Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு கிராம் தங்கம் ரூபாய் 16,000-ஐ தாண்டுதா? நகைக்கடை வட்டாரத்தில் பேசப்படும் அந்த ஒரு ரகசியம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் நகைக்கடைகளில் தற்போது ஒருவிதமான அமைதியான பரபரப்பு நிலவுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முதல் கோயம்புத்தூர் வரை நகை சந்தை மந்தநிலையை நோக்கி நகர்கிறது. சர்வதேச பொருளாதார மாற்றங்கள் இந்த விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றன. நடுத்தர வர்க்கத்தின் தங்கக் கனவுகள் கேள்விக்குறியாகும் நிலை உருவாகியுள்ளது. இவைகளை இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் இப்போது ஒரே பேச்சுதான், அது தங்கத்தின் விலை உயர்வு. நேற்றைய விலை இன்று இல்லை, இன்றைய விலை நாளை இருக்குமா என்பது தெரியவில்லை. அந்த அளவிற்குத் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது, பாமர மக்கள் முதல் பெரிய தொழிலதிபர்கள் வரை அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.

gold market gold price forecast investment news jewellery business commodity trends India economy

சர்வதேச சந்தையில் நிலவும் சில முக்கிய மாற்றங்களே இந்த விலையேற்றத்திற்குப் பின்னால் இருக்கும் ரகசியமாகும். உலக நாடுகளுக்கு இடையே நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் பணவீக்கம் காரணமாக, பெரும் முதலீட்டாளர்கள் அனைவரும் தங்களது பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கத் தங்கத்தை வாங்கிச் குவிக்கின்றனர்.

ஒரு கிராம் 16000 ரூபாய் தாண்டுமா?

சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹15,382 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹14,100 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹11,760 ஆகவும் உள்ளது... இந்த அதிரடி விலையேற்றத்தால், நடுத்தர வர்க்க மக்களின் நிலைதான் மிகவும் பரிதாபமாக உள்ளது. குறிப்பாக, வரப்போகும் முகூர்த்தக் காலங்களில் தங்களது வீட்டுப் பிள்ளைகளின் திருமணத்திற்காக நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பெற்றோர்கள், இப்போதைய விலையைக் கண்டு நிலைகுலைந்து போயுள்ளனர்.

ஒரு கிராமின் விலை ஒரு நபர் ஒரு வாரம் உழைக்கும் ஊதியத்திற்கு நிகராக உயர்ந்து வருவது, நகை வாங்குவதை ஒரு கனவாகவே மாற்றிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்தை வல்லுநர்கள் மிகக் கவனமாக ஒரு எச்சரிக்கையை முன்வைக்கிறார்கள்.. அதாவது, சர்வதேச சூழல் இப்படியே நீடித்தால், ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 16,0000 ரூபாய் என்ற நிலையைத் தொடக்கூடும் என அஞ்சப்படுகிறது.

நகைக்கடை வியாபாரிகள்

இந்த விலை உயர்வு நகைக்கடை வியாபாரிகளுக்கும் பெரும் தலைவலியைத் தந்துள்ளது. கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது. இதனால், "இப்போதே பணத்தைக் கட்டி வையுங்கள், பிறகு அதே விலைக்கு நகை வாங்கிக்கொள்ளுங்கள்" என்ற கவர்ச்சிகரமான முன்பதிவுத் திட்டங்களை வியாபாரிகள் அறிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆனால், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் அவதிப்படும் மக்களுக்கு, தங்கத்தில் முதலீடு செய்வது என்பது பெரும் சுமையாகவே இருக்கிறது. பழைய நகைகளைக் கொடுத்துப் புதிய நகைகளை வாங்க நினைப்பவர்களுக்கும், செய்கூலி மற்றும் சேதாரம் என்ற பெயரில் கழிக்கப்படும் தொகை பெரும் ஏமாற்றத்தையே தருகிறது.

தங்க பத்திரம் முதலீடு

இன்னொருபுறம், காகித வடிவில் தங்கம் வாங்கியவர்கள் அல்லது வங்கிகளில் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்தவர்களுக்கு இது கொண்டாட்டமான நேரமாகும். அவர்கள் கையில் நகை இல்லாவிட்டாலும், சந்தை விலை ஏற ஏற அவர்களின் முதலீட்டு மதிப்பு எகிறிக்கொண்டே போகிறது.

ஆனால், சாதாரண ஏழை மக்களுக்கு இது வெறும் எண்கள் மட்டுமே. தங்கம் என்பது வெறும் ஆடம்பரப் பொருள் அல்ல, அது ஆபத்து காலத்தில் உதவும் ஒரு அவசரக்கால நண்பன் என்று நம்பும் மக்களுக்கு, இந்த விலையேற்றம் பெரும் அடியாக விழுந்துள்ளது. வரும் வாரங்களில் விலை குறையுமா அல்லது இன்னும் உச்சத்திற்குச் செல்லுமா என்பதைப் பொறுத்தே பல குடும்பங்களின் சுபகாரியங்கள் முடிவாகும் சூழல் உருவாகியுள்ளது...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+