ஜெயலலிதா நின்ற அதே இடத்தில் "பன்னீர்!" உச்சகட்ட கோபத்தில் இபிஎஸ்.. கட்சியிலிருந்தும் ஓபிஎஸ் நீக்கம்!
சென்னை : சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ள நிலையில் கட்சி அலுவலகத்தை கைப்பற்றியுள்ள ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா நின்ற அதே இடத்தில் அதிமுக கொடியுடன் தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்தார். இந்த நிலையில் தான் கட்சி அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி அவரைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டுமென மூத்த நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டத்தில் போர் கொடி தூக்கியதால் தான் எடப்பாடி பழனிசாமி இந்த அதிரடி முடிவினை எடுத்ததாக கூறப்படுகிறது.
Recommended Video
எவ்வளவோ சட்ட போராட்டங்கள் நெருக்கடிகள் மோதல்கள் என அடுத்தடுத்து திருப்பங்களை சந்தித்து வந்த அதிமுகவின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் இன்று திட்டமிட்டபடி சென்னை வானகரத்தில் தொடங்கி நடைபெற்றது.
முன்னதாக இறுதி நம்பிக்கையாக பொதுக்குழுவை தடுத்து நிறுத்த சென்னை உயர்நீதிமன்றத்தை நம்பி இருந்தார் ஓபிஎஸ். ஆனால் தீர்ப்பு எப்படியும் பொதுக்குழுவுக்கு சாதகமாக வரும் என்பதை அறிந்திருந்தே கடந்த முறை போல அவமானப்பட வேண்டாம் என இம்முறை பொதுக்குழுவுக்கு செல்லவில்லை...

அதிமுக பொதுக்குழு
காலையில் தனது வீட்டிலிருந்து புறப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் திடீரென பொதுக்குழு செல்லும் முடிவை கைவிட்டு அதிமுக அலுவலகம் நோக்கி சென்றார். இது முன்னரே திட்டமிடப்பட்டது தான் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் இருந்து சென்ற முறை காரில் சென்ற எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது பிரச்சார வாகனத்தில் புறப்பட்டார் வழிநெடுகிலும் பலத்த பாதுகாப்புடன் அதிமுக தொண்டர்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதிமுக பொதுச் செயலாளர்
பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு 100% உறுதியாகி உள்ளது. மேலும் கட்சி விதிகளின்படி தற்போது இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படும் எடப்பாடி பழனிச்சாமி பின்னர் தேர்தல் மூலம் அதிமுகவின் பொது செயலாளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதுதான் விதி. இந்த நிலையில் தான் அதிமுக அலுவலகம் செல்லும் ஓபிஎஸ்ஐ தடுத்து நிறுத்த சென்னையைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் ஒருவரின் ஆதரவாளர்கள் அங்கு அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்தனர்.

ஜெயலலிதா நின்ற இடம்
சாலையில் நாற்காலிகளை போட்டு அவர்கள் தடைகளை ஏற்படுத்திய நிலையில் முன்னாள் வந்த ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு ரத்தக் களறியாக அந்த இடம் காட்சியளித்தது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதால் பலருக்கு ரத்த காயங்கள் ஏற்பட்டது. இருந்தும் ஓபிஎஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்தார். கட்சி அலுவலக கதவு உடைக்கப்பட்டு ஓபிஎஸ் உள்ளே சென்ற நிலையில் ஜெயலலிதா வழக்கமாக நின்று தொண்டர்களை பார்த்து கையசைக்கும் பால்கனிக்கு சென்றார் ஓபிஎஸ். அங்கு அதிமுக கொடியுடன் தொண்டர்களை பார்த்து பார்த்து உற்சாகமாக கையசைத்தார்.

கே.பி.முனுசாமி புகார்
இந்த நிலையில் தான் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளரும் முன்னதாக ஓபிஎஸ் கூடாரத்தில் இருந்த வருமான கே.பி.முனுசாமி அதிமுக விதிகளை மீறி ஓபிஎஸ் வன்முறையை கட்டவிழ்த்து இருக்கிறார் என்ற குற்றச்சாட்டினை முன் வைத்தார். மேலும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஏற்கனவே நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த 16 தீர்மானங்களோடு சில சிறப்பு தீர்மானங்களும் நிறைவேற்றலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

கட்சியிலிருந்து நீக்கம்
குறிப்பாக தற்போது வரும் தகவல்களின்படி அதிமுக பொது குழு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் ஓ.பன்னீர் செல்வத்தை பொருளாளர் பதவியில் இருந்தும் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என ஆவேசமாக குரல் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக கட்சி அலுவலகத்தை கதவை உடைத்து சென்றது பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை ஒட்டுமொத்தமாக கட்சியில் இருந்து நீக்க வேண்டுமென குரல் எழுப்பினர். இதனையடுத்தே ஓபிஎஸ்ஸை நீக்கும் முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார்.
-
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications