அதிமுக ஒன்றிணைந்தால் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்பீர்களா? முகம் மாறிய ஓபிஸ்! கொடுத்த பதில் இதுதான்
சென்னை: மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர் செல்வத்திடம், அதிமுக ஒன்றிணைந்தால் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ஓ பன்னீர் செல்வம் அளித்த பதிலை இங்கு பார்க்கலாம்.
ஓ பன்னீர் செல்வம் இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு அவர் கூறிய பதிலை பார்க்கலாம்.

வரும் 2026 சட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொண்டால் தானே அதிமுகவுக்கு சாதகமாக வரும். இல்லையென்றால் அது திமுகவுக்கு சாதகமாகிவிடும் தானே என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த ஓ பன்னீர் செல்வம் உங்கள் கருத்து வரவேற்கத்தக்கது. அது தான் நடக்கும். ஒன்றிணைந்தால் தான் வரும் தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்கும். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பது தான் அனைத்து தொண்டர்களின் எண்ணம். அனைவரும் ஒன்றிணைந்தால் தான் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் எண்ணம் நிறைவேறும்.
ஒன்றிணையும் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி ஏன் மாறுபடுகிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி அந்த கேள்வியை அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.
செங்கோட்டையனின் எடுத்த முயற்சி வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு அவரது முயற்சி வெற்றி பெறும் என்றார். டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு நிபந்தனை விதித்தது போல் நீங்களும் எதாவது முடிவு எடுப்பீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஓ பன்னீர் செல்வம், "அரசியலில் எதிரியும் இல்லை.. நண்பனும் இல்லை.. எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்" என்றார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி உங்களை அதிமுகவில் ஒன்றிணைய ஏற்றுக்கொண்டால், அதிமுக ஒன்றிணைந்தால் நீங்கள் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்றுக்கொள்வீர்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஓ பன்னீர் செல்வம், "பல பிரச்சனைகளை பேச வேண்டியிருக்கு. நீதிமன்றத்தில் பல வழக்குகள் இருக்கு. அந்த வழக்குகள் நிறைவடையும் போது என்னுடைய கருத்தை சொல்கிறேன்" என்றார்.
அதிமுகவை துண்டாக்கி கொண்டாடி பாஜக மகிழ்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஓ பன்னீர் செல்வம், "நான் அந்த மாதிரி எண்ணவில்லை" என்று கூறினார்.
ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள டிடிவி தினகரன், எடப்பாடியை முதல்வர் வேட்பாளாராக அறிவித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அவரை தவிர யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினாலும் ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு வர தயார் என்று நிபந்தனை விதித்துள்ளார். இந்த சூழலில்தான், ஓ பன்னீர் செல்வமும் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினால் ஏற்றுக்கொள்வீர்களா? என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்துள்ளார்.
-
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications