சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்ப்ளூயன்சா காய்ச்சல்.. தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: இன்ப்ளூயன்சா காய்ச்சல் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக இன்ப்ளூயன்சா காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் தட்பவெப்பநிலை காரணமாக ஜூன் மாதம் இந்த காய்ச்சல் தொடங்கும்.

தற்போது தமிழ்நாட்டில் மாணவ, மாணவியர் இடையே இன்புளுயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. முக்கியமாக 1-5ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் இந்த காய்ச்சல் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பாஞ்சாகுளம் விவகாரம்..பள்ளிகளில் சாதிய பாகுபாடு..நடவடிக்கை பாயும்..அமைச்சர் அன்பில் மகேஷ் வார்னிங் பாஞ்சாகுளம் விவகாரம்..பள்ளிகளில் சாதிய பாகுபாடு..நடவடிக்கை பாயும்..அமைச்சர் அன்பில் மகேஷ் வார்னிங்

காய்ச்சல்

காய்ச்சல்

இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் குணம் கொண்டது. கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் இந்த காய்ச்சல் அதிகமாக பரவியது. கடந்த 12 நாட்களாக பள்ளி செல்லும் 50 சதவிகித குழந்தைகளுக்கு இந்த காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. 25ம் தேதி வரை அங்கு பள்ளிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது இன்புளுயன்சா ஏற்பட்ட நபருடன் நெருக்கமாக இருந்தால் அவருக்கு இந்த காய்ச்சல் ஏற்படும்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

சுற்றுசூழல் சுத்தமாக இல்லாமல் இருப்பது, குளிர் பானங்கள் சாப்பிடுவது ஆகியவை காய்ச்சலுக்கு வழிவகுத்து பின்னர் இன்புளுயன்சா காய்ச்சல் ஏற்படவும் காரணமாக இருக்கும். தற்போது தமிழ்நாட்டிலும் இந்த காய்ச்சல் பரவுகிறது. பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளில் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது

பள்ளிக்கு

பள்ளிக்கு

இந்த நிலையில் இன்ப்ளூயன்சா காய்ச்சல் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்த விவகாரத்தில் கூட்டு முடிவு எடுத்து வருகிறோம். முதல்வர் அலுவலகத்தில் இருந்தும், சுகாதாரத்துறை அலுவலகத்தில் இருந்தும் ஆலோசனைகள் செய்யப்படும். இவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசுவார்கள். வல்லுனர்கள் அமர்ந்து பேசி இதில் முடிவு எடுப்பார்கள். மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம், அவர்கள் ஒன்றாக படிக்கலாம், இவ்வளவு இடைவெளிவிட்டு அவர்கள் அமரலாம் என சுகாதாரத்துறை சார்பாக எங்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.

ஆலோசனை

ஆலோசனை

அந்த ஆலோசனைகளை கேட்டு, அதை பள்ளிக்கல்வித்துறைக்கு ஏற்றபடி நாங்கள் செயல்படுத்துவோம். கடந்த காலங்களில் இப்படித்தான் செய்யப்பட்டு வந்தது. நோய் பரவும் காலங்களில் சுகாதாரத்துறை சார்பாக ஆலோசனைகள் வழங்கப்படும். இப்போது முதல்வர் அலுவலகம் - சுகாதாரத்துறை அலுவலகத்தில் இருந்து வரக்கூடிய அறிவுரைகள் அடிப்படையில் நாங்கள் முடிவுகளை எடுப்போம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

English summary
Will Tamil Nadu schools get leaves due of influenza cases? Minister Anbil Mahesh answers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X