ணாமலை, ஜெயலலிதாவை பற்றி தவறாக பேசினாரோ அதையெல்லாம் அதிமுக தொண்டர்கள் அடிமட்ட தொண்டர்கள் கூட அண்ணாமலையை மன்னிக்க தயாராக இல்லை என்றார்.
எஸ்வி சேகரின் இந்த பேச்சுக்கள் மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சமீபகாலமாகவே, அண்ணாமலை மீதான அதிருப்திகளை எஸ்வி சேகர் வெளிப்படுத்தினாலும்கூட, அதிமுக விஷயத்தில் எஸ்வி சேகர் சொன்னதை பலரும் ஆமோதிக்கிறார்களாம்.

நாளுக்கு நாள், அதிமுக - தமிழக பாஜக தலைவர்களிடையே, வார்த்தை போர்கள் வலுப்பெற்று வரும் நிலையில், இரு கட்சி தொண்டர்களுமே அதிருப்திக்கு ஆளாகி உள்ளதையும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஒருங்கிணைந்த அதிமுக: எனவே, இரு தரப்பிலுமே இணக்கமான போக்கு ஏற்படவேண்டுமானால், பலம்பொருந்திய திமுகவை சமாளிக்க வேண்டுமானால், தமிழக பாஜக தலைமையானது, அதிமுகவுடனான கூட்டணியை அதிகாரப்பூர்வமாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.. அப்படி அறிவித்தால்தான், 2 கட்சி தொண்டர்களும் இணைந்து களத்தில் பணியாற்ற முடியும் என்றும் சொல்கிறார்கள்.
எனினும், இதுவரை அப்படியான சுமூக நிகழ்வு எதுவுமே நடக்கவில்லை என்பதால், மேலிட தலைவர்கள்தான் இந்த விஷயத்தை விரைவில் சரிசெய்வார்கள் என்றும், "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" என்பதை நிச்சயம் அதிமுக தரப்பில் வலியுறுத்துவார்கள் என்றும் நம்பப்படுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications