அண்ணே தேர்தலில் நீங்க மட்டும் போட்டியிட வேண்டாம்.. விஜய்க்கு ஆலோசனை சொன்ன டீம்? என்ன காரணம்?
சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் நேரடியாகத் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவரது நெருக்கமான ஆலோசகர்கள் வலியுறுத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் பிம்பத்தையும், விஜய்யின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு இந்த 'ராஜதந்திர' நகர்வு குறித்து கட்சி மேலிடம் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

தோல்வி பயமும் பொறுப்பேற்பும்
விஜய்யின் அரசியல் வருகை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் நேரடியாக ஒரு தொகுதியில் போட்டியிட்டு, ஒருவேளை அங்கு பின்னடைவு ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த கட்சியின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்று அவரது ஆலோசகர்கள் கருதுகின்றனர். அது மட்டுமன்றி அவர் போட்டியிட்டு.. மொத்தமாக கட்சி பெரும்பான்மை பெறாமல் போனாலும் அவருக்கு சிக்கல் ஏற்படும். . தலைவர் நேரடியாகப் போட்டியிடும் நேரத்தில் கட்சி மொத்தமாக தோற்றால், அந்தத் தோல்வி தனிப்பட்ட முறையில் அவர் மீது சுமத்தப்படும். இது அவரது அரசியல் மற்றும் திரைப்பயணம் ஆகிய இரண்டிற்கும் பின்னடைவாக அமையும்" என்று கட்சி நிர்வாகிகள் மட்டத்தில் பேசப்படுகிறது.
மாறாக, அவர் போட்டியிடாமல் ஒரு 'தளபதி'யாக மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தில் மட்டும் கவனம் செலுத்தினால், தேர்தல் முடிவுகள் சாதகமாக அமையாத பட்சத்திலும் அது கட்சிக்கு சாதகமாக இருக்கும். ஒருவேளை தேர்தலில் தோற்றாலும்.. பெரிதாக அதை பற்றிய பேச்சுக்கள் இருக்காது. இது அடுத்தடுத்த தேர்தல்களுக்கு அவரது செல்வாக்கைச் சிதையாமல் பாதுகாக்கும் என்பது ஆலோசகர்களின் வாதமாக உள்ளது.
பிரசாந்த் கிஷோர் முன்வைத்த 'பீகார் மாடல்'
இந்த முடிவுக்கு முன்னுதாரணமாகப் பீகாரில் பிரசாந்த் கிஷோர் (PK) கையாண்ட வியூகம் சுட்டிக்காட்டப்படுகிறது. பீகாரில் தனது 'ஜன சுராஜ்' இயக்கத்தை வழிநடத்தும் கிஷோர், அம்மாநிலத் தேர்தலில் தான் நேரடியாகப் போட்டியிடப் போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தியிருந்தார். தன்னை ஒரு வேட்பாளராகச் சுருக்கிக் கொள்ளாமல், மாநிலம் தழுவிய ஒருங்கிணைப்பாளராகவும் பிரச்சாரகராகவும் அவர் செயல்பட்டார்.
அதே பாணியை விஜய்யும் பின்பற்றினால் நன்றாக இருக்கும் என்று அவருக்கு நெருக்கமான சிலர் அறிவுரை கூறி உள்ளார்களாம். இதனால் அவருக்கு கிடைக்கும் நன்மைகள்:
234 தொகுதிகளிலும் கவனம்: ஒரு குறிப்பிட்ட தொகுதியில் மட்டும் முடங்கிவிடாமல், அனைத்துத் தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் செய்ய முடியும்.
பிம்பப்: தேர்தல் தோல்வி அடைந்தாலும், அது 'கட்சி வளர்ந்து வரும் கட்டம்' என்று கடந்து செல்ல முடியும்; விஜய்யின் தனிப்பட்ட வெற்றி/தோல்வியாக அது மாறாது.
அமைப்பு ரீதியான வளர்ச்சி: கட்சி ஒரு தனிநபர் சார்ந்த இயக்கமாகத் தெரியாமல், ஒரு வலுவான அமைப்பாகத் தோற்றமளிக்க இது உதவும்.
தலைமையின் முடிவு என்ன?
இருப்பினும், "மக்களுக்காகக் களத்தில் இறங்கும் தலைவன் நேரடியாகப் போட்டியிட வேண்டும்" என்ற எதிர்பார்ப்பு அவரது தொண்டர்களிடையே உள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற திரையுலகப் பின்னணி கொண்ட தலைவர்கள் நேரடியாகப் போட்டியிட்டு வென்ற வரலாற்றை மாற்ற நினைப்பது ரிஸ்க்கா னது என்றும் ஒரு தரப்பினர் எச்சரிக்கின்றனர்.
தற்போது தொகுதி வாரியாகப் பொறுப்பாளர்களை நியமிப்பதிலும், பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவதிலும் தீவிரம் காட்டி வரும் விஜய், தான் போட்டியிடுவது குறித்து இறுதி முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. கட்சியின் மாநில மாநாட்டிற்குப் பிறகு இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications