Re-Election Public Opinion: தமிழ்நாட்டில் மறு தேர்தல் நடத்தப்படுமா? பொதுமக்கள் சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் ஆணையத்தில் குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், தேர்தல் முறையாக நத்தப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் மறுதேர்தல் நடத்தப்படுமா? மக்களின் மனநிலை என்ன? என அறிய நமது இந்தியா சார்பில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. அது பற்றி இங்கே..

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது மற்ற 2 ஆணையர்கள் அதிருப்தி தெரிவித்துள்ள நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. SIR பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாகச் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மறுதேர்தல் நடத்தவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின், சிவசேனா உத்தவ் தாக்கரே, திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர்.

vijay

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியின் போது தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக நடந்து கொண்டதாக மற்ற தேர்தல் ஆணையர்கள் குற்றம்சாட்டி உள்ளதையடுத்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கைது செய்யவேண்டும் என்றும், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

மிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்க மாநிலங்களில் ஏற்கெனவே நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களை ரத்து செய்துவிட்டு, வாக்குச்சீட்டு முறையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் மறு தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து நமது ஒன் இந்தியா தமிழ் சார்பில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. பலரும், மறுதேர்தல் நடத்தப்பட்டால் மாற்றம் இருக்கும் எனக் கருத்து தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் மீதும் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

நம்மிடம் பேசிய ஒருவர், "இப்போது இருக்கும் தேர்தல் ஆணையர் யாரை ஆதரிக்கிறாரோ அவர் தான் ஜெயிப்பார் என்ற நிலை இருக்கிறது. தேர்தல் ஆணையம் சீர்படுத்தப்பட வேண்டும். மறுதேர்தல் நடத்தப்பட்டால் நல்லதுதான்.

ஊழல் ஆட்சி என்று விமர்சித்துவிட்டு, முந்தைய ஊழல்வாதிகளை வைத்துத்தான் ஆட்சி நடக்கிறது. இடைத்தேர்தலில் நிற்கும் 2 பேருக்கும் எதிர்ப்பு பலமாக இருக்கிறது. பணம் வாங்கிக்கொண்டு கட்சி மாறிவிட்டதாக மக்களே கேட்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.

இளைஞர் ஒருவர் பேசுகையில், "மறுதேர்தல் நடத்த வேண்டும் என நிறைய பேர் யோசிக்கக்கூடிய நிலை தான் இருக்கிறது. மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டால் ரிசல்ட் ட்விஸ்ட் ஆக இருக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு நபர் பேசும்போது, "மீண்டும் தேர்தல் நடத்தலாம். நடத்தினால் நாடு நன்றாக இருக்கும். இங்கிலாந்து போன்ற நாடுகளிலேயே இன்னும் வாக்குச்சீட்டு முறை தான் இருக்கிறது. இங்கு இவ்வளவு குளறுபடிகள் நடந்தும், இயந்திர வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது" என்றார்.

மற்றொருவர் நம்மிடம் பேசும்போத், "மறு தேர்தல் நடத்தப்பட்டால் நம் வரிப்பணம் தான் செலவழிக்கப்படும். என்ன நடந்தாலும் நம் தலையில் தான் வந்து விடியும்." எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+